டிசம்பர் 01, 2024 • Makkal Adhikaram
எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர்! அடுத்தது ஜெயலலிதா! அடுத்தது கருணாநிதி!
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சமூக நோக்கத்தை விட்டுவிட்டு வியாபார அரசியலை ஆரம்பித்து கோடிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிதான் இன்று அதிமுக,திமுக பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள் . இவர்களுடைய நிலைமை என்ன? இவர்கள் முழுக்க, முழுக்க கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை நம்பி தான் அரசியல் செய்கிறார்கள்.
இப்போது இவர்களுடைய வாக்கு வங்கி எல்லாம் பணம் கொடுக்காமல் ஓட்டு இல்லை. காசு வாங்கிக் கொண்டு தான் ஓட்டு போடுவான். இந்த இரண்டு கட்சிகளுக்கும் வாக்களிப்பவர்கள் ஆடு ,மாடுகளை சந்தையில் வாங்குவது போல் இவர்கள் காசு கொடுத்து பிரித்துக் கொள்வார்கள். இப்படி பிரிக்கின்ற வாக்குகள் இதில் யார்? அதிக பணம் கொடுக்கிறார்களோ,அவர்களுக்கு வாக்களிப்பார்கள். இப்படி குறிப்பிட்டு இதை சதவீத மக்கள் பணம் கொடுத்தால் மட்டும்தான் ஓட்டு என்று வாக்களித்து வருகின்றனர்.
காரணம் அவர்களுக்கு அரசியல் தெரியாது. எவன் வந்தாலும் கொள்ளை அடிக்கப் போகிறான். எவன் வந்தாலும்,நான் இந்த ஆடு, மாடு தான் மேய்க்க போகிறேன். எவன் வந்தாலும் நான் ஒன்னும் பெரிய ஆளாக ஆகப்போவதில்லை. அதனால் யார்? பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு எங்கள் ஓட்டு. ஒவ்வொரு கட்சியிலும் அதற்கு கட்சி புரோக்கர்கள் இருப்பார்கள் .அவர்கள் சென்று இவர்களை அணுகி, பணத்தைக் கொடுப்பார்கள். இவர்கள் ஓட்டு போடுவார்கள்.
ஓட்டுக்கு அர்த்தம் தெரியாத கூட்டத்திற்கு, ஓட்டுரிமை கொடுத்தது மிகப்பெரிய தவறு. இதுதான் இப்படி என்றால், முஸ்லிம் ,கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள், அவர்களுடைய சர்ச்சில் யாருக்கு ஓட்டு போடலாம்? என்று முடிவு செய்து சொல்கிறார்களோ ,அவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள். முஸ்லிம்களில் தர்காக்களில் என்ன முடிவோ அப்படித்தான் அவர்களும் வாக்களிக்கிறார்கள்.
இதனால் தான் தமிழ்நாட்டில் அரசியல் என்பது அடிப்படை அறிவு இல்லாத போலி அரசியல்வாதிகளிடம் ஜாதியும் ,மதமும் வியாபாரம் செய்து கொண்டு ஊழலும், கொள்ளையும் தொடர்கிறது. இதை இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இதுதான் அரசியல் என்று அவர்களுக்கு ஆதரவாக அவர்களிடம் பணம், விளம்பரம் பெற்றுக்கொண்டு இந்த வியாபார அரசியலை ஊக்கி வைக்கிறார்கள். அது மட்டுமல்ல,
சோசியல் மீடியாக்கள், youtube சேனல்கள், இந்த கட்சியின் உடைய ஐடி வீங்குகள் இவை அத்தனையும் பணத்திற்காக பேசிக்கொண்டு, இந்த வியாபார அரசியலை மக்களிடம் முன் வைக்கிறார்கள். சமூக அரசியலைப் பற்றி பேசுவதில்லை. ஒவ்வொரு கட்சியும் மக்களுக்காக என்ன செய்திருக்கிறது? என்பதை ஒருவரும் பேசுவதில்லை. மக்களின் கோரிக்கைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? எதைப் பற்றியும் பேச மாட்டார்கள்.
ஏன்? இத்தனை ஆண்டுகளாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் சமூகநலன் பத்திரிகைகளுக்கான பிரச்சனைகள், கோரிக்கைகள் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சொல்லியும் ,இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டில் நூறு அரசியல் கட்சிகளுக்கு மேல் உள்ளது. ஆனால் ஒன்று கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. அப்படி என்றால் இவர்களுடைய சுயநலத்திற்காக அரசியல் கட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அரசியல் கட்சியில் இருப்பவர்களும், தங்களைப் பொருளாதாரத்தில் உயர்த்திக் கொள்ளவே நிர்வாகியாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். சமூக நலன் என்பது இன்று எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. ஒரு ரூபாய் செலவு செய்தால், அதற்கு ஆயிரம் ரூபாய் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்போடு தான் இன்றைய அரசியல் கட்சிகள் இருந்து வருகிறார்கள். இதை ஏன் இந்த நிலை ஏற்பட்டது?
தேர்தல் என்றால் அரசியல் கட்சிகளின் கருப்பு பணத்திற்கு தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையம் அர்த்தமற்ற தேர்தல் !
மக்களுக்கு அரசியல் என்றால் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகின்ற தேர்தல் களமாக மாறிவிட்டது. ஒருவருடைய சேவையைப் பார்த்து வாக்களிக்க வேண்டிய மக்கள், பணத்தைப் பார்த்து வாக்களிக்கிறார்கள். செயலைப் பார்த்து வாக்களிக்காமல், பேச்சை நம்பி வாக்களித்து ஏமாறுகிறார்கள். இது எல்லாம் மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது. இதற்கு தேர்தல் ஆணையம் தான் மிகப்பெரிய பொறுப்பேற்க வேண்டும்.
கடமைக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்ற பலமுறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் எழுதி இருக்கிறேன். ஒரு பக்கம் ஊழல்வாதிகள் மீண்டும் மீண்டும் தேர்தலில் நிற்கிறார்கள். அவர்களும் அமைச்சராகிறார்கள். மீண்டும் ஊழல் செய்து அவர்களுடைய வழக்கு நீதிமன்றத்திற்கு செல்கிறது. ஒரு நீதிபதி ஊழலுக்கு தண்டனை கொடுக்கிறார் .இன்னொரு நீதிபதி அவர்களை விடுவிக்கிறார். இந்த நிலை எல்லாம் மாற வேண்டும். இதற்கு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அவசியம் தேவை.
காசு வாங்கி வாக்களிக்கும் மக்களை அல்லது காசு கொடுத்து வெற்றி பெறும் வேட்பாளர்களை அவர்களுடைய வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும். காசு வாங்கி வாக்களிக்கின்ற மக்களுக்கு அரசின் சலுகை எதுவும் கிடையாது என்று அறிவிக்க வேண்டும். இது தவிர, தேர்தல் நேரத்தில் பொறுப்பற்ற பேச்சுக்களை பேசுபவர்கள் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் விரும்பும் மாற்றத்தை தமிழகத்தில் இன்றைய அரசியல் கட்சி! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயால் கொடுக்க முடியுமா ? அல்லது பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலையால் கொடுக்க முடியுமா? இந்த மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள், அரசியல் தெரிந்தவர்கள் .அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் . தற்போதைய பிஜேபி நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி, திமுகவுடன் கூட்டணி செய்து கொண்டு பத்தோடு பதினொன்றாக கொடுப்பதை வாங்கிக் கொண்டு, வண்டி ஓட்டலாம் என்று நினைப்பவர்கள். அந்த கட்சியில் அண்ணாமலையை ஒரு வித்தியாசமாக பார்க்கிறேன்.
இவரும் காவல்துறையின் வாசனை எல்லாம் விட்டு,விட்டு, ஒரு அரசியல் தலைவர் என்றால் எது தெரியுமா? ஒருவருக்கு சொன்ன வாக்கை காப்பாற்றுவது தான் ,அரசியல் தலைவன் .அப்படிப்பட்ட தலைவன் என்ற தகுதிக்கு அரசியல் கட்சிகளில் தேட வேண்டி இருக்கிறது . ஒரு சில விஷயங்களை பார்க்கும் போது, இப்போது விஜயை ஒரு 50 சதவீதம் அதில் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அவருக்கு அரசியல் அனுபவம் குறைவு என்றாலும், மனசாட்சி உள்ள மனிதராக ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், காலையில் ஒன்று பேசிவிட்டு, மாலையில் ஒன்று பேசிவிட்டு,நேற்று ஒன்று பேசிவிட்டு, நாளை ஒன்று பேசிவிட்டு, நானும் அரசியல் தலைவன் என்று பேசுவதில் அர்த்தம் இல்லை. இந்த ஆடு, மாடு கூட்டங்களைப் போல் உள்ள மக்களுக்கு தான் அவர்களுக்கு அது பொருந்தும். சிந்திக்கும் மக்கள், அரசியலை படிக்கும் மக்கள், அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.