பக்தர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழும் சித்தர்களில் வழி காட்டியாக விளங்குபவர் யோகி ரகோத்தமன் சுவாமிகள்.

ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

பிப்ரவரி 27, 2025 • Makkal Adhikaram

மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தர்கள், யோகிகள், ஆன்மீக பக்தர்கள், பரம்பொருளாகிய சிவனை வழிபட பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ஒவ்வொருவரும் அவரவர் எந்தெந்த முறையில் சிவனை வழிபட்டு சிவன் அருள் பெற வழிபாடு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்களோ, அந்தந்த வகையில் மகா சிவராத்திரி சிவபூஜை நடத்தி வருகிறார்கள் .மேலும் ,சிவனுக்காக புண்ணிய ஆத்மாக்கள் சிவனை வழிபட்டு வரும்போது, அந்த அருள் கிடைக்க சித்தர்கள், யோகிகள், மகான்கள், தவசிகள், இந்த யாக பூஜையை நடத்துகிறார்கள் .

சில இடங்களில் ருத்ர பூஜை, மயான பூஜை, ஆத்ம பூஜை,அக்னி பூஜை ,இப்படி பல வகையான பூஜைகளை செய்து சிவனை இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவன்களும் வழிபட ஒரு முக்கிய நிகழ்வுதான் மகா சிவராத்திரி பூஜை .

இந்த பூஜையின் மகிமை ஜீவாத்மா, பரமாத்மாவோடு கலப்பது தான் முக்கிய நோக்கம். அதற்காக தான் இவை அத்தனையும் நம்முடைய சித்தர்கள், மகான்கள் கடைபிடித்து வருகிறார்கள். அப்படி கடைப்பிடிக்கப் பட்டு குரு முகாந்திரமாக ஒவ்வொரு சித்தர்களும், யோகிகளும் செய்கின்ற சிவ வழிபாட்டு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபட்டிருக்கும். 

உலகெங்கிலும் நடைபெறும் சிவ பூஜை தான் சிவராத்திரி சிவ பூஜை. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சிவராத்திரி பூஜையை வாழும் சித்தர் யோகி ரகோத்தமா, கருங்குழியில் மிக சிறப்பான முறையில் நடத்தி முடித்தார். இவருக்காக வந்த பக்தர்களுக்கு அன்பால் அருளாசி வழங்கி, எல்லோருக்கும் உணவளித்து, மாலை மரியாதை செய்து, ஒரு திருப்தியான சந்தோஷத்தை யோகி ரகோத்தமா கருங்குழியில் இந்த சிவராத்திரி சிறப்புமிக்க பூஜையாக நடத்தி முடித்தார். 

இவர் வெளியில் காட்டிக் கொள்ளாமல், தன்னால் ஏழை ,எளிய நடுத்தர மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதை இறையருளால் செய்து முடித்து தருவார். எல்லோரிடமும் அன்பான ,கனிவான பேச்சு. அதை எல்லா சித்தர்களும், கொடுக்க முடியாது. அதற்கு தனித்துவம் மிக்கவர் யோகி ரகோத்தமா! சாமியை பார்க்கவும், அவர்கள் அருளாசியை பெறவும்,ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லை என்றால், முயற்சி செய்தால் கூட அதுவும் கிடைக்காது.மேலும் ,நல்ல மனமும் நல்ல எண்ணமும் இல்லாதவர்கள் இவரை நெருங்க முடியாது.சாமி மீது நம்பிக்கை வைத்து, வருபவர்களுக்கு சுவாமி நம்பிக்கையானவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *