அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூபாய் பத்தாயிரம் தேர்தல் அறிவிப்பு – எடப்பாடி பழனிசாமி .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எடப்பாடி பழனிசாமி இன்று ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும், தல பத்தாயிரம் கருணைத் தொகையாக அதிமுக ஆட்சிக்கு வந்தால் கொடுக்கப்படும், அது எதற்கு என்றால், திமுக ஆட்சியில் வரி உயர்வு அதிகப்படியாக உயர்த்தியதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள்.அதனால் ,என்று தேர்தல் அறிவிப்பாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், வெளியிட்டுள்ளார்.

மேலும்,இப்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும், இலவசங்களை கொடுப்பதற்கு எங்கிருந்து இந்த பணம் வருகிறது? தவிர, இந்த பத்தாயிரம் ரூபாய் இலவசமாக கொடுக்கும் போது, சுமார் 300 கோடிக்கு மேல், மக்களின் வரிப்பணம், கொடுக்க வேண்டி இருக்கும்.

எனவே,இதே பணத்தை தரமான கல்விக்கும், தரமான மருத்துவத்துக்கும், இலவசமாக கொடுக்க அதிமுக பழனிசாமி ஏன்? அறிவிக்க கூடாது? அதாவது தனியார் பள்ளிக்கும் ,தனியார் மருத்துவமனைக்கும், இணையான மருத்துவத்தையும், கல்வியையும் கொடுத்தால் ,இதைவிட இலவசம் எதற்கு? என்கின்றனர் பொது மக்கள்.

மேலும், தமிழகத்தில் 10 லட்சம் கோடி கடன் உள்ளது. அப்படி இருக்கும்போது, இதைக் கொடுக்க முடியுமா? என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். கொடுக்க முடியும் என்கிறார்.

இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் ,பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நெசவாளர் குடும்பங்களுக்கு 450 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் .மேலும்,

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் 2000 கொடுக்கப்படும். இப்படி இலவசங்கள் கொடுத்து மக்களின் வாக்குகளை பெறுவது அரசியல் கட்சிகளின் நோக்கமா? இது பற்றி, தேர்தல் ஆணையம் இவர்களை விளக்கம் கேட்குமா?

தமிழக வாக்காளர்கள் மற்றும் வரி செலுத்துவோர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *