மக்கள் திருந்தாதவரை நாட்டில் ஊழலையும், ஊழல்வாதிகளையும் ஒழிக்க முடியாது . அரசியல் மாற்றமும் ஏற்படுத்த முடியாது.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மக்களின் அதிகாரத்தை அரசியல் வியாபாரிகளிடம் பணத்திற்காக விற்பதை நிறுத்தாத வரை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? மேலும்,

மக்களின் எண்ணம் எப்படியும் வாழலாம் என்பதை விட ,இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள், மக்கள் வாழ்பவர்கள் ,குறைந்து விட்டார்கள்.

அதனால் ,தான் அரசியலில் கொள்ளை அடிப்பவர்களை பார்த்து நாமும் கொள்ளையடித்தால் அவர்களை போல் ,பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாமே என்ற ஆசை வந்துவிட்டது .

ஏனென்றால், அவர்கள் உழைப்பு என்பது இல்லை படிப்பு இல்லை. இப்படி எதுவுமே இல்லாமல், பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கும் இடமாக அரசியலை மாற்றி விட்டார்கள் . அதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால், மக்கள் அரசியலை ! மனசாட்சி உள்ளவர்களிடம், ஒப்படைத்தால் மட்டுமே , மக்களுக்கான அரசியல் கொடுக்க முடியும். மேலும்,

நாட்டில் தற்போது நடுத்தர மக்கள், படித்தவர்கள் ,அரசியல் தெரிந்தவர்கள், இந்த மக்கள் அனைவரும் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால், பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள். இந்த பணத்தை எதற்காக நமக்கு கொடுக்கிறார்கள்? என்று கூட சிந்திப்பதில்லை.

மேலும்,உங்களிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, ஆயிரம் கோடி கொள்ளை அடிப்பதற்கு கொடுக்கிறார்கள் என்பதை இன்னும் கூட, இந்த மக்கள் புரிந்து கொள்ளவில்லை.

அதனால், மீண்டும் ,மீண்டும் நீங்கள் செய்கின்ற தவறு, அது உங்கள் தலையில் போடுகின்ற கருங்கற்கள் தான் என்பதை மறவாதீர்கள். மேலும் வருங்கால இளைய தலைமுறைகள் எப்படி வாழ முடியும் என்பதை சிந்தியுங்கள்.

மேலும்,பெண்களின் பாதுகாப்பு, மாணவிகளின் பாதுகாப்பு, தமிழகம் கல்வியில் முன்னேறுவதை விட ,போதையில் முன்னேறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நாட்டில் குடிகாரர்களுக்கு யார் வந்தாலும், யார் போனாலும், கவலை இல்லை. குடும்பத்தை பற்றிய கவலைப்படாதவர்கள் நாட்டைப் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?

மேலும், இன்றைய அரசியல் மக்களுக்காக அரசியல் என்பதை விட, அவர்களுக்காக அரசியலாக்கி விட்டார்கள் அதாவது அவர்களுக்கும், அவர்கள் கட்சியினருக்கும், அரசியல் இந்த நிலை மாறாமல், மக்களுக்கு எந்த மாற்றமும் அரசியலில் ஏற்படாது.

ஒரு அரசியல் கட்சி எதற்கு? எப்படி இருக்க வேண்டும்? அதன் நோக்கம் என்ன? செயல் என்ன? இது தெரியாத பத்திரிகைகள் எல்லாம் இந்த அரசியல் கட்சிகளை பாராட்டிக் கொண்டிருக்கிறது.

மேலும்,உண்மை ஒருநாள்! மக்களுக்கு புரியும் போது, உங்களுடைய வருங்கால சந்ததிகள் வாழ வேண்டுமென்றால், பள்ளி ,கல்லூரிகள், தரம் உயர்த்தப்பட்டு மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க கூடிய கல்வி நிலையங்களாக இருக்க வேண்டும்.

மக்கள் உழைத்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்களை விட அரசியலில் மக்களை ஏமாற்றி வாழ வேண்டும் என்பது தான் நோக்கமாக மாறி விட்டது. இந்த மக்களின் எண்ணங்களுக்கு தகுந்தார் போல் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடவுளும் அவர்களை இவர்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

இதற்குக் காரணம் யார்? மக்கள் தான் முதல் குற்றவாளி. மக்கள் மனசாட்சி இல்லாமல் , நியாய தர்மம் இல்லாமல் வாழ்ந்தால், மனசாட்சி இல்லாத அரசியல்வாதிகள் தான் இவர்களுக்கு கிடைப்பார்கள். இவர்களுக்கு பொது நலம் தெரியாது. இவர்கள் சுயநலம் மட்டுமே தெரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் இவர்களை அடக்கக்கூடிய ,இவர்கள் முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய, அரசியல்வாதிகளை கடவுளே இவர்களுக்கு தண்டனையாக கொடுத்திருக்கிறார? என்று நினைக்கத் தோன்றுகிறது.

மேலும் ,அப்படிப்பட்டவர்கள் நாம் எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம் ?எந்த திட்டத்தில் எப்படி அதை எடுக்கலாம்? இப்படித்தான் போகிறதே ஒழிய, மக்கள் திருந்தாத வரை, அரசியலில் ஊழலை ஒழிக்க முடியாது .ஊழல்வாதிகளையும் ஒழிக்க முடியாது . அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *