
மின்சார வாரியத்தில் லஞ்ச ஊழல் நடைபெற்று வந்துள்ளது. இப்போது தான் வெளி வருகிறது – பொதுமக்கள் .
மேலும், மின்சார வாரியம் ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக மின்சார வாரியம் கடந்த திமுக ஆட்சியில் தெரிவித்து இருந்தது. மேலும், அதில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்தி அமைதியாகி விட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்கள் .மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின்வாரியும் எதனால் நஷ்டத்தில் இயங்கியது? மேலும்,

மின்சார வாரியத்தில் மிகப் பெரிய ஊழல்களில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தது ,அரசியல் பின்புலம் அவர்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. தவிர,கடந்த அதிமுக ,திமுக காலங்களில் மின்வாரியத்தில் ஒரு மின் இணைப்பு வாங்க வேண்டும் என்றால், சாதாரண பொதுமக்கள் மாதக்கணக்கில் அவர்களை நடக்க விட்டு, இழுத்தடிப்பார்கள். மேலும் பொது மக்களை
இங்க போய் D E யை பார், A D யை பார், SE யை பார். என்பார்கள் . அது மட்டுமல்ல, மீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. அதிகமாக மின் கட்டணம் வருகிறது .இது போன்ற புகார் அளித்தால் கூட ,அதை எல்லாம் வாங்கி கிடப்பில் போட்டு வைப்பார்கள் .
மேலும் ,அதற்கு 10 முறை நடக்க வைப்பார்ப்பார்கள், தங்கள் வேலை கெட்டுப் போகிறது என்று விவசாயிகள் ,பொதுமக்கள், பிறகு, அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான் ,அவர்கள் அதை வந்து பார்ப்பார்கள்.

அதே போல் தான் மின் இணைப்புக்கும், பணத்தைக் கொடுத்தால், உடனே மூன்று நான்கு நாட்களில் மின் இணைப்பு கொடுத்து விடுவார்கள். கொடுக்கவில்லை என்றால், அது SE ஆபிஸ் போயிருக்கிறது என்று சொல்வார்கள் . ஒன்றுமே செய்ய முடியாது. விஷயம் தெரிந்தவர்கள் கூட அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டுதான் வெளியில் வரவேண்டும்.
அதுமட்டுமல்ல, தற்போது எனக்கு தெரிந்த நண்பர் அதிகாரியின் வீட்டிற்கு 34,000 ரூபாய் மின்கட்டணம் போட்டு விட்டார்கள் .அவர் செல்வாக்கு உள்ளவர். அவர் உடனே SE க்கு போன் அடித்திருக்கிறார் .
பிறகு 7000 ரூபாய் அதற்கு செலுத்தி இருக்கிறார். மேலும்,தவறான மின் கட்டணம் வசூலிப்பு தெரிய வரவே அதை மாற்றி சரியான மின்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இப்படி எல்லாம் தவறான கணக்கீடுகளை எடுத்து ஒரு பக்கம் மக்களுடைய பணத்தை வீணடிக்கிறார்கள். இன்னொரு பக்கம் கிராம பஞ்சாயத்து மின் கட்டணங்களை அதையும் தாறுமாறாக இதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்று அதிகாரிகள் மூலம் தெரியவரும் தகவல்.
மேலும்,இதைவிட ஒரு கூத்து ஒவ்வொரு கல்லூரியிலும், தனியார் நிறுவனங்களிலும், (அப்பார்ட்மெண்ட் ) அடுக்குமாடி குடியிருப்புகளிலும், மின் கட்டணம் சரியாக வசூல் செய்வது இல்லை அங்கே வாட்ச்மேனே இவர்களை உள்ளே விடுவதில்லை . இதனால், அரசுக்கு மின் கட்டண வருவாய் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவது ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

இது தவிர, கடந்த அதிமுக அதிமுக ஆட்சியில் மின் மாற்றிகளை அதாவது ட்ரான்ஸ்பார்மர் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது .அது பற்றி அறப்போர் இயக்கம் வெளியில் கொண்டு வந்து, அது ஒரு பக்கம் வழக்கு செந்தில் பாலாஜி மீது போய்க் கொண்டிருக்கிறது.
மேலும்,நேற்று கூட சேலம் பகுதியில் மின் இணைப்பு பெறுவதற்கு இளநிலை பொறியாளர் ஒருவர் 7000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார் .
இப்படி இருந்தால் ,எப்படி மின்வாரியம் இந்த நஷ்டத்தை சரி செய்ய போகிறது? இதற்கெல்லாம் புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய் இதை சரி செய்து,இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?
