
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை! என்று மக்கள் கொடுத்த மிகப்பெரிய வெற்றி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு அரசியலில் இது யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றி .
மேலும்,இந்த வெற்றி இவருடைய ரசிகர்களுக்கோ அல்லது அரசியல் கட்சியினருக்கோ அல்லது இவருடைய வேட்பாளர்களுக்கோ கொடுக்கப்பட்ட வெற்றி அல்ல.
இது முழுக்க, முழுக்க விஜய் ஒருவருக்கு மட்டுமே, கொடுக்கப்பட்ட வெற்றி . அதனால்! மீண்டும் அதிமுக, திமுக அரசியல் கட்சியினர் செய்யக்கூடிய அதே அராஜகங்களை மக்களிடம் செய்யாதவாறு விஜய் பார்த்துக் கொள்வது நல்லது.
மேலும் ,பல ஆயிரக்கணக்கான வாக்குகள் அதிமுக, திமுக கட்சியினர் அந்தந்த கிராமங்களிலும், நகரங்களிலும், செய்த செயல்பாடுகள் அருவருக்கத்தக்கவை.
அது மட்டுமல்ல,அவர்கள் இப்போதும் அதிமுக வந்துவிட்டால் நம்ம ஆட்சி வந்து விட்டது என்று எப்படி எல்லாம் குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம்? என்ற கனவோடு தான் இருந்தார்கள். மக்கள் அந்த கனவை தகர்த்து விட்டார்கள்.
அதே கனவில் தமிழக வெற்றி கழகத்தின் ரசிகர்களோ அல்லது அரசியல் கட்சியினரோயிருந்தால், விஜய் அவர்களை முதலிலே கண்டித்து வைப்பது நல்லது.
இல்லையென்றால்! மக்கள் இன்று எப்படி திமுக, அதிமுக அரசியல் கட்சியினரின் அருவருக்கத்தக்க செயலுக்கு, எதிராக வாக்களித்தார்களோ, அதே நிலைமை இதற்கும் உருவாகி விடும் என்பதை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் புரிந்து கொண்டால் சரி .