அரசியலுக்குள் கார்ப்பரேட் பத்திரிகைகள் இருப்பதால் ! அதனுடைய ஆதிக்கம் சமூகநலன் பத்திரிகைகளை வளரவிடாமல், தடுப்பது 50 ஆண்டுகால பத்திரிக்கை துறையின் வீழ்ச்சி! அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? – தேசிய மனித உரிமைகள் ஆணையம் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளில் மிக முக்கிய பிரச்சனை பத்திரிக்கை துறையின் பிரச்சனை.

இது ஒரு கடல் போல இருக்கும் துறை! இந்த கடலில் யார் முத்து எடுக்க முடியும்? என்பதுதான் மிகப்பெரிய சவால்களாக, போட்டி துறையாக உள்ளது. இதில் கார்ப்பரேட் பத்திரிக்கைகளுக்குள் போட்டி, சமூக நலன் பத்திரிகைகளுக்குள் போட்டி, இந்த போட்டிக்குள் ஜெயிப்பது என்பது இதற்குள் இருக்கின்ற அரசியல்! ஆளும் கட்சியின் அரசியல் ஆதிக்கம் ,மத்திய மாநில அரசின் செய்தி துறையில் ! கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள் மற்றும் அங்கீகாரம்,

மேலும், மக்களின் வரிப்பணத்தில் , கொடுக்கப்பட்டாலும், அது கார்ப்பரேட் டுக்கு மட்டுமே சொந்தம் என்று இன்றுவரை செய்தித் துறை இருந்து வருகிறது. ஏனென்றால், இவர்கள் மூலம் அவர்களுக்கு மறைமுக (கமிஷன்) லாபம். அதுதான் செய்தித் துறையின் மிகப்பெரிய ஊழலாக இன்றுவரை தொடர்கிறது. அதனால் செய்தித் துறை !வருமானத்தை கொடுப்பவர்களுக்கு விசுவாசிகளாக இருக்கிறார்கள். கமிஷன் கொடுக்க முடியாத பத்திரிகைகள், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

மேலும்,இதில் தகுதியான பத்திரிகைகள் கூட ,அதன் முடிவு தோல்வியில் முடிவதும், வெற்றியில் முடிவதும் உண்டு. அந்த அளவுக்கு செய்தித் துறையில் ஏஜென்ட்கள் மூலம் மறைமுக ஊழல் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் இந்த சலுகை ,விளம்பரங்கள் ஏஜென்ட்கள் மூலம் கொடுப்பதை நிறுத்தப்பட வேண்டும்.

மேலும்,இந்த ஏஜெண்ட்கள் தான் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கொடுக்கும் கமிஷன் ஏஜெண்டுகள் . இவர்கள் தான் இந்த பத்திரிகைகளுக்கு மிகப் பெரிய எதிரி. ஏனென்றால், இந்த பத்திரிகைகளால் அந்த கமிஷன் கொடுக்க முடியாது.

மேலும், சமூக நலன் பத்திரிகைகள் சில மக்களுக்காக பத்திரிகை நடத்துகிறார்கள். கார்ப்பரேட்டுகள் தினசரி போர்வையில்! அரசியல் கட்சிக்கும் ,ஆட்சியாளர்களுக்கும், வியாபாரத்திற்கும் ,பத்திரிக்கை நடத்தி விட்டு, சர்குலேஷன் மூலம் பத்திரிக்கை துறையை ஏமாற்றி ,சலுகை, விளம்பரங்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தான் 50 ஆண்டுகால செய்தித் துறையின் மிகப்பெரிய ரகசியமான ஊழல்! இந்த ஊழலை பற்றி ஒரு பத்திரிகைகள் கூட வெளியில் செய்திகளை வெளியிடாது. ஏனென்றால் ,சிறு பத்திரிக்கை நடத்துபவர்களுக்கு இது பற்றி, போதுமான அறிவு கிடையாது .

அதை பொதுவெளியில் எடுத்து ,மக்களிடம் சொல்லவும் ,அதற்கான தகுதியும் இல்லை. அதுவே போராட்டத்தின் மிகப்பெரிய தோல்வி. ஆனால் ,சலுகை விளம்பரங்கள் கொடுத்தால் ,முதலில் வந்து நிற்பவர்கள் இவர்கள்தான்.

மேலும்,இதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இந்த கார்ப்பரேட் ஊடக அரசியல் ஆதிக்கத்தின் ஊழல்களை எதிர்த்து போராடி வருகிறது. இங்கே எத்தனையோ ஆட்சிகள் மாறினாலும், ஆனால், இதற்கான சட்டங்கள் மாற்றப்படாமல் தொடர்கிறது.

மேலும்,காலத்துக்கு ஏற்ப பத்திரிக்கை துறையில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியமானது. அதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து ,இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு, இணையதள பத்திரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இருப்பினும், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியிலும், கார்ப்பரேட் ஊடக அரசியல் ஆதிக்கத்தை தான் அமைச்சர் ராஜ் மோகனால் செய்ய முடிகிறது . இவரால், இந்த துறையில் மாற்றங்கள் கொண்டுவர முடியாது.

இவர் எப்போது கார்ப்பரேட் பத்திரிகைகளில் பணியாற்றக் கூடியவர்களை மட்டுமே நல வாரியத்தில் பொறுப்புக்களை போட்டாரோ ,அப்போதே பத்திரிக்கை துறை ! பழைய பஞ்சாங்கமாகத்தான் இருக்கப் போகிறது. என்று முடிவு செய்தேன். மேலும்,இது பற்றி பல அதிகாரிகளின் கருத்துக்களை கூட அவர் ஏற்கிறாரா? என்பது சந்தேகம்தான்.

ஏனென்றால் இது ரகசிய ஊழல் துறை ! இப்படிப்பட்ட துறைகள் பல இருக்கிறது. அதில், செய்தித்துறை மிக முக்கியமானது .இதில் மக்களின் வரி பணம் தங்களுக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாடும் கார்ப்பரேட் அரசியலை எதிர்த்து, இந்த சிறு பத்திரிகைகளால் கேள்வி கூட கேட்க தகுதி இல்லாமல் இருக்கிறது.

இருப்பினும் தகுதியான பத்திரிகைகளுக்கு அரசின் சலுகை, விளம்பரங்கள் கிடைக்க வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை. மேலும், எத்தனையோ செய்தித்துறை பி. ஆர். ஓ க்கள் கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சியின் ஏஜெண்டுகளாக கூட செயல்படுகிறார்கள்.

இவர்கள் செய்திக்கு முக்கியத்துவம் தராமல், சர்குலேஷனுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். சர்குலேஷன் மட்டுமே பத்திரிகை என்றால், அந்த பத்திரிகை செய்திகள் அரசியலுக்குள் வந்து விடுகிறது. அதாவது பத்திரிக்கையின் சுதந்திரம் என்பது செய்தித் துறையின் சர்குலேஷன் சுதந்திரம். இந்த உண்மை தகுதியான ஜர்னலிஸ்ட் களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

இது தவிர, செய்தி துறையின் ஊழல்!தினசரி முதல் எல்லா பத்திரிக்கையும் பத்தாயிரம் பிரதிகள் அச்சு அடிக்க வேண்டும். விற்பனை எவ்வளவு என்று அந்தந்த பத்திரிகை காட்டுகின்ற கணக்கு உண்மையானதா? அது ஆடிட்டர்கள் கொடுக்கின்ற கணக்கு. தற்போது பத்திரிக்கையே வாங்கி படிக்கும் எண்ணமே மக்களிடம் குறைந்து விட்டது. பிறகு எப்படி சர்குலேஷன் சட்டத்தை வைத்து, இந்த சலுகை, விளம்பரங்களை செய்தித்துறை முடிவு செய்கிறது?

இப்படி எல்லாம் பத்திரிக்கை துறையை பாழ்படுத்தும், செய்தித் துறை! இதன் பின் விளைவு நாட்டில் ! ஊழல் வளர்ந்துள்ளது. அதற்கு வாழ்க பலமாக கார்ப்பரேட் ஊடகங்கள் பெரும்பான்மை, நாட்டில் மறைமுகமாக ஊழலை வளர்த்து ,பல ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, மத்திய மாநில அரசின் செய்தித் துறை சாதனை.

மேலும்,பத்திரிக்கை துறையில் !சிறிய ,பெரிய என்ற பேதம் இல்லாமல், பத்திரிகைகளுக்கு கொடுக்க வேண்டிய சம வாய்ப்புகள் மறுக்கப்படும் உரிமைகள் தொடர்ந்து ,இந்த 50 ஆண்டுகால அரசியல் வரலாறு ,மத்திய, மாநில அரசின் செய்தித் துறையின் சாதனை . அதாவது மக்களின் வரி பணம் சாமானிய மக்களின் பத்திரிகைகளுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் இவர்களின் சட்டம்.

மேலும்,இதற்குள் இருக்கும் கார்ப்பரேட் அரசியல் மற்றும் மத்திய மாநில அரசின் கொள்கை முடிவு அரசியல், மற்றும் நலவாரியத்தில் கார்ப்பரேட் பத்திரிகைகளின் நிர்வாகிகள் அரசியல்!

தவிர,அரசின் விளம்பரங்கள்! ஏஜென்ட்கள் மூலம் ஏன் கொடுக்க வேண்டும் ?அதனால், அரசுக்கு என்ன நன்மை? இது ரகசிய ஊழலுக்கு, இதில் ஏற்படுத்தி இருக்கும் மறைமுக வழி எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும்,இது பற்றி எத்தனையோ முறை மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் மத்திய மாநில அரசின் செய்தித் துறையில் (RTI ) ஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்க ,துப்பில்லாத இவர்கள், பதில் அளிக்க இயலாது. பதிலளிக்க இயலாது. இதுதான் பதிலாக இருந்தது. இது என்ன ராணுவ ரகசியமா?

மேலும், பத்திரிகை துறைக்குள் அரசியல் ஆதிக்கம் எவ்வாறு தொடர்கிறது ?என்பது இச் செய்தியின் முக்கியத்துவம். அது மட்டுமல்ல,மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி காலம் முதல் தற்போது ஆளும் பிஜேபி ஆட்சி வரை அங்கும் இதே நிலைமைதான் , செய்தித் துறையில் கார்ப்பரேட்டுக்களின் அரசியல் ஆதிக்கம் நுழைந்து ,இந்த சிறு பத்திரிகைகளுக்கு மிகப் பெரிய எதிர்ப்புகளை மறைமுகமாக அரங்கேற்றம் அரசியல்.

மேலும்,இது பற்றி தெரியாதவர்கள் எல்லாம் இன்று பத்திரிகை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல,மக்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு துறையில்! எவ்வளவு பெரிய இருட்டு ஒளிந்திருக்கிறது? என்பதுதான் ஒரு சாமானிய பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளனின் உண்மை மக்களின் பார்வைக்கு மட்டுமல்ல, இது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பார்வைக்கும், இந்த உண்மைகள்.

மேலும்,இதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் முறையாக வழக்கு பதிவு செய்து, முறையான விசாரணை அறிக்கை கேட்டு, மத்திய மாநில அரசின் செய்தித்துறையை விசாரணை செய்தால், உண்மைகள் வெளிவரும் .பத்திரிக்கை துறையில் நீதி கிடைக்கும்.

மேலும்,இதையும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு இதனுடைய நகல்கள் அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர, முதலமைச்சர்கள் முதல் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதமர் வரை அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்கள், இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும்,இதை தேசிய மனித உரிமைகள் ஆணையர் நீதியரசர் ராமசுப்பிரமணியன் பத்திரிக்கை துறைக்குள் இருக்கின்ற வரலாற்று சுயநல அரசியல் மற்றும் ஊழல்களை களை எடுத்து, முற்றுப்புள்ளி வைக்க சமூக நலன் பத்திரிகைகள் சார்பில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் கோரிக்கை – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *