
விஜய் அண்ணன் சீர்வரிசை என்று தன்னுடைய சொந்த கட்சி நிதியில் கொடுங்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார். அதாவது அண்ணன் சீர்வரிசை என்பது ஒரு பவுன் தங்கை, ஒரு பட்டுப் புடவை, இன்று தங்கம் விற்க்கும் விலை குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 20 ஆயிரம், ஒரு பவுனுக்கு செலவு செய்ய வேண்டும். மேலும், பட்டு புடவைக்கு ரூ 5000/- ஆவது செலவு செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தால் ,ஒரு குடும்பத்திற்கு ஒன்னே கால் லட்சம் (1,25000)என்று கணக்கிட்டால் கூட, எத்தனை கோடி ? பணம் அரசாங்க நிதியிலிருந்து செலவு செய்ய வேண்டி வரும்? மேலும்,இந்தக் கணக்காவது விஜய்க்கு தெரிந்திருக்க வேண்டும். தெரியாமல் வாய்க்கு வந்தபடி இலவச அறிவிப்புகளை மேலும்,ஏற்கனவே தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி கடன். இந்த லட்சணத்தில் இந்த அறிவிப்பு 10 லட்சம் கோடி கூட பத்தாது, அதாவது ஒரு மாதத்திற்கு சீமான் சொன்னது போல ஒரு லட்சம் கோடி தேவைப்படும். அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் வருமானம் என்ன? இந்த இலவசத்தை யாருடைய பணத்தில் இலவசத்தை கொடுக்கிறீர்கள்?

மேலும்,எவனோ ஒருவன் உழைத்து வரி கட்டுகிறான். அந்த வரியில் இதையெல்லாம் இலவசமாக கொடுக்கிறேன், என்கிறீர்கள். இது கடை தேங்காய் எடுத்து, வழி பிள்ளையாருக்கு உடைத்த கதை தான்.தவிர, ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த இலவச அறிவிப்புகளை ,தங்களுடைய சொந்தக் கட்சி நிதியில் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் . அப்போதுதான் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அது மட்டுமல்ல ,வாயிலே சொல்வது சுலபமான வேலை .ஆனால், சொன்ன திட்டங்களை நிறைவேற்றுவதில் ,அது எவ்வளவு கடினமான வேலை? மேலும் அப்படியே சொன்ன திட்டங்களை நிறைவேற்றாமல் போனால் அது மக்களை ஏமாற்றும் வேலை ? மேலும், வாக்காளர்களை இலவச அறிவிப்பு என்பது அவர்களை ஓட்டுக்காக தூண்டும் வேலை.
மேலும்,உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந் ,தமிழ்நாட்டில் திமுக அரசு இலவச அறிவிப்புக்கள் வெளியிடுகின்றன .ஆனால், நாட்டின் கடன் சுமை அதிகளவில் இருக்கிறது . மேலும்,தமிழ்நாட்டின் வருமானத்தை வைத்துதானே இலவச அறிவிப்புகள் கொடுக்க வேண்டும்.

இங்கே கடன் சுமையை அதிகமாக இருக்கும் போது, எப்படி நீங்கள் இலவசத்தை அறிவிக்கலாம்? இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தான் இன்று வரை தமிழக அரசு இருந்து வருகிறது. அதனால் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிட்டால், தங்களுடைய சொந்த கட்சி நிதியிலிருந்து வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதற்கான ஒரு சட்டத்தை வகுக்க வேண்டும் .அப்போதுதான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.