
தமிழ்நாட்டின் கடந்த கால அரசியல் வரலாறு இரண்டு வகையாக பிரிக்கலாம். அது 1965 க்கு முன், இருந்த அரசியல் எப்படி இருந்தது? அப்போது இவ்வளவு பத்திரிகைகள் இல்லை .தொலைக்காட்சிகள் இல்லை. மக்களிடம் படிப்பறிவு இல்லை. ஆனால், தூய்மையான நேர்மையான அரசியல் இருந்தது. ஊழல் என்றாலே என்ன என்று அரசியலில் மக்களுக்கும் தெரியாது .அரசியலுக்கு வந்தவர்களுக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அரசியல் எப்படி சுயநலமானது?
கருணாநிதி எப்போது தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாரோ, திமுக எப்போது வந்ததோ ,அப்போதே தமிழ்நாட்டில் அரசியலுக்குள் இருள் சூழ்ந்து விட்டது. இவர்கள் சொல்வார்கள் . நாங்கள் வந்து தான் அடித்தட்டு மக்களை உயர்த்தினோம். நீங்கள் உயர்த்தவில்லை ,உங்களை உயர்த்திக் கொண்டீர்கள். இதுதான் உண்மை.

இதிலிருந்து அதிமுக வந்தது அதுவும் அதே வழியில் சென்றது. சாமானிய மக்கள் அடித்தட்டு மக்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எந்த நோக்கத்திற்காக அரசியல் இருந்ததோ அது சாமானிய மக்களுக்காக அடிதட்டு மக்களுக்காக இல்லாமல் இவர்கள் சொந்த சுயநலத்திற்காக அரசியல் ஆக்கிவிட்டார்கள். அங்கே அரசியல் நோக்கமே அடிபட்டு போய்விட்டது. மேலும்,

இதை எந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளும் இந்த உண்மையை வெளிப்படுத்தாது. இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் .காமராஜர் காலத்தில் ஆட்சி எப்படி இருந்தது? ராஜாஜி காலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி எப்படி இருந்தது? அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? இவர்கள் யாருமே விளம்பர அரசியலை விரும்பாதவர்கள்.
மேலும்,எப்போது கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் செய்தியை சொல்லாமல் விளம்பர அரசியலை முன்னெடுத்ததோ அப்போதே நாட்டில் ஊழல் ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிகை தொலைக்காட்சிகள் அவர்களுடைய பொய்களை எல்லாம் செய்தி என்று விளம்பரம் செய்தது இங்குதான் அரசியலுக்குள் பத்திரிக்கை வந்து விட்டது.

பத்திரிகைகள் அரசியலுக்கு வெளியே இருக்க வேண்டும். எப்படி இது நான்காவது தூணாகும்? ஊழல்வாதிகளின் பேட்டியும் போடுவார்கள். அவர்கள் பேசுவதை அப்படியே போட்டுவிட்டு, தாங்கள் தான் பெரிய பத்திரிகை என்று இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், என்று காட்டிக் கொண்டிருப்பார்கள். பல லட்சம் கோடி ஊழல் அரசியல்வாதியான பா. சிதம்பரம் சொல்வதை அப்படியே போடுவார்கள். எனவே,

இந்த உண்மையை படிக்காத வரை, வாக்காளர்கள் ஆகிய பொதுமக்கள் அனைவருக்கும் ,அரசியல் ஏமாற்றம்தான். அரசியல் கட்சி வேறு ,அரசியல் வேறு, இரண்டுக்கும் அர்த்தம் தெரியாமல் கூட பல பேர் சிறிய பத்திரிகை நடத்துகிறார்கள். கார்ப்பரேட் மீடியாவும் ,அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது.
மேலும் ,மக்களுக்காக தான் அரசியல்! மக்களுக்காக தான் ஆட்சி !அப்படி இருக்கும்போது, ஏன் 1965 வரை, அப்படி இருந்த அரசியல்! அதன்பிறகு அரசியல் கட்சியினருக்காக எப்படி அது மாறியது?

படிப்பறிவு இல்லாத மக்கள் வாழ்ந்த காலத்திலே அரசியலில் நேர்மை, உண்மை, உழைப்பு, மக்களுக்காக இருந்தது. ஆனால் ,படித்து பட்டம் பெற்று ,கம்ப்யூட்டர், செல்போன் இணையதளம், எல்லாம் வந்த இப்போதுதான் ஊழல் ,மோசடி ,ஏமாற்றுதல் ,இது அதிகமாக மக்களிடம் ,வாழ்க்கையில் ,அரசியலில் சந்திக்க வேண்டி இருக்கிறது.

அது ஏன்? அதுதான் விழிப்புணர்வு இல்லை. எல்லோரும் பணத்தைப் பற்றி தான் சிந்திக்கிறார்கள். பணம்தான் வாழ்க்கையின் முக்கியமாக இருக்கிறது. ஆனால், தகுதி என்பதை மறந்து விட்டார்கள். உழைப்பை மறந்து விட்டார்கள். உண்மை ,நேர்மை, விசுவாசம், மறந்துவிட்டார்கள். இது அடிப்படை!
இந்த அடிப்படை தகுதி இல்லாத ஒருவர் ,அரசியல் கட்சிக்கு வந்து, அந்த கட்சியின் மூலம் பதவி பெற்று, பல லட்சம் கோடிக்கு ஊழல் செய்கிறார். அவருக்கு கீழே எத்தனை கட்சிக்காரர் இருக்கிறார்களோ, அவரவர் தகுதிக்கு தக்கவாறு ,அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அரசியல் என்பது தன்னுடைய உழைப்பை மக்களுக்கு தியாகம் செய்ய வருகின்ற வேலை. இது அப்படியே திமுக கட்சி! அரசியல் என்பது கொள்ளை அடிப்பதாக மாற்றிவிட்டது. அதிமுக பாதி கொள்ளை என்றால் ,திமுக முழு கொள்ளை .ஏனென்றால் இவர்கள் இருவரும் தானே மாறி, மாறி 60 ஆண்டு காலம் ஆட்சி செய்து விட்டார்கள் .அதற்கு இவர்களுடைய சொத்து கணக்கு தான் ஆதாரம்.

மேலும் ,1965 க்கு முன் அரசியலுக்கு வந்தவர்களின் சொத்து கணக்கு எடுத்துப் பாருங்கள். அவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து, தங்களுடைய சொத்து இழந்து இருப்பார்கள். 1965 க்கு பிறகு இவர்களுடைய சொத்து கணக்கை பாருங்கள், சம்ந்தா, சம்பந்தமே இருக்காது .சோத்துக்கு வழி இல்லாதவர்கள் கூட, கோடீஸ்வரர்கள். பிஎம்டபிள்யூ காரில் செல்வார்கள்.
இவர்களுக்கு எந்த தொழிலும் தெரியாது .தொழிலை பற்றிய படிப்பும் கிடையாது .அரசியல்! என்பது தொழில் செய்யும் இடம் இல்லை. ஆனால், இவர்களுக்கு எப்படி இந்த சொத்து வந்தது? யார் கொடுத்தது? கட்சி நடத்துவதற்கு எப்படி பணம் வந்தது? உண்டியல் குளுக்குவார்கள் .மக்கள் கொடுத்தார்கள் .இந்த கதை எல்லாம் விடுவார்கள்.

கதை விடுவதில் கை தேர்ந்த ஒரு கூட்டம் திமுக, அரிச்சந்திரனை விட நாங்கள் தான் உண்மையான சத்தியவான்கள் என்று பேசுவார்கள். பிராடுகள் அதிகம் பேசிக் கொண்டிருக்கும் அரசியலில், ஆனால், அவர்கள் பேசுவதற்கும் செயல்படுவதற்கும் சம்பந்தமே இருக்காது.

இந்த பிராடுகள் பேசுகின்ற பேச்சுகள், எல்லாம் மக்கள் எப்போது பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் உண்மை செய்தி என்று நம்பினார்களோ ,அப்போதுதான் இவர்கள் பரிசுத்தமானவர்கள் என்று மக்கள் ஏமாந்தார்கள். இங்குதான் அரசியல் ஏமாற்றம் உங்களுக்கு ஏற்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள். இன்று அவர்கள் கார்ப்பரேட். நேற்று அவர்கள் கார்ப்பரேட் கிடையாது. அதுவும் சொல்கிறேன். தினத்தந்தி தலையில் தூக்கிக்கொண்டு, தெருத்,தெருவாக விற்ற பத்திரிக்கை. தினமலர் டீ கடைகளில் ,இலவசமாக போட்ட பத்திரிகை. பிறகு எப்படி கார்ப்பரேட் ஆனது? அரசியலுக்கு வந்து குறுக்கு வழியில் எப்படி பணம் சம்பாதித்தார்களோ,

அதே போல் தான், இந்த பத்திரிக்கை தொலைக்காட்சிகளும் குறுக்கு வழியில் எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கையும் எந்த நோக்கத்திற்காக அரசியலோ அது இல்லாமல் சுயநலத்தில் அரசியல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் இடமாக மாற்றி விட்டார்கள். மேலும்,
இந்த வரலாறு எல்லாம் தெரியாத வரை, பத்திரிக்கை துறைக்கே! ஏன் சமூக நலன் பத்திரிகைகளுக்கும் ஏமாற்றம்தான். இவர்கள் எல்லாம் அரசியலுக்குள் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .அரசியல் கட்சிக்குள் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறாரகள்.

ஆனால், மக்களுக்காக பத்திரிகை இல்லை. மக்களுக்காக பத்திரிகை நடத்துவது போல் காட்டிக் கொள்கிறார்கள்.தவிர, மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவித்து விட்டு, அரசியல் அதிகாரத்திற்குள் பத்திரிக்கை நடத்தி பல கோடி சொத்துக்களை சம்பாதித்துக் கொண்டார்கள்.
எந்த அரசியலில் ஊழலை எதிர்த்து எழுதவேண்டுமோ ,அதை எழுதாமல் அவர்களை பாராட்டி, பலனடைந்தார்கள். இப்போதும் நாங்கள் தான் பத்திரிக்கை !செய்தி துறை எங்களுக்கு மட்டுமே என்று நல வாரியம் முதல் சலுகை விளம்பரங்கள் வரை பட்டா போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எல்லாம் நூற்றுக்கு 99 சதவீதம் செய்தித் துறை அதிகாரிகளுக்கே தெரியாது.

ஏனென்றால், இவர்களும் அந்த கட்சியின் சிபாரிசில் வேலைக்கு வந்தவர்கள். ஒன்று அதிமுக சிபாரிசில் வந்திருப்பார்கள். இல்லையென்றால் திமுக சிபாரிசில் வந்திருப்பார்கள். நான் நிருபராக வேலை செய்யும்போது, எனக்கே இந்த உண்மைகள் எல்லாம் அப்போது தெரியாது.
நான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை 10 ஆண்டுகளாக நடத்திய போது தான், பல உண்மைகள் எனக்கே தெரிய வந்தது. அதை தான் மக்களுக்கு சொல்கிறேன். மக்கள் அரசியலில் விழிப்புணர்வு இல்லாதவரை, அரசியல் உங்களுக்கு ஏமாற்றமே!
மேலும்,எப்போது கொடியைப் பிடித்துக் கொண்டு, கட்சிக்காரர்கள் ஸ்டாலின் வாழ்க ,ஜெயலலிதா வாழ்க ,எம்ஜிஆர் வாழ்க ,என்று புகழ் பாடினார்களோ ,அப்பொதே இவர்கள் இவர்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். இப்போது தளபதி வாழ்க என்று குரல் கொடுக்கிறார்கள்.

மேலும்,ஒரு அரசியல் கட்சி! மீட்டிங் போட்டால், நூறு பேர் சால்வை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் கட்சிக்காரர்கள் .அது எதற்கு? அரசியல் அப்போதே சுயநலமாகிவிட்டது.நீங்கள் எந்த வேலைக்கு வந்தீர்களோ ,அந்த வேலையை மட்டும் தான் பார்க்க வேண்டும்.
அரசியல் கட்சிகளில் மக்களுக்காக உழைப்பவர்களை விட்டுவிட்டு ரவுடிகளையும் வெத்து வெட்டுகளையும் கொண்டு வந்து பதவி கொடுத்து எம்எல்ஏ ,மந்திரி ,எம்பி, ஆக்கியது ஊழல் அரசியல்! இது திமுக, அதிமுக அரசியல் கட்சிகள் செய்த வரலாற்றுப் பிழை.

இப்படிப்பட்டவர்களை கொண்டு போய் பதவி அதிகாரத்தில் உட்கார வைத்தால் அவர்களுக்கு பதவி போதை வந்து விடுகிறது. எந்த மக்கள் வாக்களித்து பதவிக்கு வந்தார்களோ அந்த மக்களையே தங்கள் ரவுடியிசத்தால் அடிமைப் படுத்தினார்கள். இதையெல்லாம் இளைய தலைமுறைகளும் வருங்கால அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானியுங்கள்.
மேலும்,இந்த போதைக்கு அடிமையானவர்கள், மைக்கை பிடித்துக் கொள்கிறார்கள் .இவர்கள் மைக்கை பிடிக்கவில்லை என்றாலும், கார்ப்பரேட் தொலைக்காட்சிகள் மைக்கை நீட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அவர்களுக்கும் என்ன கேள்வி கேட்பது? என்று தெரியாமல் இன்றுவரை, இந்த பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களைப் பற்றி ,இவர் இதை சொன்னாரு அவரு, அதை சொன்னாரு ,அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? இதுவாடா கேள்வி? இவர் எதற்கு வந்தார்? அந்த கேள்வியை கேளுங்கள். என்ன செய்தார்? அந்தக் கேள்வியை கேளுங்கள்.
இவர் அந்த கட்சிக்கு மாறினார் .இந்த கட்சிக்கு போனார் .எந்த கட்சிக்கு யார் போனால் என்ன? இவர்களுடைய சுயநலத்திற்கு அரசியல் ஆக்கிவிட்டார்கள்.நீங்கள் எதற்கு வந்தீர்கள்? அதற்கு பதில் சொல்லிவிட்டு போ!

இந்த அரசியல் போதைக்கு கார்ப்பரேட் ஊடகங்கள் ,அவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் மக்களிடம் விளம்பரப்படுத்துகிறது. அவர்கள் என்ன சொன்னாலும் ,செய்தி என்றால் நீ எதற்கு? பத்திரிக்கை நடத்துகிறாய்? தொலைக்காட்சி நடத்துகிறாய்? உனக்கு எதற்கு? மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள்? எப்படி இவையெல்லாம் நான்காவது தூண் என்று சொல்லிக் கொள்ள முடியும்?இது ஆழமான கேள்விகள் !இதற்குள் தான் உண்மைகள் ஒளிந்திருக்கிறது.

இந்த உண்மைகள் தெரியாத வரை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும், அரசியல் ஏமாற்றுமே! ஏன் ?கிராமங்களில் பஞ்சாயத்து தலைவராக நிற்ப்பவர்கள், எங்களைப் போன்ற அரசியல் தெரிந்தவர்கள், இல்லை என்றால் பணக்காரர்கள் ,விஷயம் தெரிந்தவர்கள் ,இவர்களையெல்லாம் ஓட்டு கேட்டு வரும் போது ,ஒரு சால்வை ஒன்றை தூக்கிக் கொண்டு வருகிறார்கள் அல்லது ஒரு துண்டு ஒன்று எடுத்து வருகிறார்கள். அது எதற்கு?
அந்த துண்டு போட்டால் மரியாதை வந்து விடுகிறதா? இல்லை மதிப்பு வந்து விடுகிறதா? இப்படி எல்லாம் ஒன்னும் தெரியாத ,உதவாத ஊரில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு இருப்பவன் கூட, கட்சியில் சேர்ந்து ,இவர்களுக்கே இந்த அரசியல் போதை வந்து விடுகிறது என்றால்!

நகரங்களில் கட்சி கொடியை காரிலும் ,பைக்கிலும் காட்டிக் கொண்டு, போகின்ற இவர்களுக்கு எவ்வளவு போதை இருக்கும்? எவ்வளவு அரசியல் போதை இருக்கிறது? என்பதை மக்கள் சிந்தியுங்கள் .எதனால் ஊழல் வருகிறது ?என்றால்! அடிப்படையில் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை .

ஓட்டுக்கு எதற்காக பணம் கொடுக்கிறார்கள்? சில ஆயிரங்களை கொடுத்து பல கோடிகளை அரசியலில் வியாபாரம் செய்வதற்கு கொடுக்கிறார்கள். மக்கள் இன்னும்,கூட்டத்தைப் பார்த்து மயங்குகிறார்கள்.

அவர்கள் அரசியல் பதவி போதையில் தள்ளாடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், இந்த தொலைக்காட்சி, யூடியூப், கார்ப்பரேட் பத்திரிகைகள், சில சிறிய பத்திரிகைகளும் அவர்களின் தயவுவில் வண்டி ஓட்டுபவர்கள். அரசியல் பதவி போதை கலாச்சாரத்தில் தான் ஊழல் அதிகரித்தது.

அதை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்கள் சொல்வதை நியாயப்படுத்தினார்கள். அங்கு தான் மக்களுக்கு !அரசியல் ஏமாற்றமாகியது. இப்போது ,மக்களுக்கு 50 சதவீதமாவது இந்த அரசியலைப் பற்றிய உண்மை புரிந்ததா? உண்மை தெரியாத வரை வாக்காளர்களுக்கு அரசியல் ஏமாற்றமே!