
நாட்டில் காலத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. அது மக்களின் மன நிலைக் கேற்ப இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது.

அதில் பல சட்டங்கள் காலாவதியான சட்டங்களாகவே இன்றைய தலைமுறைக்கு அது இருந்து வருகிறது. இதனால், மக்களுக்கு பயனில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு பயன் இருக்கிறது. அதனால்,தான் ,இவர்கள் ஒட்டுமொத்தமாக இந்த சட்டங்களில் மத்திய அரசு கை வைக்கும் போது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது,

மத்திய அரசுக்கு எதிராகவும், இவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவது போலவும்,அரசியலமைப்புக்கு எதிரானது என்று இதற்காக குரல் கொடுக்கிறார்கள்.

இதற்கு ஒத்து ஊதும் விதமாக, உச்ச நீதிமன்றம் பல சட்டங்கள் கொண்டு வரும்போது, இடைக்காலத் தடை விதிக்கிறார்கள். இது நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு எதிரானது. இவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் , அரசியல் தெரியாதவர்களை வைத்து அரசியல் செய்யவும், இந்த சட்டங்களை மாற்றக்கூடாது என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இதற்கு உதாரணமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தற்போது மாற்றப்பட்ட வக்ஃ வாரிய திருத்த சட்டம், மற்றும் ஒரு மாதம் வரை உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதாவது பிரதமர் உள்பட யாரேனும் ஜெயிலுக்குள் குற்றவாளியாக இருந்தால்! அவர்களுடைய பதவி தானாகவே பறிக்கப்படும்.

இதேபோல், பொது சிவில் சட்டம், இப்படி பல சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப இந்தியாவில் மாற்றப்பட வேண்டிய சட்டங்கள். அதில் பத்திரிக்கையின் சர்குலேஷன் சட்டமும், தினசரி பத்திரிகைகளுக்கான சட்டமும், சலுகைகளும், மாற்றப்பட வேண்டியது அவசியமான ஒன்று..

இது எல்லாமே இன்றைய காலத்திற்கு ஏற்ப தான் இந்த சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் மற்றும் மக்களுக்கான தேவையானது .மக்களுக்கு பயனளிக்க கூடியது என்ற வகையில் இந்த சட்டங்கள் மாற்றப்படுகிறது. அதை இவர்கள் எதிர்க்கிறார்கள்.

எதிர்ப்பதற்கான காரணம் என்ன? இதேபோல் ,தற்போது தேர்தல் ஆணையம் கொண்டு வந்த வாக்காளர் திருத்த சட்டத்தையும் ,மாநிலத்திற்கு மாநிலம் இந்த எதிர்க்கட்சிகள் எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் இந்த சோசியல் மீடியாவில் புலம்புகின்ற இவர்களின் கைக் கூலிகள், தினசரி எவ்வளவு கூலி வாங்குகிறார்களோ தெரியவில்லை. ஆனால் ,இவர்கள் கூறுவது பார்த்தால், என்னமோ பிஜேபி இந்த நாட்டையும் ,இந்த சட்டத்தையும் மாற்றி ,அரசியலமைப்பை அழித்து விடுவது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் தான் கம்யூனிஸ்ட் முதல் காங்கிரஸ் கட்சி, திருமாவளவன் ,திமுக, மம்த பானர்ஜி, உள்ளிட்ட அனைவரும் இப்படி தான் கதறுகிறார்கள்.
இங்கே இவர்கள் கதற வேண்டிய நோக்கம் என்ன? வாக்காளர்களில் திருத்தம் ஏன் செய்யப்படுகிறது? ஒன்று, வாக்காளர் பட்டியலில் இருப்பவர், இறந்து இருக்கலாம்! அல்லது அந்த ஊரில் இல்லாமல் இருக்கலாம். அல்லது வெளிநாட்டில் இருந்து வந்து குடி பெயர்ந்தவர்களாக இருக்கலாம்.அவர்களின் பெயர்களும், பட்டியலில் இருந்து கொண்டு, இருந்தால் கள்ள ஓட்டு போடுவதற்கு சௌகரியமாக இருக்குமா? அல்லது இந்தியர்கள் அல்லாதவர்களை வாக்களிக்க திட்டமா? இதற்கு தான் இவ்வளவு கதறலா? மேலும்,

இந்த கட்சிக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ,சோசியல் மீடியா கைக்கூலிகள் ,அவர்களின் தொலைக்காட்சி, பத்திரிகைகள் கதறிக் கொண்டிருக்கிறதா?. இப்போதாவது உண்மை மக்களுக்கு புரிகிறதா?
வாக்காளர் பட்டியலில் பெயரை எடுத்து விடுகிறார்கள் என்றால்! எப்படி எடுப்பார்கள்? உயிரோடு இருப்பவர்களுடைய பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கி விடுகிறதா? தேர்தல் ஆணையம் SIR என்ற திட்டத்தின் மூலம் வாக்காளர் சீர்திருத்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் பீகாரில் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும், பல மாநிலங்களில் இது போன்ற போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம், நடவடிக்கை எடுத்துள்ளது .இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதுபோல்தான் இவர்கள் பேசிக்கொண்டு, அதுபோல்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டு, இந்த எதிர்க்கட்சிகள் ஊடகங்களில், சோசியல் மீடியாக்களில், மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவென்று இப்போதாவது மக்களுக்கு புரிகிறதா? சரி அப்படியே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒருவர் உயிரோடு இருக்கும்போது, அவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டால், அதை தேர்தல் ஆணையத்திடம் நிரூபியுங்கள்.

அப்படிப்பட்ட பெயரை சேர்க்க சொல்லுங்கள். இதில் ஒன்றும் தவறு இல்லையே, இதில், இதற்கு ஏன் இவ்வளவு கதறல்? கத்தல் ?எதிர்க்கட்சிகள் எல்லாம் கூட்டு சேர்ந்து போராட்டம், கூட்டம், நடத்த வேண்டிய அவசியமே இல்லையே.
மேலும்,எதிர்க்கட்சிகளின் அரசியல் ட்ராமா எல்லாம் பொதுமக்களை ஏமாற்றும் வேலை. பொதுமக்கள் குழம்ப வேண்டாம் .ஏமாற வேண்டாம். உண்மை நிலை இதுதான்