இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள்! தங்களுடைய வாக்கை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக வாக்களிப்பார்களா? – சமூகநலன் பத்திரிகைகள் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்கள் தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டிய முக்கிய இடைத்தேர்தலாக இது இருக்கிறது.

இதைப் பற்றி பல youtube சேனல்கள், பல பத்திரிகைகள், டிவிகளில் பலவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் கொடுக்கின்ற ஒரு முக்கிய விஷயத்தை இந்த மக்கள் கவனிக்க வேண்டும்.

இன்று வாயில் வருவதெல்லாம் செய்தி என்று, நினைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும் யூடியூப் உலகம், வந்த வரைக்கும் பணத்திற்காக எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள், ஒரு சார்பாக ஆதாயத்தை கருதி வெளியிடும் டிவி சேனல்கள், இது அத்தனையும் தாண்டி சமூக நலன் பத்திரிகைகள், எங்களைப் போன்ற ஏதோ ஒரு சில பத்திரிகைகள் ,இந்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக இதை எழுதுகிறோம் . இந்த ஆட்சி மாற்றம் மக்கள் விரும்பியதால் ஏற்பட்டது.

மேலும்,இது எதனால் என்பது மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான். இரண்டு கட்சிகளின் (அதிமுக ,திமுக) ஊழல் அராஜகங்கள் தமிழ்நாட்டில் தலை விரித்தாடிய நிலையில் மக்கள் மாற்றி வாக்களிக்க வேண்டும் என்று விரும்பி தான் வாக்காளர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு ஆட்சியும் எப்படி இருந்தது ?என்பது ஒரு சில குறிப்புகளாக மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதிமுக ஆட்சியில் கொடுத்ததை வாங்கிக் கொண்டார்கள். ஒரு சில இடங்களில் கேட்டும் வாங்கினார்கள். ஆனால்,திமுக ஆட்சியில் கட்டாயப்படுத்தி ,வாங்கினார்கள். இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்ற அளவு நிர்ணயித்தார்கள். அந்த ஊழல் எல்லை கடந்து விட்டது. மகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

மேலும் ,மக்கள் பணியை செய்யாமலே, பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடத்தப்பட்ட ஆட்சி! திமுக ஆட்சி. இனி அது எந்த காலத்துக்கும் தகுதியற்ற ஒரு அரசியல் கட்சி! என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள்.

இது தவிர,இவர்கள் தலையெழுத்து ஒரு பக்கம் ஒதிக்க வையுங்கள். இவர்களுடைய ஜாதகத்தை சொல்லிக் கொண்டிருக்கிற ஜோசியக்காரர்கள், உடைய கணிப்புகளை ஒரு பக்கம், ஒதிக்க வையுங்கள். மக்களுக்கு எது தேவை? ஆட்சி எப்படி இருக்க வேண்டும் ?மக்களுக்கான ஆட்சி எது ?என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

அந்த வகையில் இன்றைய காலகட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜயின் ஆட்சி ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்றுதான் நம்பி தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இங்கே ஒரு சில மந்திரிகள் செய்யக்கூடிய தவறுகள், அவருடைய ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

ஆனால், அவர் மக்களுக்காக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார். ஆனால், மக்களுக்கு எதுவும் செய்யாமலே ,நாம் சுருட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக, திமுக இருந்தது. அதில் அதிமுகவின் எம்ஜிஆர் ஆட்சி முதலிடம், இரண்டாவது இடம் ஜெயலலிதா, கருணாநிதி ஓரளவுக்கு பரவாயில்லை .ஸ்டாலின், எடப்பாடி ஆட்சி எல்லாம் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அது இரண்டுமே ஊழல்கள் அதிகரித்த ஆட்சி. இன்று அந்த ஊழல் செய்த பணம் ,ஊழல்வாதிகளின் பணம் முடக்கப்பட்டு ,அவர்கள் எங்கே ஒளித்து வைத்தார்களோ தெரியவில்லை. நாட்டில் பணப்புழக்கமே குறைந்துவிட்டது. இந்த ஊழலின் பின்விளைவு சாமானிய ஏழை நடுத்தர மக்கள் எவ்வளவு பாதிக்கிறார்கள்?

தற்போது விலைவாசி உயர்ந்து விட்டது. மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்கள் ஊழல்வாதிகள் பணத்தை முடக்கி விட்டால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. ஊழலின் பின்விளைவு பணப்புழக்கம் இல்லாமல் செய்கிறது. இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய நடுத்தர மக்கள். அது மட்டுமல்ல, இன்று

சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுவது ,இந்த ஊழல்வாதிகளால் தான், நாட்டில் உழைப்பவன், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள், முன்னேற்றம் அடைய முடியாமல் கேள்விக்குறியாகிறது. இந்த செய்திகள் வெளி வராத உண்மைகள். மேலும்,

இன்று எத்தனையோ ஊடகங்கள், தவறான செய்திகளை சொல்லிக்கொண்டு ,இன்று மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் ஊடகம் என்ற கணக்கில் செய்தித் துறையில் ,இன்று அங்கீகாரம் பெற்று ,பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இது எல்லாம் இந்த பத்திரிகை துறையில் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் படித்தவர்களுக்கு தெரியும். இங்கே, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஏற்பட்டு, சுமார் ஒரு ஆறு மாத காலம் தான் ஆகிறது. இதிலும் தவறுகள் நடக்கிறது. அது மறைமுகமாக ,ஏதோ ஒரு சிலர் செய்யலாம் .ஆனாலும், அதிமுக, திமுக ,மாதிரி மோசமான ஆட்சி என்று சொல்வதற்கு இல்லை.

அந்த வகையில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய பொறுப்பு மதுராந்தகம் தாராபுரம் வாக்காளர்கள் ஆகிய உங்களிடம் இருக்கிறது. மேலும், இதில்,பணத்திற்காக வாக்களிப்பவர்கள் இருக்கிறார்கள், அரசியல் கட்சிக்காக வாக்களிப்பவர்கள் இருக்கிறார்கள் ,ஆனால், எல்லோருக்குமே தங்களுடைய குடும்பம் என்று ஒன்று இருக்கிறது, தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் என்று ஒன்று இருக்கிறது, இதையெல்லாம் மீறி தமிழக மக்களின் எதிர்காலம் ஒன்று இருக்கிறது .

இதை கருத்தில் கொண்டு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள், அவசியம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாய்ப்பு கொடுத்தால், அந்த வாய்ப்பு தமிழக மக்கள் நலனில் நீங்கள் அக்கறை காட்டுவதற்கு மிகவும் முக்கியமானது.

மேலும்,சில அரசியல் செயல்பாடுகள் தவறு என்றும் சொல்ல முடியாது. அதிமுகவில் ஜெயித்து விட்டு, இன்று அதே தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒன்று மட்டும் இந்த வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அதிமுக, திமுக இனி தமிழ்நாட்டுக்கு தேவையா? என்பதை சிந்தியுங்கள். வாக்களிக்கும் மக்கள் , இதை சிந்தியுங்கள். அரசியல் கட்சிகள் தேர்தல் வரும்போது மட்டும் மக்களை தேடி வந்து தரிசனம் காட்டுகிறார்கள், நடிக்கிறார்கள் , உத்தமர்களாக பேசுகிறார்கள்.

பிறகு, அந்த மக்களை மறந்து விடுகிறார்கள். மேலும்,ஐந்து வருடம் கழித்து பார்த்துக் கொள்ளலாம். அதுவரை நம்மால் எவ்வளவு முடியுமோ ,அவ்வளவு கொள்ளை அடித்துக் கொள்ளலாம். இது தகுதியற்ற அரசியல் கட்சிக்கு முக்கிய பாடமாக தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் இதை சிந்தித்து வாக்களித்தால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசியல் ஒரு ஸ்திரத்தன்மை பெற்றதாக அமையும் .

மேலும், ஒரு சில மந்திரிகள் செய்யக்கூடிய தவறுகள் முதல்வர் விஜய் அதை அந்த துறைக்கு அவர்கள் தகுதியானவர்களா? என்று தெரியாமல் தான் இப்போது மந்திரிகளாக நியமித்திருக்கிறார்.

செய்தித் துறையிலும், அப்படிதான் ஒரு youtube ரை கொண்டு வந்து போட்டு இருக்கிறார்கள் .அவருக்கும் இதில் அனுபவம் இல்லை. youtube-ல் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம். சினிமாவில் எப்படி வேண்டுமானாலும், டயலாக் பேசி நடித்து விட்டு போகலாம்.

ஆனால், பத்திரிகை அப்படி இல்லை. அதனால், செய்தித் துறைக்கு தகுதியான ஒரு அமைச்சர் முதல்வர் விஜய் நியமிக்க வேண்டும் என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை.

மேலும் ,தாராபுரம் ,மதுராந்தகம் தொகுதி மக்கள், தமிழ்நாட்டு மக்களுக்காக, சிந்தித்து வாக்களியுங்கள். எவ்வளவோ ஆசை வார்த்தைகளையும், குற்றங்களையும், குறைகளையும், எதிர்க்கட்சிகள் சொல்லி இருக்கலாம் .ஆறு மாத காலத்தில் யாராலும், அதை சரி செய்ய முடியாது.

அதனால், தமிழக வெற்றி கழகத்திற்கு உங்களுடைய ஒரு வாய்ப்பு தமிழக மக்களுக்கு அவசியமானது .அதை கொடுங்கள். மக்கள் கொடுத்த வாய்ப்பை எந்த அளவுக்கு? இவர்கள் மக்களுக்காக உழைப்பார்கள் ?என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

என்றும் மக்களுடன்…..! மக்களுக்காக மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *