
2026 அக்டோபர் 22 முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அக்டோபர் 26ஆம் தேதியும் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ,கடலூர் திருவள்ளூர், திருப்பூர், சேலம் ஈரோடு ஆகிய ஏழு மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர, இந்த மழைக்கு தற்போது மின்னல் தாக்கி ஐந்து பேரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். மக்கள் மழைக்காலங்களில் வெளியில் செல்வது தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம்.