இன்று சாமானிய நடுத்தர மக்களின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சி கேள்விக்குறியானது?எதனால்? – கார்ப்பரேட் பத்திரிகை , தொலைக்காட்சிகள்.

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram

இன்றைய அரசியல் எந்தெந்த அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் அரசியலை முன்னெடுக்கின்றன? அது கூட தெரியாமல்! இந்த கார்ப்பரேட் அரசியல் பின்னாடி சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் .அதுதான் மிகப்பெரிய அவர்களுடைய அழிவும், வாழ்க்கையின் போராட்டங்களும், அதை நோக்கி நகர்கிறது.

 ஒரு பக்கம் இவர்கள் ஜாதியால் மற்றொரு பக்கம் மதத்தால்,சுயநல அரசியலால்,ஓட்டுக்கு பணமும், இவர்களை இந்த கார்ப்பரேட் அரசியல் விலை பேசி வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் அரசியல் என்றால் என்ன? அது கூட தெரியாத செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் தமிழ்நாட்டில் பத்திரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி மக்களிடம் இதைப் பற்றி உண்மையை விளக்க முடியும்? 

நாட்டில் ஒரு லட்சம் சாமானிய பத்திரிகைகள் இருந்தும், அதில் 100 பத்திரிகைகள் கூட இந்த கார்ப்பரேட் அரசியலையும், கார்ப்பரேட் அரசியல்வாதிகளையும் எதிர்த்து பத்திரிகை நடத்தவில்லை. சாமானிய மக்களுக்காக? உழைக்கும் மக்களுக்காக? இவர்கள் பத்திரிகை இல்லை. யார் பின்னால் போனால் பணம் வரும்?எந்த கட்சிக்கு ஆதரவாக செய்திகளை போட்டால் பணம் வரும்? கட்டப்பஞ்சாயத்து செய்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் ?அரசியல் கட்சிகளை போல் யாருக்கு வேண்டுமானாலும் இந்த பத்திரிகையின் அடையாள அட்டையை விற்று பணம் சம்பாதித்து எப்படி? 

இவர்களெல்லாம் ஒரு சங்கத்தின் அடையாளமாக காட்டி, இப்படி இந்த பத்திரிகைத்துறை இதுதான் என்று பேசிக் கொண்டிருக்கலாம். எந்த நோக்கத்திற்கு பத்திரிக்கை? என்பது கூட தெரியாமல், இன்று இப்படிப்பட்ட பத்திரிகைகள் இருந்து கொண்டிருக்கிறது. இவர்களில் ஒரு நூறு பேராவது தேர்வார்களா? இந்த 100 பேராவது செய்தி துறையை நோக்கி இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினால், அரசாங்கத்தின் சலுகை, விளம்பரங்கள் வாங்க முடியும்.மேலும், ஒரு பக்கமே மக்கள் என் வரி பணம் வீணடித்துக் கொண்டிருக்கும் வேலைமட்டுமல்ல இது, கார்ப்பரேட் அரசியலுக்கு, கார்ப்பரேட் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வேலை பார்க்கிறார்கள்.

 அவர்களின் வளர்ச்சிக்கு என்ன? தேர்தலில் எப்படி பேசி மக்களிடம் ஏமாற்றி ஓட்டு வாங்க முடியும்? எதை பேசினால் மக்கள் ஏமாந்து வாக்களிப்பார்கள்? எந்தக் கட்சி தலைவர் சொல்வதை நியாயப்படுத்துவது? எந்த கட்சி தலைவர் சொல்வதை நியாயம் இல்லாதது என்று மக்களிடம் சொல்வது? இந்த பொய்யும், மெய்யும் நியாயப்படுத்துவதில் தான் இந்த கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளோடு ஒருவரை ஒருவர் யார் இதில் முந்துகிறார்கள்?அரசியல். இந்த பேச்சு எல்லாம் அரசியல் தெரியாத முட்டாள்களிடம் தான்,இவையெல்லாம் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது. 

அரசியல் தெரிந்தவர்கள், படிப்பவர்கள் இதை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டார்கள் .அதனால் தான், இந்த சர்குலேஷன் இப்போது அடிபட்டுவிட்டது. அதுவும் எங்களைப் போன்ற ஒரு சில பத்திரிகைகள், இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என்பது மக்களுக்கும் தெரியும். அதனால், அரசியலில் மக்களை எப்படி ஏமாற்றலாம்? எப்படி கவிழ்க்கலாம்? இந்த அரசியலுக்கு துணை போக கூடிய இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் என்ன தவறு செய்தாலும், எவ்வளவு ஊழல் செய்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகை, விளம்பரங்கள் தாராளமாக கிடைத்தால் போதும் என்ற ஒரு வியாபாரமும், ஊழலும், சுயநலமும் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் உண்மை முகம்.

அதனால் தான் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் அவர்கள் நிர்வாகிகள் மட்டுமே முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி சாமானிய மக்கள் பத்திரிகைகளுக்கு நல்லது செய்வார்கள்? இயக்குனர் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்களா ?பத்திரிகை என்ன என்றால் படிக்காத கூட்டம், சோசியல் மீடியாவில் பேசிவிட்டு போவதெல்லாம் ,பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறது, இது அதைவிட கொடுமை. இது அவ்வளவும் கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு ஒரு நன்மை தான். ஏனென்றால் நம்முடன் போட்டி போட இந்த பத்திரிகைகள் தகுதி இல்லை என்று அவர்கள் முடிவு. போட்டி போட தகுதியானவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரத்தின் முடிவு .அதனால், உங்களுடைய உண்மை முகத்தை மக்கள் அதிகாரம் மக்களிடம் தெரிவித்து இருக்கிறது. இது உண்மையா ?பொய்யா? என்பதை மக்களே ஆய்வு செய்து பார்த்து கொள்ளட்டும் .

மேலும், இது பற்றி நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. அவர்கள் ஆய்வு செய்து பார்க்கட்டும். கட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து பார்க்கட்டும். ஏன் ?புதிதாக வந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் கட்சி தலைவர் விஜய் கூட இதை ஆய்வு செய்து பார்க்கட்டும் .இதுதான் கார்ப்பரேட் அரசியலில் வியாபார நோக்கம். இதற்கு பக்கபலமாக கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் செய்து கொண்டிருக்கிறது. அதற்காக அவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் தாராளமாக கிடைக்கிறது. மேலும், இங்கே உண்மையை எழுதி, நல்ல விஷயங்களை கொடுத்து, இந்த உண்மைகளை எல்லாம் மக்களுக்கு புரிய வைப்பது கடினமாக இருக்கிறது.

ஏனென்றால் பணம் உழைக்காமல் எப்படி சம்பாதிக்கலாம்? அதுதான் இன்றைய முக்கிய தொழில். ஒரு அரசு அதிகாரியாக இருந்தாலும், சாதாரண ஏழையாக இருந்தாலும், கூலி வேலைக்கு சென்றாலும், உழைக்காமல் பணம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இங்கே அரசியலில் உழைப்பு என்பது குறைவு. அவர்களுக்கு பேச்சு தான் மூலதனம். அதனால் பேச்சால் மக்களை எப்படியெல்லாம் பேசி கவர முடியும்? எப்படி எல்லாம் நல்லவர்களாக தன் பேச்சால் காட்ட முடியும்?இதை தான் இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் செய்திகள் என்று மக்களிடம் ஷோ காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 சில தினங்களுக்கு முன் பிஜேபியில் அமர் பிரசாத் ரெட்டி கார் பந்தயத்தை பற்றி பேசுகிறார். கார்பந்தயம் நமக்கு தேவைதானா? தேவையற்றது. ஆனால், அவருடைய பேச்சு, அரசியல் ஷோ பேச்சு போல தான் இருந்தது . இதையெல்லாம் பேசுகின்ற இவர்கள், இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஏன் பேச முன் வரவில்லை ? இவர்களுடைய கட்சி மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறது. இதைப் பற்றி ஒரு பிஜேபி கட்சியினர் கூட பேச தகுதி இல்லையா? இவர்களுக்கு ? அதேபோல் இன்று திமுக ஆளும் கட்சியாக இருக்கிறது. பேசுவதெல்லாம் சாமானிய, நடுத்தர மக்கள் என்று பேசுவார்கள். ஆனால், செயல்பாட்டில் கார்ப்பரேட் அரசியலை தானே முன்னே எடுக்கிறார்கள்.

இதுவரையில் இந்த சாமானிய பத்திரிகைகளுக்கு என்ன செய்தார்கள்? என்பதை மக்களிடம் உண்மையை சொல்ல சொல்லுங்கள். சட்டம் கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளுக்கு மட்டும் சொந்தமானதா? அந்த சட்டப் படியும் சர்குலேஷன் இல்லாமல் இருக்கும் போது கூட ,மேலும், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகையாக இருக்கும் போது கூட, அந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் மக்கள் என் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்க பத்திரிக்கை சட்டம் சொல்கிறதா?

 இங்கே அரசியல் என்பது நடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு பணக்காரன் எந்த விலையை ஆக இருந்தாலும் ஒரு பொருளை வாங்கி அவன் சாப்பிடுவான்.ஆனால் ஏழை ,நடுத்தர மக்களால் அது முடியாது . இன்றைய விலைவாசி உணவு பொருள் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. பழங்கள், மளிகை பொருட்கள், ஓட்டல் உணவுகள் இவை அனைத்தும் விலை ஏற்றம். இது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சுமை .

மேலும், படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை, அவர்களுக்கு அந்த வேலைக்கேற்ற ஊதியம் இவை எதுவுமே இன்று இல்லை .கார்ப்பரேட் கம்பெனிகள் பிஇ படித்த இளைஞர்களுக்கு புதிதாக செல்பவராக இருந்தாலும் அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் தர வேண்டும்?பல ஆண்டுகாலம் பட்டதாரி ஆசிரியர்கள் பகுதிநேர ஆசிரியர்களாக வேலை செய்துவிட்டு, மீண்டும் எங்கே போய் அவர்கள் வேலை தேடுவார்கள்? அவர்களுக்கு கொடுக்கக்கூடிய ஊதியம் படித்த பட்டத்திற்காவது ஒரு மரியாதை இருக்க வேண்டாமா?மேலும், அரசியல் கட்சியினரின் பேச்சுக்களை தொலைக்காட்சியில் விவாதம் செய்யக்கூடிய தொலைக்காட்சிகள் இருக்கிறது. ஆனால், மக்கள் பிரச்சனையும், மக்கள் படுகின்ற துயரத்தையும் அவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளையும், பேச எத்தனை தொலைக்காட்சிகள் இருக்கிறது? என்பதை மக்கள் சிந்தியுங்கள். அப்போது புரியும் .இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் யாருக்காக இருக்கிறது? என்பது நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

இதிலிருந்து வெளியே வாருங்கள். உண்மையை சிந்தியுங்கள். கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் இந்த அரசியல் கட்சியினர் பேசுவது, பேசிவிட்டு போவது, எல்லாம் அரசியல் அல்ல. அவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும், அரசியல் கொடுக்கக்கூடிய அரசியல் கட்சியும், அரசியல் கட்சியின் தலைவனே உண்மையான அரசியல் தலைவன்.அது மத்தியில் ஆளும் பிஜேபியா? மாநிலத்தில் ஆளும் திமுக வா? எந்த அரசியல் கட்சி என்பதை வாக்களிக்கும் முன் மக்கள் சிந்தியுங்கள். குடிகாரனிடம் வாக்கை கொடுத்தது தவறு .பணம் வாங்கி ஓட்டு போடும் மக்களிடம் ஓட்டுரிமை கொடுத்தது தவறு. எதுவுமே தெரியாத மக்களிடம் ஓட்டுரிமை கொடுத்தது தவறு . ஜாதி அரசியல் பேசிக் கொண்டிருக்கும் திருமாவளவன் போன்ற கட்சியினரையும் ஒன் இந்தியா போன்ற இணையதளம், அவரை அனைத்து ஜாதியும் அரசியல் கட்சியாக ஏற்றுக் கொண்டது. என்று சான்று அளிக்கும் அளவுக்கு பத்திரிக்கை துறை எவ்வளவு தரம் தாழ்ந்து இருக்கிறதா?, இதுதான் கார்ப்பரேட் மீடியாக்களின் அரசியல் ஏமாற்று வித்தை.

 இதை யார் கேட்டது? எந்த மக்கள் இதை கேட்டார்கள்? நேற்று கூட செய்தி துறை இயக்குனரை சந்தித்தேன். அவர் உங்கள் கோரிக்கை என்ன? எங்கள் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். அவர் சொல்வது ஒரே விஷயம் சர்குலேஷன்.அவர்கள் சொல்வது பத்திரிக்கை சட்டம், அதாவது விதி. இதை மாற்ற முடியாது. இந்த விதியை மாற்றினால் கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு அது பெரிய இடியாக இருக்கும். இதை வைத்து தான். மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்கள் பெயரில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 நான் சொன்னேன் சர்குலேஷன் என்பது இன்று எந்த பத்திரிகையிலும் இல்லை. எப்படி சர்குலேஷன் காட்டி? இந்த சலுகை, விளம்பரங்கள் மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இதுதான் என் கேள்வி? அவர் சொல்கிறார் இது அரசு ஜீ வோ. அதாவது சட்டம் இந்த பத்திரிகையின் ஒரு சார்பாக இருக்கக்கூடிய சட்டத்தை தான் மாற்ற வேண்டும் என்று சொல்கிறேன். மக்கள் வரிபணம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கிறது. இது சர்குலேஷனை வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. மக்கள் பத்திரிகையை விரும்பி வாங்கி படிக்கவில்லை. காரணம் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் இதை பயன்படுத்தும் அளவிற்கு பத்திரிகையை விரும்பி வாங்கி படிக்கவில்லை.

 அப்படியாக வாங்கி படிப்பவர்கள் யார்? என்றால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் இருக்கின்ற கட்சிக்காரர்கள், டோட்டல் ஐந்து சதவீதம் பேர் இருப்பார்கள். அவர்களும் அரசியல் கட்சி செய்திக்காகத்தான் அதை வாங்கி படிக்கிறார்கள்.

 மேலும் முடி திருத்தும் கடைகளில் இந்த பேப்பர் வாங்குகிறார்கள். ஏனென்றால், அவர்களுடைய வாடிக்கையாளர்கள் ஏதோ இந்த பேப்பரை பார்த்துக் கொண்டு, நேரத்தை கடத்திக் கொண்டிருப்பார்கள் என்று தான் அதை அவர்கள் வாங்குகிறார்கள். இதுதான் இன்றைய பத்திரிகை சர்குலேஷன். இதை வைத்து பல ஆயிரம் கோடிகளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களுடைய செய்திகளால் மக்களுக்கு என்ன பயன்? இதை செய்தித் துறை அதிகாரிகள் நிரூபிக்க முடியுமா? இந்த கேள்வியை RTI ல்  கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை .அதுவும் அரசியல் சார்ந்த கட்சி பத்திரிகைகளும், இதிலே சர்குலேஷன் காட்டி இந்த சலுகை விளம்பரங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

அதனால்தான், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை முதலாளிகளின் நிர்வாகிகளை மட்டுமே இந்த திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் கமிட்டியில் சேர்க்கப்பட்ட முக்கிய உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்படி சாமானிய பத்திரிகைகளுக்கு நல்லது செய்வார்கள். அரசு அதிகாரியே நினைத்தாலும் நல்லது செய்ய முடியாது ஒரு பக்கம் .இந்த சாமானிய பத்திரிகைகள் நடத்தக்கூடியவர்கள் தகுதி, திறமை, இதையெல்லாம் வெளிக் கொண்டு வரும் அளவுக்கு அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஏதோ இதை வைத்து பிழைப்பு நடத்தவும், அரசியல்வாதிகளோடு கைகோர்த்துக்கொண்டு பணம் பார்க்கவும், இவர்கள் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமூக அவலங்களை பத்திரிகையின் உண்மைகளை, இதைப்பற்றி சொல்லக்கூடிய இந்த லட்சம் பத்திரிக்கையில் எத்தனை பத்திரிகைகள் இருக்கிறார்கள்? எத்தனை பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள்? என்பது தான் இங்கே கேள்வி? 

லட்சத்தில் ஒருவர் கூட இல்லையா? என்பதுதான் என்னுடைய கேள்வியாக இருக்கிறது. என்னை பார்த்து காப்பி அடித்தையாவது ஒரு நூறு பேர் எழுதுவார்களா? என்று பார்க்கிறேன் அதைக் கூட செய்யவில்லை .கார்ப்பரேட் பத்திரிக்கையை பார்த்து காப்பி அடித்து, நடத்திக் கொண்டிருக்கும் இவர்கள் இந்த உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க கூட தகுதி இல்லாமல் இருக்கிறார்களே, என்று எனக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. இங்கே மிகப் பெரிய ஒரு பத்திரிகை ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து ஒரு பத்திரிக்கை கேள்வி கேட்பதால் அரசாங்கமும் அலட்சியமாக இருக்கிறது. மக்களுக்கும் இந்த உண்மைகள் அதிக அளவில் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. 

அதனால், இந்த பத்திரிகைகள் உங்களுடைய சுயநலத்தை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் அதிகாரத்தின் பின்னால் வந்தால், பத்திரிக்கை துறையில் நடக்கக்கூடிய ஊழலுக்கு எதிராக நம்முடைய எதிர்ப்பை காட்டி, அரசாங்கத்திடம் இருந்து இந்த சலுகை, விளம்பரங்கள் பெற முடியும். பேருக்கு நானும் பத்திரிக்கை, நானும் சங்கம், இது எல்லாம் மக்களை ஏமாற்றும். வேலை அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை.உழைக்காமல் பத்திரிக்கை துறையில் வளர்ச்சி பெற முடியாது. இங்கே உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை என்பதுதான் இந்த பத்திரிகைகள் புரிந்து கொள்ள வேண்டும். 

இது தவிர, இன்றைய சர்குலேஷன் என்பதை பத்திரிகையின் இணையதளங்களை தான் சர்குலேஷனாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மத்திய, மாநில அரசுகள் சோசியல் மீடியாவாக நினைத்து பேசுகிறார்கள். ஒரு பத்திரிகையின் இணையதளத்தில் நான் மட்டும்தான் செய்தி போட முடியும். வேறு யாரும் அதில் செய்தி போட முடியாது. அடுத்தது google நிறுவனம் பத்திரிக்கை துறைக்கு சமூக நன்மையை கருதி, யாரெல்லாம் பத்திரிகையின் RNI வாங்க பத்திரிகை நடத்துகிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் இந்த பத்திரிகையின் பெயரை ,வேறு நபர்கள் இணையதளத்தில் வெளியிடக்கூடாது. அதாவது இந்த பெயரில் வேறு யாருக்கும் உரிமை வழங்கக் கூடாது. இதை நாட்டு மக்கள் நலனுக்காக கூகுள் நிறுவனம் இந்த ஒரு நல்லதை செய்ய வேண்டும். 

அப்படி அவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால், அரசாங்கத்தின் இணையதளத்தை பத்திரிகைகள் பயன்படுத்திக் கொள்ள அதற்கேற்ற என்ன கட்டணமோ, அவர்களுடைய சேட்டிலைட்டில் மத்திய அரசு இதை வழங்க வேண்டும் .அப்போதுதான் இந்த பத்திரிகையின் தரம்? தகுதி என்ன? என்பது மக்களுக்கும் புரியும் .அரசு துறைக்கும் புரியும். இதைப் பற்றி அமைச்சர்களுக்கு ஒன்றும் புரியாது. இதை ஐஏஎஸ் அதிகாரிகள் தான் புரிய வைக்க வேண்டும். ஏனென்றால் விஷயங்களை சொல்லும்போது அவர்கள் தான் உடனே புரிந்து கொள்கிறார்கள் என்பதை பேசும்போது தெரிகிறது. இவர்களுக்கு சொல்லி கூட புரிய வைக்க முடியாது. ஏனென்றால் இவர்களுடைய நோக்கம் அதுவல்ல, எப்படி ஓட்டு வாங்க வேண்டும்? எப்படி பதவி வாங்க வேண்டும்? எப்படி பணம் சம்பாதிக்க வேண்டும்? எப்படி 100 தலைமுறைக்கு சொத்துக்களை சேர்க்க வேண்டும்? இதுதான் இவர்களுடைய நோக்கம் .

அதனால், அரசியல் தவறான பாதை. அதே போல் மக்கள் இந்த தவறான பாதைக்கு பக்க பலமாக இருந்தால், உங்கள் அழிவை நீங்களே தேடிக் கொள்வீர்கள். வேறு யாரும் அல்ல. இந்த உண்மையை புரிந்து கொள்வது, அலட்சியப்படுத்திக் கொள்வது, உங்களுடைய நலன் சார்ந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் ,நல்ல விஷயங்களுக்காக நல்ல சக்திகள் ஒன்று சேர வேண்டும் . அப்படி சேரக்கூடிய சக்திகள், இந்த நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள நீதிபதிகள் தான் .இவர்கள்தான் கடைசியாக இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த முடியும். உச்ச நீதிமன்ற நீதிபதி நினைத்தால் இதை நிச்சயம் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும் . அவரிடம் கொண்டு செல்லக்கூடிய நீதி அரசர்கள் ஒன்று கூடி,இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும்,கார்ப்பரேட் அரசியலுக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று எல்லாம் வல்ல இறைவன், இதற்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *