ஏழை, எளிய நடுத்தர மாணவர்களே! அரசியல் கட்சியினரின் நீட் அரசியலுக்குள் பலிகடா ஆகி விடாதீர்கள்- விழித்துக் கொள்ளுங்கள் மாணவ சமுதாயமே!

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது ,மாணவர்களை வைத்து நீட் பிரச்சனையை தூண்டிவிட்டு, அவர்களை போராட வைத்து, அதற்காக அப் பாவி ஏழை எளிய, நடுத்தர மாணவர்கள் பலியானது தான் மிச்சம்.

அதேபோல், தற்போது அரசியல் பின்னணி கொண்ட மாணவர்கள் நேற்று நள்ளிரவு சிபிஐ அலுவலகம் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் போராட்டம், நீட் தேர்வு ரத்து மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் குறித்து போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது போலீஸ் அவர்களை இரவோடு, இரவாக குண்டு கட்டாக தூக்கி உள்ளது.

இதே ஆட்டத்தை காங்கிரஸ் ராகுல் காந்தி, வடநாட்டில் ஆரம்பித்திருக்கிறார். அதனால் பாதிக்கப்பட போவது ஏழை எளிய நடுத்தர, மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை. இவை அத்தனையும் கேள்விக் குறியாக போகிறதா?

நீங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கலாம் போராடலாம் .அது தனிப்பட்ட மாணவர்கள் போராட்டமாக இருக்க வேண்டுமே ஒழிய ,அதற்குள் அரசியல் கொண்டு வந்து விட்டால், நிச்சயம் அது அரசியல் பிரச்சினையாகி விடுகிறது.

அதனால் ,இங்கும் அப்படிப்பட்ட போராட்டத்தை கையில் எடுக்க யார் முன்னிற்பார்கள் என்றால்? அரசியல் கட்சி பின்னணி கொண்ட மாணவர்கள்தான் அதற்கும் முன் நின்று போராடுவார்கள்.

மேலும்,அவர்கள் அவங்க அப்பா ,அம்மா, உறவினர்கள் அரசியலில் கொள்ளை அடித்து, சம்பாதித்து வைத்திருப்பார்கள். தாராளமாக செலவு செய்வார்கள். பிறகு காணாமல் போய்விடுவார்கள்.

ஆனால், இவர்களை நம்பி இறங்கிய ஏழை அப்பாவி நடுத்தர, மாணவர்கள் இவர்கள் பேச்சை நம்பி வாழ்க்கையை பாழாக்கி கொள்வார்கள் .இதுதான் மாணவர்களின் போராட்டம் ,அந்த காலத்தில் இருந்து ,இந்த காலம் வரை இப்படித்தான் தொடர்கிறது.

மேலும், அதை கைவிட்டு, விட்டு ஆக்கபூர்வமாக படித்து உங்களால் முடிந்து அளவுக்கு, வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுங்கள் அது தான் நீங்கள் உங்களுடைய பெற்றோருக்கு, உங்கள் குடும்பத்திற்கு, வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

தவறான பாதையில் சென்று, அரசியல் கட்சிகள் அதிலும், தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கிறது. அவை அத்தனையும் சுயநலத்திற்காகத்தான் இருக்கிறதே ஒழிய, பொதுநலத்திற்கு எதுவும் இல்லை. அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை.

எனவே, இந்த அரசியல் கட்சிகளை நம்பி இருப்பதை விட உங்களை நம்பியும் உங்கள் உழைப்பை நம்பியும் கடவுளை நம்பியும் வாழ கற்றுக் கொள்ளுங்கள் விழித்துக் கொள்ளுங்கள் மாணவர் சமுதாயமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *