
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கையாக இருக்க தமிழக மக்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளது.

அதாவது மழை நீர் வீட்டை சுற்றி தேங்கி கிடப்பதை மற்றும் கழிவுநீர் தேங்குவதை, இது எல்லாம் டெங்கு கொசு வளர்ச்சிக்கு மக்களே உதவி செய்வது போல் இருக்கும் .
இதையெல்லாம் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அதை உடனடியாக,அப்புறப்படுத்தி உங்களுடைய வீட்டைச் சுற்றி சுகாதாரமாக, தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
இது தவிர ,டெங்கு காய்ச்சல் வந்தால்! உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும், சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .
மேலும்,இதுவரை 16, 500 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவிக்கும் தகவல். தவிர ,நேற்று ஒரே நாளில் 253 பேருக்கு டெங்கு காய்ச்சலால் , பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களும் ,டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க ,சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
