
நீதித்துறையில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த நீதியரசர் முன்னாள் கற்பக விநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நீதியின் நிழலாக வெளிவர உள்ளது.
மேலும்,அவர் நீதி அரசர் என்பதற்கும் மேலாக மனித நேயம் மிக்க ஒரு மாமனிதர். இவர் எத்தனையோ மேடைகளில் தன்னுடைய வாழ்க்கையை ,மாணவர்களுக்கு தான் அனுபவித்த சோக கதைகளை எல்லாம் சொல்லி, ஊக்கிவிப்பார்.
மேலும்,நடுத்தர மக்கள் வாழ்க்கை போராட்டத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று அதற்காக குரல் கொடுத்தவர். தவிர,நீதித்துறையில் குற்றவாளிகளை திருத்தியவர். அதுமட்டுமல்ல, அரசியலில் குற்றங்களை செய்து விட்டு, குற்றத்திலிருந்து தப்பிக்க, அவர்கள் எத்தனையோ முறை இடைத்தரகர்கள் மூலம் அவரை அணுகியபோது, எந்த விதத்திலும் சமரசம் ஆக மாட்டேன் என்று வெளிப்படையாக சொன்னவர். அதை என்னிடமும் தெரிவித்துள்ளார்.நீதித்துறையில்
மேலும், நீதித்துறையில் தனக்கென ஒரு மாண்பை ஏற்படுத்திக் கொண்ட நீதி அரசர் கற்பக விநாயகம், இன்றைய இளைய தலை முறை வழக்கறிஞர்களுக்கு, இவர் ஒரு இன்ஸ்பெகரேஷன் அதாவது ஒரு முன்மாதிரி என்று ஒரு பெண் வழக்கறிஞரும் சொல்லி கேள்விப்பட்டேன்.
எனவே,இப்படிப்பட்ட சாமான்ய மனிதரின் ஒரு வாழ்க்கை சரித்திரமாகிறது என்று நினைக்கும் போது உண்மையிலே பாரட்டப்பட வேண்டிய ஒரு விஷயம் . அதனைத் தகுதியும் அவருக்கு உண்டு. மேலும்,இவர் சாய்பாபாவின் தீவிர பக்தர். எந்த வேலை செய்வதற்கு முன்னும், சாய் பாபாவை வணங்கிவிட்டு தான் பேசுவார், செய்வார்.
இப்படிப்பட்ட ஒரு மகா ஆத்மா !பிறப்பின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்று சொல்லும்போது, நேற்று கூட நண்பர் வழக்கறிஞரிடம் இது பற்றி பேசினேன். உண்மையிலேயே அவர் கொடுத்து வைத்தவர் என்றுதான் சொன்னேன். அவர் வாழ்க்கையின் வரலாறு திரைத்துறையில் வெற்றி முரசு கொட்டட்டும் .சாய்பாபாவின் அருளோடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
