
கடந்த திமுக, அதிமுக, தமிழ்நாட்டில்! 50 ஆண்டு காலத்திற்கு மேலாக ஆட்சி செய்தது .ஆனால், பத்திரிக்கை துறையில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. ஆனால்,பத்திரிக்கை துறை! கார்ப்பரேட்டுகளின் துறையாக மாற்றியதுதான் இவர்களின் சாதனை.

ஏனென்றால், இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் தான் ஊழலுக்கு ஒத்து ஊதி வருவார்கள். இதனால், தமிழகத்தில் ஊழல்வாதிகள் அதிகரித்தார்கள், ஊழல்கள் அதிகரித்தது ,உழைப்பவன் முன்னேற்றம் தடைப்பட்டது. ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றம் அதிகரித்தது. இதுதான் பத்திரிக்கை துறையில் கார்ப்பரேட் பத்திரிகைகளின் சாதனை.

இதை பத்திரிக்கை துறையில், விவரமானவர்கள் ஆய்வு செய்து பார்த்து கொள்ளட்டும். அவர்கள் ஆய்வு செய்தாலும், ஆய்வு செய்யவில்லை என்றாலும், இரண்டு கட்சிகளின் ஊழல் வரலாறுகள், மக்களிடம் தற்போது பேசப்பட்டு வருவது தான் சாட்சி!

மேலும், தற்போது ,தமிழக வெற்றி கழக ஆட்சி மாறி இருந்தாலும் ,இன்றும் இதே கார்ப்பரேட்டுகள், இந்த தமிழக வெற்றி கழகத்திற்கு ஜால்ராவாக இருந்து சலுகை, விளம்பரங்கள் வாங்கி, மீண்டும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்களுடைய நிருபர்கள், கோட்டை வட்டாரங்களை சுற்றி வருகிறார்கள்.

மேலும்,அங்குள்ள நிருபர்கள் செய்தியை கொடுக்கிறார்களோ, இல்லையோ ,அதிகாரிகளுக்கு அட்டனன்ஸ் கொடுத்து, தினமும் அவர்களுக்கு ஒருவரைப் பற்றி, ஒருவர் புறம் சொல்லிக் கொண்டு, அவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது? பத்திரிகைகளை பற்றி புறம் சொல்லிக் கொண்டு, அந்த பத்திரிகைகளுக்கு புரோக்கர் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
மேலும்,நாங்கள் எல்லாம் நிருபராக கார்ப்பரேட் பத்திரிக்கையில் பணியாற்றியபோது, இங்கே தலைமை நிருபர் என்ற போர்வையில் அதிகாரிகளுக்கு, 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கொடுப்பார்கள் .நடிகைகளை கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்த கார்ப்பரேட் கம்பெனி முதலாளி பண முடிப்பு கொடுப்பார். இப்படி எல்லாம் கார்ப்பரேட் பத்திரிகைகளின் குறுக்கு வழி முன்னேற்றம்.

இதை ஏன் சொல்கிறேன்? என்றால்! இப்போதுதான் இந்த செய்தி துறை! நேர்மையான அதிகாரிகளால், மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. அப்போதும் அரசியல் உள்ளே வைந்து ,இந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கக் கூடாது. இணையதளங்களுக்கு கொடுக்கக் கூடாது .அதை சோசியல் மீடியா என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இந்த கதை எல்லாம் யார் விடுவார்கள்? என்றால் திமுக ,அதிமுக, கட்சிக்காரன் தான் விடுவான் .ஆனால், பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய சில அதிகாரிகள் ,அவர்களுக்கு உடந்தையாக இருப்பதால் ,சோசியல் மீடியாவுக்கும், இணையதள பத்திரிகைக்கும் ,அர்த்தம் தெரியாதவர்கள் என்றுதான் அவர்களை சொல்ல வேண்டும்.

மேலும்,தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் பத்திரிக்கை துறையில் மாற்றம் தேவை! என்பதுதான் சமூக நலன் பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தவிர,இதில் செய்தியின் முக்கியத்துவம் மிகவும் முக்கியமானது. செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல், சர்குலேஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பத்திரிக்கை துறையை இந்த கார்ப்பரேட் பத்திரிகைகள் ஏமாற்றி வந்தது .அது கடந்த திமுக, அதிமுக, ஆட்சியில் இதை தான் செய்து பல கோடி ரூபாய்க்கு விளம்பரங்களையும் ,சலுகைகளையும் அனுபவித்தார்கள்.

மேலும்,எப்படி இப்போது திமுகவும், அதிமுகவும் தாராபுரம் ,மதுராந்தகம் தொகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் புலம்புகிறார்களோ ,அதே போல் தான், இவர்களும் புலம்பி கொண்டு இருக்கிறார்கள்.
இங்கே இந்த பத்திரிக்கைகளுக்கு எல்லாம் சலுகை, விளம்பரங்கள் கொடுத்து விடப் போகிறார்கள்? கொடுத்து விட்டால்! இவர்களும் நமக்கு போட்டி தானே என்று நினைக்கிறார்கள்.

அறிவு சார்ந்த ஒரு துறையில்! பணத்தை வைத்து போட்டி ,போட்டுக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் தற்போது கலக்கத்தில் தான் இருக்கிறார்கள்.

மேலும்,தற்போது வந்திருக்கும் இயக்குனர் அருண் தம்புராஜ் இதற்கு இடம் கொடுக்கவில்லை என்று தான் தற்போது வெளிவரும் தகவல். அவர் அடித்தட்டு பத்திரிகைகளை மேலே கொண்டு வர வேண்டும் என்று சொல்வதாக தகவல்.

அதுமட்டுமல்ல அடிஷனல் சீஃப் செகரட்டரி (additional chief secretary Vijay Kumar IAS ) விஜயகுமார் ஐஏஎஸ் மற்றும் தமிழக முதல்வரின் பி ஏ க்களில் ஒருவரான அண்ணாதுரை ஐஏஎஸ், இந்த மாற்றத்திற்கு முக்கியமானவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால்! இவர்களுக்கு ஒரு செய்தியை சொன்னவுடன் ,அதை படித்துப் பார்த்து, உடனே விஷயத்தை புரிந்து கொள்கிறார்கள். கடந்த காலங்களிலும், புரிந்தவர்கள் உண்டு. ஆனால் ,அங்கே அரசியல் வலுவாக இருந்தது .அதனால் ,அவர்கள் சொன்னாலும் அது எடுபடவில்லை.

மேலும் ,நான் பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் காலத்தில் இருந்து ,வந்த அத்தனை இயக்குனர்களை சந்தித்து, இது விஷயமாக பேசி இருக்கிறேன். எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். நீங்கள் சொல்வது நியாயம் .ஆனால், அரசியல் அதை ஏற்கவில்லை.
மேலும்,கடைசியாக இருந்த வைத்தியநாதன் ஐஏஎஸ் ,உங்களுக்காக மூன்று முறை நான் பேசி இருக்கிறேன் என்று தெரிவித்தார். அப்படி என்றால், செய்தித் துறையில் ஒரு நியாயத்தை பின்பற்றி ,இந்த சலுகை ,விளம்பரங்கள் கொடுக்கவில்லை என்பது ஊர்ஜிதம் ஆகிறது.

மேலும், அரசு விளம்பரம் கொடுப்பதில் எதற்கு ஏஜென்சி தேவை? அரசு விளம்பரத்தை நேரடியாக கொடுக்க முடியாதா? எதற்காக ஏஜெண்டுகள் இடம் கொடுக்க வேண்டும்? இந்த ஏஜெண்டுகளால் தான் செய்தித் துறையில் மிகப்பெரிய ஊழல்கள் நடக்கிறது.
மேலும்,செய்து துறையில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் ஏஜென்ட்களை ஒழிக்க வேண்டும். ஏஜென்ட்களை ஒழிக்காமல், செய்து துறையின் ஊழலை ஒழிக்க முடியாது.

அதனால், இந்த உண்மையை செய்தித் துறையின் இயக்குனர் அருண் தம்பராஜ், மற்றும் அண்ணாதுரை ஐஏஎஸ் தமிழக முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்று, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிகைகளின் முக்கிய கோரிக்கை.

எனவே, காலத்திற்கு ஏற்றவாறு ,செய்தி துறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் .அதற்கு இணையதள பத்திரிக்கைகளுக்கு கொடுக்க வேண்டிய சலுகை, விளம்பரங்கள், அக்ரடேஷன் கார்டு, மற்றும் பஸ் பாஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், பத்திரிகையின் தகுதிக்கு தக்கவாறு, கொடுக்க வேண்டும் என்பது தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பிலும், சமூக நலன் பத்திரிகைகள் சார்பிலும், முக்கிய கோரிக்கை.
