
டி எஸ் பி சங்கர் கணேஷ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலுக்கு எதிராக திரும்பும் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை.
வாலாஜாபாத்தில் உள்ள ஒரு பேக்கரியில், வாய் தகராறும், கைகலப்பு பிரச்சனையை வன்கொடுமை சட்டத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் சம்பந்தமாக இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேசி சமாதானமாக ஆகியிருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மாவட்ட நீதிபதி செம்மல் இந்த வழக்கை தாமாக முன்வந்து எஸ் சி ,எஸ் டி, வன்கொடுமை சட்டத்தில் பதிவு செய்து எஃப் ஐ ஆர் போட சொல்கிறார். ஒரு மாவட்ட நீதிபதி, காவல்துறையின் மீது எந்த அளவுக்கு அதிகாரத்தை செலுத்தி இருக்கிறார்? என்பது இது ஒரு உதாரணம். தவிர, கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி சங்கர் கணேஷ் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி என் . சதீஷ்குமார் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார் .மேலும், மாவட்ட நீதிபதி செம்மல் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும்,
இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால், மாவட்ட நீதிபதிகள் ,சட்டத்தின் மாண்புகளை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமல், காவல்துறை போடுகின்ற எஃப் ஐ ஆர் களை சரியான முறையில் விசாரிக்காமல், அவர்களுடைய கைது நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்கள். இவர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிப்பதில்லை.
அதனால் உயர் நீதிமன்றம் இவர்களுடைய நடவடிக்கைகளை தினமும், கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக முழுதும் எந்தெந்த மாவட்டத்தில் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட எஃப் ஐ ஆர் கள் மற்றும் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு சரியான முறையில் சட்டப்படி நீதித்துறை மற்றும் காவல்துறை செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க ஒரு தனி டிபார்ட்மெண்ட் செயல்பட்டால் தான், நடுத்தர ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கும்.

இங்குதான் நீதி என்பது பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற மறைமுக சூட்சுமத்தின் ரகசியம். இதை கண்காணிக்க கூடிய ஒரு தனி அலுவலகம் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அமைத்து விட்டால், காவல்துறை மற்றும் நீதித்துறை சரியான முறையில் இயக்க முடியும்.
மேலும், மாவட்ட நீதிபதிகள் சில பேருக்கு சட்டம் தெரியாமலே இருக்கிறார்கள். வழக்குகள் அவர்கள் இஷ்டம் போல் வய்தா போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனால், பொதுமக்களின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு! இந்த இரண்டு துறையும் ,மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கண்காணிக்க வேண்டிய ஒரு துறையை உருவாக்க வேண்டும்.

அதுதான் மக்களுக்கான சமூக நீதித்துறை . தினந்தோறும் என்ன வழக்குகள்? மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறுகிறது? தினந்தோறும் காவல்துறையில் என்ன விசாரணை நடைபெறுகிறது ?என்னென்ன வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது? அதற்கான நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள் ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது? காலதாமதத்திற்கு காரணம் என்ன? வழக்கு விசாரணைக்கு காரணம் என்ன? காவல்துறையில் புகார் விசாரணை சரியான முறையில் நடைபெற்றுள்ளதா?
இப்படி பல விஷயங்கள் அந்தத் துறை! இரண்டு துறைக்கும் ,விசாரணை துறையாக இருந்தால், நிச்சயம் மக்களுக்கான சமூகநீதி விரைவில் கிடைக்கும். இதில் மாற்று கருத்து இல்லை. எனவே,அவை கண்காணித்தால் நாட்டில் பி சி ஆர் பொய் வழக்குகள் பதிவு செய்ய முடியாது. மேலும், பொய் வழக்குகளுக்கு காவல்துறையில் முற்றுப்புள்ளி வைக்க முடியும் .