அண்ணாமலையின் அரசியல் ! பாஜகவில் ஒரு ஸ்பெஷல் என்ட்ரி ஆக தான் பார்க்கப்பட்டது. ஆனால், பதவி வந்தவுடன் இவரும் 10 ல், 11 தானா?

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள்

இன்றைய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எல்லா கட்சியிலுமே, அவரவருடைய நேர்மையின் அளவை , இன்று சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மக்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆனால், கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மட்டும்தான் பணத்திற்காக ,அவர்களுடைய நம்பிக்கையை இந்த அரசியல்வாதிகள் மீது இழக்கவில்லை.

காரணம், பணம் கொடுத்து இவர்களுடைய புகழைப் பாடிக் கொண்டிருக்கும் கூட்டமாக இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் இருந்து வருகிறது. மேலும்,பாஜகவில் அண்ணாமலை ஓரம் கட்டப் படுகிறார் ?என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இவர் எதற்காக ஓரம் கட்டுப்படுகிறார் ?என்பது இவர் மீது நம்பிக்கை வைத்துள்ள பாஜகவினர்’ இன்னும் அவர்களுக்கு புரியாத புதிராகத்தான் உள்ளது. ஏனென்றால் அண்ணாமலை அந்த அளவுக்கு பேச்சில் தன்னை நேர்மையானவராக காட்டிக் கொள்கிறார்.

அது அண்ணாமலை மட்டுமல்ல, டோட்டல் தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சி நிர்வாகிகளும் ,அப்படி தான் தன்னை நேர்மையான நிர்வாகியாக நினைத்துக் கொண்டு ,பேசிக்கொண்டு, மக்களிடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது ஏன் ?இந்த அளவுக்கு இந்த பிரச்சனை! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது என்றால், அண்ணாமலை திமுக ,அதிமுகவுக்கு மிக கடுமையாக டப் கொடுத்த ஒரு அரசியல். இன்று இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பாஜகவினராலே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் அது அரசியல் பழிவாங்கும் சூழ்நிலை என்று அவர் தெரிவிக்கிறார். அதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அண்ணாமலை பிஜேபியில் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு தான், பிராமின் லாபி கட்சியில் ஒழிக்கப்பட்டது என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படும் உண்மை. மேலும்,

அண்ணாமலை செய்த தவறை கையில் எடுத்து அமிஷா வரை கொண்டு போய் இருக்கிறார்கள். அமிஷாவும் உடனடியாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய மாட்டார். கட்சிக்காரர்கள் சொன்னதை விட, அவர் உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்கிறது? என்பதை ஆய்வு செய்து தான் ,அதை எடுத்து இருக்கிறார்.

இன்று அண்ணாமலை தன்னுடைய வருமானம், சொத்து பற்றி அவரே பேட்டியளிக்க வேண்டிய அவசியம் என்ன?

இது மனைவியின் மூலம் சேமிக்கப்பட்ட வருமானம், வியாபாரத்தின் மூலம் வந்த வருமானம் ,இதை வைத்து நான் இந்த சொத்து வாங்கினேன் என்று இவர் தெரிவிக்கிறார்.

இவர் பொறுத்த அளவில் சொல்வது மிக குறைவு .ஆனால் ,வெளியில் பேசுவது ஏறக்குறைய 3000 கோடி அளவுக்கு வெளியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைதான் அமித்ஷா இவர் எந்தெந்த மந்திரியிடம் பணம் வாங்கி இருக்கிறார் ?என்பது குறித்த தகவல் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் வரை, நேர்மையானவர் தான் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ,அரசியலுக்கு வந்த பிறகு இவர் சொத்து மதிப்பு இயல்புக்கு மாறாக உயர்ந்துள்ளது .அது சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே ,அண்ணாமலையின் மீது பாஜக நடவடிக்கை எடுக்கப் போகிறதா? இல்லை .

அவரை காப்பாற்றப் போகிறதா? எல்லாமே பாஜகவின் மூத்த நிர்வாகிகளின் கையில் தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *