சிறு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களுக்கான அரசின் விளம்பரக் கொள்கையில்! திருத்தம் கோரும் சமூக நலன் பத்திரிகைகள் கோரிக்கை .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக அரசின் செய்தித்துறை !அரசு விளம்பரங்கள் வழங்குவதற்கான தகுதியில், இணையதள பார்வையாளர்கள் எண்ணிக்கையை மட்டும் பிரதான அளவு கோலாகக் கொள்ளாமல், செய்தித் தரம், சமூகப் பங்களிப்பு மற்றும் பத்திரிகைச் செயல்பாட்டையும் இணைத்து மதிப் பிடக் கோரிக்கை. இது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் மற்றும் இணையதளத்தில் இதை வலியுறுத்தி வருகிறது.மேலும்,

சிறு மற்றும் நடுத்தர பத்திரிகைகள், இணையதள ஊடகங்கள், நீண்டகாலமாக மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட்டு வருகின்றன.

எனவே ,அரசு விளம்பரத் தகுதியை நிர்ணயிக்கும்போது பின்வரும் அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும் தமிழக அரசின் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை .

பார்வையாளர்கள் எண்ணிக்கை மட்டும் அளவுகோலாக இருக்கக் கூடாது .ஒரு இணையதளத்திற்கு மாதம் எத்தனை பேர் வருகிறார்கள்? என்பது ஒரு தொழில்நுட்ப அளவுகோல் மட்டுமே. அது அந்த ஊடகத்தின் செய்தியின் தரத்தையோ சமூகப் பங்களிப்பையோ முழுமையாக அளவிடாது.

Unique Visitors / Page Views தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.தவிர,
“பார்வையாளர்கள்” என்றால் Unique Users, Sessions அல்லது Page Views — எது என்பதை அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும்.

மேலும், செய்தியின் தரத்துக்கு மதிப்பெண் வழங்க வேண்டும்.
மக்கள் பிரச்சினைகள், ஊழல், நிர்வாகக் குறைபாடுகள், சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற பொதுநலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஊடகங்களுக்கு தனி மதிப்பீடு இருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, பத்திரிகையின் சமூகப் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு ஊடகம் தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறதா ?என்பதையும் மதிப்பிட வேண்டும்.

மேலும், இங்குதான் செய்தித்தறை தவறு செய்கிறது அது என்ன என்றால்?சிறு ஊடகங்களுக்கு தனி தகுதி முறை வேண்டும்.
பெரிய கார்ப்பரேட் ஊடகங்களுடன் சிறிய பத்திரிகை மற்றும் இணையதளங்களை ஒரே பார்வையாளர் அளவுகோலில் பார்க்கக் கூடாது.

மேலும்,வியாபாரம்! அரசியல் கட்சி! இந்த செய்திகளில் எதற்கு செய்து துறை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? சமூக நலனுக்கா? அல்லது இதற்காக? இதுவரை இதில் சர்குலேஷன் என்ற ஒரு தவறான சட்டத்தை வைத்து , பத்திரிக்கை துறையை ஏமாற்றியது போல இருக்கக் கூடாது.

எனவே, செய்தித்துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில்! பல்வேறு விதிமுறைகளை பற்றிய கருத்துக்கள், கட்டுரைகள், நேர்மையான முறையில் ,பத்திரிக்கை துறை கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு சமூக நலன் பத்திரிகைகள் சார்பாக எங்களது கோரிக்கை .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *