தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய பள்ளிகளுக்கு அனுமதி போன்ற பல்வேறு தேவைகளுக்காக, நிர்வாக தரப்பில் கொடுக்கப்பட்ட ஊழல் பணம் 100 கோடி – அமைச்சர் அன்பில் மகேஷ் .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் அவருடைய பிஏவாக இருந்த அரசு குமார் மூலம் தனியார் பள்ளி நிறுவனங்கள் மூலம் சுமார் 100 கோடிக்கு மேலாக பணம் கை மாறி உள்ளது.

இதுகுறித்து அந்த பணத்தை அவரிடம் கொடுத்த பள்ளிக்கல்வித்துறையின் சங்கத்தின் தலைவர் மூலம் இந்த பணம் பெறப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டு ,அதை ஊழல் புகாராக விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் உதவியாளர் அரசகுமார் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இருப்பினும் ,இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை ஹை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீது விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்குமாருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. அவர் சம்பந்தப்பட்ட காவல்துறையின் அலுவலகத்தில் தினமும் 10 மணிக்கு கையெழுத்து போட வேண்டும்.இவருக்கு இரண்டு பேர் ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள். பிறகு 25 ஆயிரம் வைப்புத் தொகை பெற்றுக்கொண்டு, நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.


மேலும் இந்த ஊழல் வழக்கில் ,மத்திய குற்றப்பிரிவு போலீசார் 44 ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தவிர, ஒரு லேப்டாப் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ,அரசகுமாரின் மகன் ,மகள், வீடுகள் ,அன்பில் மகேஷின் உதவியாளர் வீடுகள், முத்துக்குமாரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும்,நீதிமன்றம் இந்த வழக்கில் அரசகுமாருக்கு ஜாமின் வழங்கி இருந்தாலும், மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் கைப்பற்றி உள்ள ஆவணங்கள், அன்பில் மகேஷ், அரசகுமார் தப்பிக்க முடியுமா? வழக்கு விசாரணையில் இந்த ஊழல் நிரூபிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா ? என்பதுதான் பொதுமக்கள் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *