
தமிழ்நாட்டில் மக்களின் மனதில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது பரம் பொருளே ! ஓரிரு நாளிலே அந்த மாற்றத்தை, மக்கள் மனதில் கொண்டு வந்தவர் இறைவனே ! இதை ஏன் சொல்லு வருகிறேன் என்றால்? இறைவன் நினைத்தால் எதையும் செய்ய முடியும்.
அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், youtube சேனல்கள், எல்லாமே ஒரு பக்கம் ஸ்டாலின் வருவார்! இன்னொரு பக்கம் எடப்பாடி வருவார்! இப்படி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால்! அப்போதும் மக்கள் அதிகாரம் அரசியல் மற்றும் உறுதி என்று தான் எழுதியிருந்தோம். அதுமட்டுமல்ல, தேர்தலுக்கு முன் அட்டை படத்தில் ஏப்ரல் மாதம் வெளிவந்த இதழின் தலைப்பில்! அதிமுக, திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கும், 2026 சட்டமன்றத் தேர்தல்! தமிழக வெற்றி கழகம் ஆட்சியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்குமா?

இந்த தலைப்பு வைக்கும்போது எனக்கே கூட, இதன் உண்மை புரியாமல் இருந்தது .இது பிறகுதான் உணர்ந்தேன். கடவுள் இந்த மாற்றத்தை கொண்டு வருவதற்காக தான் ,இந்த தலைப்பு நம்மை அறியாமல் இது வந்திருக்கும் தலைப்பா? இப்போது தான் அதை உணர்கிறேன்.
மேலும்,அப்போது நான் தமிழக வெற்றி கழகம் அதிகப்பட்சம் ஒரு 25 தொகுதிகள் வெற்றி பெற்றால் பெரிய விஷயம் என்று தான் நினைத்தேன் . விஜயும் அதை தான் நினைத்தார் என்று அரசியல் வட்டாரமும் தெரிவித்தது .

ஏனென்றால் ஒரு எம்எல்ஏ முகம் கூட யார்? என்று மக்களுக்கு தெரியாது. ஜெயித்த எம்எல்ஏக்கள் எவ்வளவு 108. இந்த 108 தெய்வீக ரகசிய எண். மந்திரங்களை சொல்பவர்கள் 108 முறை சொல்வார்கள். இங்கே கடவுள் தான் ஜெயித்திருக்கிறார். மேலும், எத்தனையோ பூத்துகளில் ஏஜென்ட்கள் கூட கிடையாது. தொகுதிகளில் பிரச்சாரம் கூட சரிவர வந்து செய்யவில்லை.
இப்படிப்பட்ட நிலையில், பணத்தை அதிமுக, திமுக மக்களுக்கு கொட்டி கொடுக்கிறார்கள். கட்சிக்காரர்களுக்கு கொட்டி கொடுக்கிறார்கள். கறி விருந்து போடுகிறார்கள் ,இலவச பொருட்களை கொடுக்கிறார்கள். இவை அத்தனையும் மீறி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை பரம்பொருள் உருவாக்கி இருக்கிறார் . அப்படி என்றால், இறைவன் தீர்மானித்தது அதிமுக, திமுக வரக்கூடாது என்று அவன் தீர்மானித்தான். விஜய் முதல்வராக வரவேண்டும் என்று இறைவன் தீர்மானித்தான்.

மேலும்,இங்கே ஸ்டாலின்,உதயநிதி ,எடப்பாடி பழனிசாமி, இவர் கட்சி உதயகுமார், இவர்களெல்லாம் தமிழக மக்களிடம் புலம்பி, ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வம் நின்று கொள்ளும். நீங்கள் செய்த வினைக்கு மாற்றத்தை தெய்வமே பொறுக்க முடியாமல் ,தான் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது . இதை முதல்வர் விஜய் தற்போது நன்கு புரிந்து கொண்டார்.
அதனால்தான் அவர் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து, இந்த மூன்று மாத காலத்தில், அதை செயல்படுத்தி வருகிறார். நிச்சயம் எல்லா மதத்தினருக்கும் சமமான மதிப்பு ,மரியாதை ,எல்லா கடவுளுக்கும் கொடுக்க வேண்டிய அந்த மதிப்பு, மரியாதை கொடுக்க வேண்டும் என்று இலவச மின்சாரத்தை கொடுக்க வேண்டும் என்று திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதே போல் கதறிக் கொண்டிருக்கும் அதிமுக, திமுக அரசியல் கட்சிகள் இனி தமிழகத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்று கலக்கத்தில் இருக்கிறார்கள். காரணம், இவருக்கு என்ன அரசியல் தெரியும்? இதுதான் இவர்களின் கேள்வி? ஆனால், முதல்வர் விஜய்! ஒவ்வொரு துறைகளிலும் நடக்கின்ற ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

அதற்கான அதிகாரிகளை தேர்வு செய்து, எதிலும் வெளிப்படையான காண்ட்ராக்ட், கமிஷன் அறவே அதில் ஒழிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய நிலைப்பாடு! அது மட்டுமல்ல, திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கு உடந்தையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும், நடவடிக்கை என அரசியல் வட்டாரம் தெரிவிக்கும் தகவல்.

மேலும், மக்கள் எதை விரும்புவார்கள்? வந்தவரையும் செய்துவிட்டு, கமிஷன் வாங்கிக்கொண்டு போகும் இவர்கள் (அதிமுக ,திமுக)வை விரும்புவார்களா? ஆட்சியில், இனி அதற்கு இடம் கிடையாது. மேலும், டாஸ்மாக்கில் வந்த வருமானத்தை பாதி! கட்சி நிதி பெயரில் இவர்களுடைய குடும்பத்திற்கும், மீதி அரசாங்க கஜானா விற்கும் கொண்டு செல்வதை தடுத்து, அனைத்தும் அரசாங்க கஜானாவிற்கு சேர்ப்பதை மக்கள் விரும்புவார்களா? எதை விரும்புவார்கள்?

அது மட்டுமல்ல, அரசு அதிகாரிகள் நேர்மையான பணியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புவார்களா? மக்களிடமே பணத்தை வாங்கிக் கொண்டு, அதில் மந்திரிகளும், இவர்களும் பங்கு போட்டுக் கொள்வதை மக்கள் விரும்புவார்களா? எதை விரும்புவார்கள்?

இப்படிப்பட்ட ஆட்சியை கொடுக்கும் போது கூட ,சில பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், உண்மையை வெளிப்படுத்தாமல், தவறான செய்திகளை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, youtube அது கணக்கில் இல்லை. எதை வேண்டுமானாலும் பேசி விட்டு போகலாம். ஆனால், பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும், அவ்வாறு சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. உண்மை எதுவோ, அதுதான் மக்களிடம் சொல்ல வேண்டும்.

அது மட்டுமல்ல ,அரசு பொறம்போக்கு நிலங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள், இதையெல்லாம் அகற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையே பாராட்டி இருக்கிறது . இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? என்றால், அரசியல் பின்புலம், அரசியல் கட்சி சார்ந்தவர்கள், இவர்கள்தான் இந்த ஆக்கிரமிப்புகளை, அடாவடித்தனங்களை ,செய்து வருகிறார்கள். இதில் ஒரு கட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. பல கட்சியினருமே இந்த வேலைகளை செய்கிறார்கள். அதற்கும் இனி முற்றுப்புள்ளி தான்.

மொத்தத்தில் இந்த ஆட்சி ! எல்லாவற்றிலும் ஒரு நேர்மையும், மனசாட்சியும் இருக்க வேண்டும் என்று விரும்பும் ஆட்சி !தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! அதனால்,தான் அரசியல் கொள்ளையர்கள் கொந்தளிக்கிறார்கள் .
எல்லாவற்றிலும் மாற்றத்தை கொண்டு வரும் தமிழக முதல்வர் விஜய்! பத்திரிக்கை துறை! மிக முக்கியமான துறை! இதில் அவசியம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

இந்தத் துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் , மட்டுமே இருக்கக்கூடிய சர்குலேஷன் சட்டத்தை! செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சர்குலேஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, வியாபார நோக்கம் உள்ள பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கும், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கும், இந்த சர்குலேஷன் சட்டத்தை வைத்து பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட 99 சதவீத ஓட்டை சட்டங்களில், இதுவும் ஒன்று. அதேபோல், இணையதளத்தின் பார்வையாளர்களை சர்குலேஷனில் கொண்டு வர வேண்டும்.

கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் சலுகை, விளம்பரங்கள் தகுதியானவைகளை தேர்வு செய்து சாமானிய பத்திரிகைகளின் இணையதளம் மற்றும் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

மேலும், இந்தத் துறையில் இருக்கக்கூடிய ஓட்டை சட்டத்தை நீங்கள் அடைக்க வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை .
