ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பெறுவது நடைமுறையில் சரியான பயிற்சி இல்லாமல், பெறுவதால்! விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? – சமூக ஆர்வலர்கள்.

அரசியல் உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் சாலை விபத்து ஆண்டுக்கு, ஆண்டு பெருகிவரும் நிலையில், தற்போது தமிழக அரசு ஓட்டுநர் உரிமத்தை இணையதளத்தில் பெறுவது சரியான ஓட்டுநர் பயிற்சி இல்லாமல் வாகன ஓட்டிகள் ஓட்டுவதால் தற்போதைய காலகட்டத்தில் விபத்துக்கள் பெருகி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ஓட்டுநர் உரிமம் பெறும் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலை இழப்பை உருவாக்குகிறது.

இதனால் பல லட்சம் குடும்பங்கள் வேலை இன்றி நடுத்தெருவுக்கு அவல நிலையை தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் தலைமையிலான தமிழக அரசு இதற்கு உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும்,இவர்கள் எல்லாம் 30 ஆண்டு காலம், 20 ஆண்டு காலத்திற்கு மேலாக பணியாற்றியவர்கள். இவர்கள் பணி நிரந்தரம் இல்லையென்றாலும் ,ஏதோ குடும்பத்தை ஓட்டுவதற்கு தற்காலிக பணியாளர்களாக வேலை செய்து வந்திருக்கிறார்கள்.

அதையும் பறித்து, வீட்டுக்கு அனுப்பினால், அவர்கள் இந்த வயதில் எந்த வேலைக்கு செல்வார்கள்? எப்படி குடும்பம் நடத்துவார்கள்? இதையெல்லாம் அரசு அதிகாரிகள் மந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்க வேண்டும். மேலும்,

இது நிச்சயம் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு அவப்பெயரை தான் உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்படிப்பட்ட பணியாளர்கள் வேதனை கண்ணீர் வடிக்கின்றனர். எங்களுக்கு பணி நிரந்தரம் இல்லை என்றாலும், கடைசி வரை இந்த தற்காலிக பணியை கூட ,இந்த அரசு எடுத்துவிட்டது என்று கவலை தெரிவிக்கின்றனர்.மேலும்

இணையதளத்தின் மூலம் ஓட்டுனர் உரிமம் பெறக்கூடியவர்கள் ! சமூக நலன் ஆர்வலர்கள் தமிழக அரசிடம் கேட்கும் 10 நேரடி கேள்விகள் !

ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமா? உண்மையான ஓட்டுநர் திறன் எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?

நிரந்தர ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு முன் ,ஒவ்வொருவருக்கும் கட்டாய நடைமுறை ஓட்டுநர் சோதனை நடத்தப்படுகிறதா?


மேலும்,ஓட்டுநர் தேர்வில் தோல்வியடைந்தவர் மீண்டும் தேர்ச்சி பெறாமல் உரிமம் பெற முடியாத வகையில் என்ன கண்காணிப்பு உள்ளது? தவிர,
போலி ஆவணம், போலி அடையாளம் அல்லது முறைகேடு மூலம் உரிமம் பெறுவதைத் தடுக்க என்ன தொழில்நுட்பப் பாதுகாப்பு உள்ளது?

விண்ணப்பதாரரின் பார்வைத்திறன் உள்ளிட்ட அடிப்படை தகுதிகள் உண்மையாகச் சரிபார்க்கப்படுகிறதா?
ஓட்டுநர் பயிற்சி மையங்களின் தரம் மற்றும் பயிற்சியின் நம்பகத்தன்மையை அரசு எவ்வாறு கண்காணிக்கிறது?

Automated Driving Test-ல் தோல்வியடைந்தவர்களின் பதிவுகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, மீண்டும் தேர்வில் கண்காணிக்கப்படுகிறதா?
தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களின் உரிமத்தை இடைநிறுத்த அல்லது ரத்து செய்யும் கண்காணிப்பு முறை எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது?

மேலும்,ஆன்லைன் முறை இடைத்தரகர் மற்றும் லஞ்ச முறையை உண்மையில் குறைத்துள்ளதா? அதற்கான வெளிப்படையான தரவுகள் அரசிடம் உள்ளதா?

டிஜிட்டல் வசதியை அதிகரிக்கும் அதே நேரத்தில், தகுதியற்ற நபர்களுக்கு ஓட்டுநர் உரிமம் கிடைக்காததை அரசு எவ்வாறு உறுதி செய்கிறது? இதற்கெல்லாம் தமிழக அரசு சரியான பதில் கொடுக்க முடியுமா? முடிந்தால் இணையதளத்தில் ஓட்டுனர் உரிமத்தை கொடுங்கள்.

இல்லையென்றால், தற்போதைய பழைய நடைமுறையை பின்பற்றி, சாலை விபத்துக்களை தடுக்க என்ன வழிமுறையோ அதை பின்பற்றுங்கள்.

மேலும்,அதிகரித்து வரும் சாலை விபத்துக்கு, பயிற்சி இன்றி வருபவர்களின் ஓட்டுனர் உரிமமும் முக்கிய காரணம்! தமிழக அரசு அதை சரி செய்யுமா? – சமூக ஆர்வலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *