தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜயின் 100 நாள் ஆட்சி! மக்களுக்கான ஆட்சி! மக்களாட்சி!

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழக மக்கள் விரும்பும் மக்களாட்சியை இந்த 100 நாளில் தமிழக முதல்வர் விஜய் கொடுத்துள்ளார்.

இதில் எதிர்க்கட்சிகள் !எதிரி கட்சிகளாக பல குற்றங்களை சொல்லிக் கொண்டு இருந்தாலும், எந்த ஒரு செயலும் ,எந்த ஒரு திட்டமும் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக போடப்படும் ,திட்டங்களாக தான் ஒவ்வொன்றும் வெளி வருகிறது.

இதில் கடந்த கால திமுக ,அதிமுக ஆட்சியில்! ஒரு திட்டம் கொண்டு வந்தால் ,அதில் எவ்வளவு பர்சன்டேஜ் கிடைக்கும் ?என்ற சுயநலத்தில் தான் அது இருந்தது.

அதை மாற்றி வெளிப்படையான ஈ- டெண்டர்கள் (e-tenders ) முறையை கொண்டு வந்துள்ளார். இது தவிர, சட்டமன்றத்திலே நடக்கக்கூடிய சட்டமன்ற நிகழ்வுகள் ,நேரலை ஒளிபரப்பு செய்வது, மக்களின் பார்வைக்கு வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்ச்சியாக உள்ளது.

அதாவது மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏது? என்ற பழமொழி போல, அதை ஓப்பனாகவே மக்களின் பார்வைக்கு சட்டமன்றங்கள் கூட்டம் நடந்து வருவது, இதுதான் தமிழக வரலாற்றில் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது.

மேலும்,இதுவரை யாருடைய ஆட்சியிலும் ,இந்த நேரடி ஒளிபரப்பு இல்லை.மேலும், அதிக புதியதாக திட்டங்கள் கொண்டு வரவில்லை என்றாலும் ,ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டங்கள், சீர் செய்து, ஊழல் இன்றி ,செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தவிர, விவசாயிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் கடன்களுக்கு 75% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. கடந்த திமுக ஆட்சியில், 5 சவரன் நகை தள்ளுபடி என்று சொல்லிவிட்டு, பேருக்கு ஒவ்வொரு வங்கிக் கிளையிலும், 100 பேருக்கு கொடுத்து விட்டு, கணக்கு காட்டி விட்டார்கள். அதுபோல் இல்லை.

மேலும்,அதிகாரிகள் மக்களுக்காக செயல்பட வேண்டும். லஞ்சங்கள் வாங்குவது கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. ஊழல்கள் குறைந்துள்ளது. திமுக ஆட்சியில் சாக்கடை நிர்வாகமாக இருந்தது .இன்று மக்களுக்கு பரவாயில்லை என்ற ஒரு மன நிலைக்கு மனசாட்சியுடன் பேசுகின்ற மக்கள் பேசுவதை பார்க்க முடிகிறது.

இது தவிர, காவல்துறையில் இதுவரையில், ரகசிய கண்காணிப்பு செல் அமைத்து நான் பார்த்ததில்லை. முதன்முறையாக காவல் துறையில் நடக்கின்ற அராஜகங்கள், ஊழல்கள், லஞ்சங்கள், பற்றிய புகார்கள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு இந்த காவல்துறை கண்காணிப்பு செல்லுக்கு புகார் அனுப்பலாம் .அது ரகசியமாக பாதுகாக்கப்படும் .

அது மட்டுமல்ல, ஒவ்வொரு காவல் நிலையங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள், பொருத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் மக்களின் பாதுகாப்பிற்கு ,எந்த அளவுக்கு முக்கியத்துவம் ஆனது என்பது எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு புரியும்.

மேலும்,தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆட்சி !நூறு நாளில் ஒரு நல்லாட்சியை கொடுத்ததற்கான சான்று !மக்கள் கொடுக்கும் சான்று.

இதைப் பற்றி எதிர்க்கட்சிகள், அவர்களுடைய பத்திரிகைகளிலும், அவர்களுடைய தொலைக்காட்சிகளிலும், அவர்களுடைய சமூக ஊடகங்களிலும், எவ்வளவு பொய் பிரச்சாரங்களை செய்தாலும், மக்கள் நம்ப தயாராக இல்லை.

உண்மை! உண்மை தான் ,இது மனசாட்சி உள்ள மக்களின் குரல். மக்கள் அதிகாரம் என்றும் மக்களுக்காக மக்களுடன் . …!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *