தமிழ்நாட்டில் எதுக்கு ஜாதி? அரசியலில் ஜாதியை முன்னிறுத்தும் தலித் சமூகத்தினர்? – செல்வப் பெருந்தகை.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

செல்வப் பெருந்தகை எம்எல்ஏவாக இருந்தால், இவரை கேட்டு தான் தண்ணீர் திறக்க வேண்டுமா? அப்படி திறக்கவில்லை என்றால்! உடனே அங்கே ஜாதி வந்து நிறுத்தி விடுவாரா? அதிகாரிகள் ஏரியில் தண்ணீர் நிரம்பி விட்டால், அது குடியிருப்பு பகுதிகளுக்கு பாதகம் இல்லாத சூழ்நிலையை தான் அவர்கள் பார்ப்பார்கள்.

ஆனால், செல்வப் பெருந்தகை இவரை கேட்டு தண்ணீர் திறக்கவில்லை என்று அதிகாரிகளை கடிந்து கொண்டிருக்கிறார். இதுவரை எந்த எம்எல்ஏ வும் இப்படி ஒரு விளம்பரத்தை தேடி நான் பார்த்ததில்லை. அடுத்தது, தண்ணீர் திறந்து மக்களை காப்பாற்றினால் போதும் என்று தான் நினைப்பார்களே ஒழிய, என்னை கேட்காமல் ஏன்? தண்ணீர் திறந்தாய் என்று யாருமே கேட்க மாட்டார்கள்.

மேலும், ஒவ்வொரு அதிகாரியும் ஜாதியை வைத்துக்கொண்டு வேலை செய்தால், அல்லது அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால், அவர்களுடைய குடும்பத்திற்கு இந்த ஜாதி வந்து சோறு போடுமா?

செல்வப் பெருந்தகைக்கு போடும், ஏனென்றால்! அவர் உழைக்க வேண்டிய அவசியம் இலலை . இன்று உழைக்காமலே சொத்துக்களை வாங்குகிற ஒரு கூட்டம் யார்? என்றால் பதவிக்கு வந்தவர்கள் தான்.மேலும்,

தண்ணீர் திறக்க ,இவரை பொதுப்பணித்துறை அதிகாரிகள், கூப்பிடவில்லை என்றால், உடனே ஜாதியை முன்னிறுத்துவதா? சரி அப்படியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இவரை கேட்காமலே தண்ணீர் திறந்து விட்டார்கள். எதற்கு கேட்கணும்?

ஊரே அடித்து கொண்டு போகும்போது, உன்னை கேட்டு, நீ என்னைக்கு தேதி குடுக்குறியோ , அன்று போய் தண்ணீர் திறந்தால், ஏரி உடைந்தோ அல்லது ஒரே அடியாக தண்ணீர் திறந்தால், ஏரி நீர் ஊருக்குள் புகுந்தால், அப்போதும் 10 காலனிக்குள் ,அந்த தண்ணீர் வெள்ளம் வந்து விட்டால், அதை வைத்து அப்போதும் ஜாதியை பற்றி பேசி அரசியல் செய்வதா?மேலும்,

ஜாதி வேண்டாம் என்று சொல்பவர்களும் நீங்கள் தான், திருப்பி அந்த ஜாதியை கொண்டு வந்து அரசியலில் கலப்பதும் நீங்கள் தான், என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? தவிர ,இந்த ஜாதி உங்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறதா? இல்லை, உங்களுடைய சலுகைகள் மாட்டிக் கொண்டு முழிக்கிறதா? அல்லது இந்த பிசிஆர் ஆக்ட் (PCR act ) மாட்டிக் அடித்துக் கொண்டு முழிக்கிறதா? எது முழிக்கிறது ? என்பதை வெளிப்படையாக சொன்னால், மற்ற சமூகங்கள் தெரிந்து கொள்ளும்.

மேலும்,இப்படியெல்லாம் விளம்பரத்தை தேடுகின்ற இவர்கள்! சமூக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வார்களோ! அதை மக்களும், பத்திரிகைகளும் நம்ப வேண்டுமா? இதனால்,

செல்வ பெருந்தகைக்கு வாக்களித்த மக்கள் தான் ,தவறு செய்தவர்கள். இந்த மக்கள் இனி எப்போது திருந்துவார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *