
மழையில் வெளியில் செல்வது அவசியம் தவிர்க்க வேண்டிய ஒன்று. அதேபோல்,
இடி, மின்னல், புயல் காற்று போன்ற நேரங்களில் மக்களின் பாதுகாப்பு மிக, மிக அவசியமானது. அந்த நேரத்தில் அலட்சியமாக வெளியில் செல்வது, கூட்டம் கூடி பேசிக் கொண்டிருப்பது, இது எல்லாம் தவிர்க்க வேண்டிய ஒன்று.
இயற்கை அதனுடைய வேலையை அது செய்து கொண்டிருக்கிறது. அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். மேலும்,மாணவர்கள், குழந்தைகள் இப்படிப்பட்ட நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.தவிர,
இடி, மின்னல் தாக்கும்போது, நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் ?என்பது பற்றிய விழிப்புணர்வு வீடியோ தான் இது!
மழையில் நனையாமல் நாம் பாதுகாத்துக் கொள்வது கையில் எப்போதும் குடையோ, அல்லது ரெயின் கோட்டோ மிகவும் அவசியமானது.மேலும்,
இதே மழை மின்னல், இடி நேரத்தில் குடை பிடித்துச் செல்லும் போது, அதிலிருந்து வரக்கூடிய மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படுத்தும். அந்த நேரத்தில் வீடுகளிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ, நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தவிர, மரத்துக்கு அடியில் நின்றாள் மரத்தின் மீது விழக்கூடிய இடி மின்னல் தாக்குதல் ,அது நம் மீதும் விழும்.
அதனால், இடி மின்னல்களில் மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்பதை மட்டும் இன்னும் பல பேருக்கு அது தெரியாது. அதனால் தான் இடி மின்னல் தாக்கியவர்கள் உடல் கருகி இறக்க நேரிடுகிறது.

இது தவிர, மழைக்காலங்களில் பொதுப்பணித்துறை ஏரிகளில், அதிகளவு நீர் கொள்ளளவு ஆகும் போது, அந்த உபரி நீரை அரசு அதிகாரிகள் வெளியேற்றுவார்கள். அப்படி வெளியேற்றும் போது, அந்த நீர் கடலில் சென்று கலக்கும்.மேலும்,இந்த ஏரிகளில் இருக்கின்ற உபரி நீர்,திறந்து விடும் போது, பல கிராமங்களின் வழியாக செல்லும், அப்போது அந்த கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்படும். அதை அலட்சியமாக இருக்கக் கூடாது.
தவிர,ஆற்றில் மாணவர்கள் இறங்கி ஆழம் பார்க்கக் கூடாது. இது எல்லாம் நம்முடைய உயிரை, நாம் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். எனவே, மழைக் காலங்களில், எச்சரிக்கை மிகவும் தேவையான ஒன்று. மக்களுக்கு இந்த விழிப்புணர்வு அவசியமானது.