
திமுக கூட்டணியில் அதிக இடங்களை திருமாவளவன் கேட்பதால், அதற்கு திமுக தரப்பிலிருந்து சரியான பதில் வந்திருக்காது.
மேலும், திருமாவளவனுடைய அரசியல் செல்வாக்கு முழுமையாக சரிந்துள்ளது. இவர் எந்த கூட்டணிக்கு போனாலும் ,அந்த கூட்டணியில் இவரை சேர்ப்பது கடினம். சேர்த்தாலும், அந்த கூட்டணியும் அடிபடும்.
மேலும், திருமாவளவன் எந்த கூட்டணியில் சேர்ந்து ,எத்தனை சீட்டு வாங்கினாலும் ,அது எதிர்க்கட்சி கூட்டணிக்கு தான் லாபம் . நிச்சயம் இவர்கள் நிற்கின்ற தொகுதியில் ,எளிதாக வெற்றி பெறுவார்கள். அதனால், திமுகவே திருமாவளவனை கழட்டிவிடும் முடிவில் தான் இருக்கிறார்கள் என்ற தகவல்.

அதேபோல், காங்கிரஸும் அதிக தொகுதிகளை கேட்பதால் ,திமுக அதற்கு இடம் அளிக்காமல், மௌனம் காத்து வருகிறது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தல் ,அரசியல் கட்சிகளுக்கு கடுமையான போட்டி என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள்.
அதனால், இவர்களுக்கு அதிக இடங்களை கொடுத்து நாம் தோல்வி அடைவதை விட ,தோற்றாலும் ,ஜெயித்தாலும் நாம் அதிக இடங்களில் நிற்பது தான் மிகவும் சரியானது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கும் கருத்து.
இதில் திருமாவளவனும்,செல்வப் பெருந்தகையும், போட்டி, போட்டுக் கொண்டு, திமுக அறிவாலயத்தை சுற்றி வந்தால், அவர்கள் கொடுப்பது தான் கொடுப்பார்கள். இதில் திமுக கைதேர்ந்தவர்கள். உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்கிறது? அரசியல் கட்சி ரிப்போர்ட் என்ன சொல்கிறது? தனியார் கம்பெனி ரிப்போர்ட் என்ன சொல்கிறது? பத்திரிகைகளின் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?
இது அத்தனையும் உட்கார்ந்து, அலசி ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஒரு அரசியல் கட்சி திமுக.இங்கே இவர்கள் காட்டுகின்ற அரசியல் பந்தாவுக்கு அவர்கள் அவ்வளவு எளிதில் மசியமாட்டார்கள் என்பது தான் திமுகவின் அரசியல்.