தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு. நாட்டின் ஜனநாயகத்தின் மாண்பை காக்கும் தீர்ப்பு மட்டுமல்ல, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை அல்லது நிதி உதவி வழங்குவதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு நாட்டின் ஜனநாயகத்தின் மாண்பை காக்கும் தீர்ப்பு மட்டுமல்ல, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது .

தேர்தல் என்பது சமூகத்தில் தகுதி வாய்ந்தவர்களுக்கு ,அரசியல் கட்சிகள் கொடுக்கப்படும் எம் எல் ஏ, எம் பி,உள்ளாட்சி அமைப்புகள், வேட்பாளர்களை தேர்வு செய்து, மக்களின் தேர்வுக்கு நியமிக்கிறார்கள். நியமிக்கப்படும் இந்த வேட்பாளர்கள் அவர்களுடைய தகுதி என்ன? செயல்பாடு என்ன ?

மேலும், அவர் குற்ற வழக்குகள் பின்னணி உள்ளவரா?அல்லது ஊழல் பின்னணி உள்ளவரா? என்று எதுவும் தெரியாமல், கட்சியின் சின்னம் பார்த்து மற்றும் பணத்தை பார்த்து வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை, தேர்தல் என்பது ஒரு சம்பிரதாயத்துக்கான தேர்தலாக தான் இதுவரை இருந்து வருகிறது .அதில் ஒரு பகுதியை மட்டும் உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள இந்த தீர்ப்பின் மூலம் சரி செய்துள்ளது.

 அதாவது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அல்லது உதவித்தொகை வழங்க தனிநபர், நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அது ஆயிரம் முதல் லட்சம், கோடி வரை இந்த பணத்தை அவர்கள் வங்கியில் செலுத்தி, சம்பந்தப்பட்ட கட்சிக்கு நன்கொடை வழங்கலாம் என்று மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி இந்த சட்டத்தை கொண்டு வந்தது .இதில் இந்த நிதி பற்றிய வெளிப்படுத்தத் தன்மை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த தனி நபர்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் ,அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கு வசதியாக இந்த தேர்தல் பத்திரம் கொண்டுவரப்பட்டது. அதனால், இந்தியாவின் எந்த ஒரு குடிமகனும், நிறுவனமும் ,தேர்தல் பத்திரங்களை வாங்கலாம் .இந்த பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அனைத்து கிளைகளிலும் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் வங்கி கொடுக்காது .

இந்த நிதி அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் அரசியல் சாசனத்தின் பிரிவு (19) 1ஏ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உரிமையை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது .மேலும் ,அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை, ஸ்டேட் வங்கி இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஸ்டேட் வங்கி அளிக்கும் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். 15 நாட்களுக்குள் செல்லுபடி ஆகக்கூடிய மற்றும் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்களை, அரசியல் கட்சிகள் அந்தந்த தனி நபர்கள் அல்லது நிறுவனத்திடம் திரும்ப செலுத்த வேண்டும். மேலும், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் .

தவிர, 1919 ஆம் ஆண்டு முதல் ஸ்டேட் வங்கி,இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவர்கள், குறித்த விவரத்தை வெளியிட வேண்டும், போன்ற முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் சாசனத்தின் வரலாற்று முக்கிய தீர்ப்பு . நிதி வழங்கியவர்களின் விவரங்கள் வெளிவந்த பிறகு தான், யார்? யார் ?எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நிதியினை கொடுத்துள்ளார்கள்? அப்போதுதான், எதற்காக இவ்வளவு நிதியை அந்த நிறுவனங்கள் கொடுத்தது? என்ற விவரம் மக்களுக்கு தெரிய வரும்.

 இப்படி ஒரு நிறுவனம், கோடிக்கணக்கில் அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி எதற்காக செய்கிறது? அதன் நோக்கம் என்ன? ஒரு பொருளை உற்பத்தி செய்யக்கூடிய கம்பெனி நிறுவனம் ,அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுப்பது ஆதாயம் இல்லாமல் கொடுக்குமா?அது தரமான பொருளா? அல்லது அந்தப் பொருளின் விலையை பன்மடங்கு மக்களிடம் உயர்த்திக் கொள்ளும் சலுகையா? அல்லது அதன் கருப்பு பணமா? இவை எல்லாவற்றிற்கும் உச்ச நீதிமன்றம், இந்த சட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

 மேலும்,ஊழலை ஒழிப்போம் என்று ஊழல்வாதிகளை, அரசியல் கட்சிகள் வேட்பாளராக தேர்வு செய்கிறார்கள் .ஊழலை ஒழிப்போம் என்று தேர்தல் செலவுக்காக ,இப்படிப்பட்ட நிதி ஆதாரங்களை ,தேர்தல் பத்திரங்கள் மூலம் அன்பளிப்பாகவும், நன்கொடையாகவும், உதவியாகவும் பணத்தை பெறுகிறார்கள் .அதனால், எந்த அரசியல் கட்சிகள் வந்தாலும், நாட்டில் ஊழலும், கருப்பு பணமும் ஒழிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

 இதை ஒழித்தால் தான், நாட்டில் நேர்மையான ,வெளிப்படையான நல்லாட்சி கொண்டுவர முடியும். அரசியலில் ரவுடிசத்தை ஒழிக்க முடியும் . அரசியல் கட்சி ரவுடிகளுக்கு ,தேர்தலில் நிற்க  வேட்பாளர்களாக தேர்வு செய்கிறார்கள். அவர்கள் தகுதி என்னவோ, அந்த தகுதியின் அடிப்படையில் தான் ஒவ்வொருவரும் செயல்பட முடியும். எந்தப் பதவியில் கொண்டு போய் வைத்தாலும் அவர்களுடைய பழைய வாசனை போகாது.

இவர்களால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதன் மூலம் நீதிமன்றங்களில் ,காவல் நிலையங்களில் வழக்குகள் குறையும். எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் ஊழல் பணமும், கருப்பு பணமும், இந்த பணம்தான் நாட்டில் தேர்தல் செலவுக்கான அரசியல் கட்சிகளின் பணம் என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *