
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வரலாறு கூட ,இப்போது உள்ள இளைய சமுதாயம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் படிப்பதில்லை. எங்கள் காலத்திலாவது அந்த தியாகிகளின் வரலாறு, ஓரளவுக்கு பாடப் புத்தகத்தில் வெளிவந்தது .
அதற்குப் பிறகு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விட்டார்கள்.
மேலும்,எங்களுக்கு கொடுக்கப்பட்டதிலேயே, பல உண்மைகள் மறைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் வரலாறு. அது கூட பிற்காலத்தில் மாணவர்களுக்கு அதை கொடுக்காமல், நிறுத்தி விட்டார்கள். அதனால்தான் ,இப்போதுள்ள மாணவர்களுக்கு இந்த தேசப்பற்று என்பது துளி கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,சுதந்திர போராட்டத்திற்காக எத்தனை குடும்பங்கள், வாழ்க்கையை இழந்தவர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள், பல லட்சக்கணக்கான மக்கள், வெள்ளையர்களை எதிர்த்து வாழ முடியாமல், அடிமைகளாக இருந்து வாழ்வதைவிட ,சாவதே மேல் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அப்போது இந்த வெள்ளையர்களோடு மறைமுக நெருக்கத்தில் இருந்தவர்கள் நேரு குடும்பம். அப்போதே அது மிகப்பெரிய வசதியான குடும்பம்! இந்தியாவில் அது ஒன்று. நேரு படிக்கின்ற கல்லூரிக்கு, நான்கு புறமும் வாசல், இந்த நான்கு வாசல்களில் கார் போய் நிற்கும் .அவரை ஏற்றி வருவதற்கு ,ஏதோ ஒரு வழியில் வந்து காரில் ஏறி விட்டால், மீதி 3 காரும் சும்மாதான் வரும்.
மேலும்,அது எப்படிப்பட்ட காலம்? என்றால், நம் இந்திய மக்கள் தினந்தோறும் ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு, வாழ்ந்த நம் முன்னோர்கள் காலம். நானே என்னுடைய அண்ணன் ஒருவர் சொல்வார் நம்ம ஊரிலே இரண்டு வீடுகள் தான் மத்தியானத்தில் சாப்பாடு செய்வார்கள். என்று சொல்லி கேள்விப்பட்டேன். அப்படிப்பட்ட காலத்தில் நேரு குடும்பம் எப்படி சொகுசான வாழ்க்கை வாழ்ந்தது? அது பற்றி எந்த வரலாறும் எதுவுமே இல்லை.

மேலும்,அப்படிப்பட்ட காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் ,செய்த சுதந்திரப் போராட்டத்தில், உயிர்த் தியாகமும், வாழ்க்கை தியாகமும் ,செய்து, இந்தியாவின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்களிடம் இருந்து ,பெற்றதை ஒவ்வொரு இந்தியரும் இன்று அந்த நாளை ,சுதந்திர இந்தியாவின் நாளாக கொண்டாடிய மகிழ்கிறோம்.
மேலும், சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவுக்கு சட்டம் வகுத்த டாக்டர் அம்பேத்கர் !அரசியலில் கொள்ளை அடிப்பவர்கள் வருவார்கள் என்று அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் ,அதற்கான சட்டங்களை அவர் இயற்றவில்லை. மேலும்,அம்பேத்கர் பெயரை சொல்லி அரசியலில் கொள்ளையடிக்கலாம் என்றால்! அம்பேத்கர் அதை ஏற்றுக் கொள்வாரா?
இப்போதுள்ள அரசியல் கட்சியினருக்கு அவருடைய தகுதி என்ன ?அவர் எப்படி வாழ்ந்தார்? அது கூட தெரியாதவன் எல்லாம் அம்பேத்கர் போட்டோவை வைத்துக்கொண்டு, அவரை ஜாதி தலைவராக்கி, மற்ற ஜாதிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலை .

மேலும்,அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? தீண்டாமையால் பாதிக்கப்பட்டார்கள். அதற்காக பி .சி .ஆர் சட்டம் கொண்டு வந்தார். ஆனால் ,இன்று அந்த சட்டம் அரசியல் கிரிமினல்கள் சுயநலத்திற்காக, அடுத்த சமூகத்தை மிரட்ட பயன்படுத்திக் கொண்டிருக்கும் சட்டமாக இருக்கிறது.
அக்காலத்தில் போடப்பட்ட சட்டங்கள் அக்கால மக்களுக்கு தான் அது பொருந்தும் இதை பலமுறை மக்கள் அதிகாரத்தில் எழுதியிருக்கிறோம் மேலும்,இப்படி சட்டத்தின் ஓட்டைகள் காலத்திற்கு ஏற்ப அதை சரி செய்ய வேண்டிய சூழ்நிலை சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆனால்! அதையெல்லாம் திருத்தக் கூடாது அதை வைத்து நாங்கள் இந்தியாவுக்கு எதிராக சதி செய்து கொண்டிருப்போம். சூழ்ச்சி செய்து ஆங்கிலேயர்கள் செய்த வேலை எல்லாம் நாங்கள் பார்ப்போம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று அரசியல் செய்வதற்கு ,இந்த சட்டங்கள் பக்க பலமாக இருக்கிறது.
ஏன் இன்றுவரை செய்தித் துறை அதிகாரிகள் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சர்குலேஷன் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் பத்திரிகை பற்றி படித்தவர்கள் உண்மையை புரிந்தவர்கள் எங்களைப் போன்ற சமூக நலன் தேச நலன் பத்திரிகையாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பத்திரிக்கைத் துறை காலம் மாற்றத்தால் இணைய வழி தளமாக மாறிவிட்டது. இன்று கூட ஒரு நிறுவனரிடம் பேசினேன். அவர் சொன்னார் பிரின்ட் மீடியா இல்லையென்றால் பத்திரிக்கை துறை இல்லை என்றார். உங்களுக்கு வயது என்ன என்று கேட்டேன் 55 என்றார்.

நான் சொன்னேன் பத்திரிக்கை வாங்கி படிக்கும் மக்கள் above 50 ! Below 50 பத்திரிக்கையை வாங்கி படிக்க மாட்டார்கள். நீங்கள் சும்மா கொடுத்தாலும், அதை படிக்காமல் கீழே போட்டு விட்டு போவார்கள். அவர்களுடைய மனநிலை எல்லாம் இணையதளத்தை நோக்கி தாண்டி இருக்கிறது. உண்மையை அவரும் புரிந்து கொண்டார்.

இப்படி பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கே, உண்மைகள் புரியாமல் இருக்கிறார்கள். Rules and regulation காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். அது தவிர்க்க முடியாதது. இதைத்தான் மத்திய மாநில அரசின் செய்தி தறைக்கு மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்தும் உண்மை.
மேலும், இக்காலத்து அரசியல் வாதிகள், அரசியல் கட்சியினர்,மக்கள் ஏமாந்தால் அந்த காலத்தில் வெள்ளையர்கள் இந்தியாவை துண்டு ஆடியது போல, இப்போது உள்ள காங்கிரஸ் கட்சி ராகுல் ஒரு கிரிமினல் அரசியல்வாதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

பேசுவதெல்லாம் உத்தமர்கள் வேஷம்! நடிப்பதெல்லாம் சிறப்பான நடிப்பு. காக்ரோச் என்ற சமூக விரோத கும்பலை! இந்த தேசத்திற்கு எதிராக நீட் தேர்வு வைத்து நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வைத்து ? என்னமோ தியாகிகள் போல,முஸ்லிம் இளைஞர்களை வைத்து இந்தியாவுக்கு எதிரான வேலை பார்க்கும் அரசியலை ராகுல் குடும்பம் செய்து வருகிறது.
ஆரம்பத்தில் இருந்து இவர்கள் இந்தியாவுக்கு எதிரான வேலைகள் தான் பார்த்தவர்கள் தான். இப்போது அந்த வம்சாவழியில் வந்த ராகுல் பதவி பித்து பிடித்து,இப்போதும் அதே வேலை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதைத்தான் பிரதமர் நரேந்திர மோடி !இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்து, நாட்டில் காடுகளில் உள்ள நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டு விட்டாலும்,

நம்மோடு இருக்கின்ற நக்சல் சிந்தனை உள்ளவர்களை இனம் கண்டு நாம் ஒதுக்காவிட்டால், இந்தியாவின் வளர்ச்சி வருங்காலத்தில் பாதிக்கப்படும் என்பதை இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் !மறைமுகமாக அதை தெரிவித்து இருக்கிறார்.
மேலும், தற்போதைய இளைய சமுதாயம், youtube பார்ப்பதிலும், ரீல்ஸ் பார்ப்பதிலும், வீடியோ போடுவதிலும், ஏதோ வந்தவரை பேசிவிட்டு ,போகின்றவர்களை பார்த்துக் கொண்டு, நீங்கள் வாழ்ந்தால்! நிச்சயம் எதிர்காலம் உங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

மேலும்,மக்கள் அக்காலத்தில் போராடி தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் உணவுக்கு போராட்டம் ,வாழ்க்கைக்கு போராட்டம் ,.ஆனால் , சுதந்திரத்திற்குப் பின் ஏழ்மை நாட்டில் வாட்டி வதைத்தது. அப்படி இருந்தும் மக்கள் சந்தோஷமாக நிம்மதியாக, நிறைவாக வாழ்ந்தார்கள்.
காரணம் அதற்கு எந்தவித எதிர்பார்ப்புகள் இல்லாமல்! வாழ்ந்தார்கள். இப்போது எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது.
அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற உழைக்காமல் , பெறுவது எப்படி? எப்படி வரும்?. பிறரை ஏமாற்றாமல் வருமா? அதுதான் இன்றைய அரசியலில் உழைக்காமல் எப்படி கொள்ளையடிக்கலாம்? சமூகத்தை எப்படி ஏமாற்றலாம்?

ஜாதியை எப்படி ஏமாற்றலாம்? இப்படி ஏமாற்றி வாழ்வது ஒரு நிறைவான வாழ்க்கையை எக்காலத்திலும், எந்த ஒரு மனிதனுக்கும் ,அது கொடுக்காது. மேலும்,இந்த இளைஞர்களை குறுகிய மனப்பான்மைக்கு , யூடியூப் களும், ரீல்ஸ்களும் ,சினிமாக்களும், சமூக வலைதளங்களும், சீரியல்களும், இவர்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்வதை தடுக்க முடியுமா?

மேலும், இதன் மூலம் இளைஞர்கள், மாணவர்கள், தங்களுடைய எதிர்காலத்தின் லட்சிய கனவுகள் நிறைவேற்ற முடியுமா? சிந்தியுங்கள். படித்த படிப்புக்கும், வாழ்க்கைக்கும், பிராக்டிகல் நிகழ்வுகளுக்கும், சம்பந்தமே இருக்காது. சில பேருக்கு போராடாமல் கிடைத்துவிடும்.
ஆனால், 99 சதவீத ஏழை, எளிய நடுத்தர மக்கள் படித்த படிப்புக்கு வேலை தேடும் போது ,அவர்கள் படுகின்ற துயரம், மனசுக்குள்ளே வாட்டி வதைக்கின்ற துயரங்கள், யாரிடம் சொல்ல முடியும்? மேலும், அரசியலில் சுயநலவாதிகளும், ஊழல்வாதிகளும், இரக்கமற்றவர்களும், நயவஞ்சகர்களும், நல்லவர்களாக நடிக்கின்ற ஒரு களமாக அரசியல் மாறிவிட்டது.

இவர்களை நம்பி போனால்! நடுத்தெருவில் நிற்பது மட்டுமல்ல, வாழ்க்கையையே தொலைத்து விடுவீர்கள் என்பதை மாணவர்களும், இளைஞர்களும், புரிந்து கொண்டால் சரி .
