பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு காரணம் என்ன? – ஆசிரியர் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

பட்டாசு தொழிற்சாலைகளின் விபத்து பற்றி ஏற்கனவே மக்கள் அதிகார இணையதளம் செய்தியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

மேலும்,பட்டாசு தொழிற்சாலை குறைந்த முதலீட்டில், அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு குடிசை தொழில் மாதிரி ஆரம்பித்து, அது பெரிய நிறுவனமாக உருவாக்குகிறார்கள்.

ஒரு கம்பெனியில் ஆறு மாத காலம் வேலைக்குச் சென்று வந்தால் ,வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் திடீரென்று பட்டாசு கம்பெனியை ஆரம்பித்து விடுவார். இவருக்கு என்ன பொருள் வாங்கினால் ?அது பட்டாசு தயாரிக்க முடியும் என்பது தெரிந்து கொள்வார், அவ்வளவுதான்.

தவிர,நம்ம பத்திரிகை நிருபர்கள் போல, கொஞ்ச நாளைக்கு பத்திரிகை நிருபராக பணியாற்றி, உடனே பத்திரிக்கையை ஆரம்பித்து விடுவார்கள். அதே கதை தான் இங்கும் நடக்கிறது .அதன் பாதிப்பு சமூகத்தில் எத்தனை குடும்பங்கள் பாதிக்கிறது? எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது? என்பதை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.

மேலும்,இதற்கு சயின்ஸ் பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்க வேண்டும் .இந்த கெமிக்கல் மூலப்பொருட்கள் குறித்து படித்திருக்க வேண்டும். எதுவும் தெரியாது. இதை சேர்த்தால் அது வெடிக்கும் .இதை சேர்த்தால் அது மத்தாப்பு பூ மாதிரி கொட்டும். இவ்வளவுதான் தெரியும் . அளவிடுகள் பற்றி எதுவும் தெரியாமலே இந்த தொழிலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.

மேலும்,இந்த கலவையை உருவாக்குவது, அதற்குள் இருக்கின்ற தொழில்நுட்பங்கள் தெரியாததால், இந்த பட்டாசு விபத்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

தவிர,இது பற்றி தொழிலக பாதுகாப்பு ( industrial safety officers)அதிகாரிகள் சென்று ஆய்வு செய்யும் போது, பட்டாசு தொழிற்சாலைகளை அவர்கள் சொல்லக்கூடிய எந்த ஒரு கருத்தும் இவர்கள் கேட்பதில்லை. ஆய்வுக்கு வருகிறார்கள் என்றால், அதைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொண்டு தலைமறைவாக இருக்கக்கூடிய இந்த பட்டாசு தொழிற்சாலை முதலாளிகள் பல பேர் இருக்கிறார்கள் என்கின்றனர்.

மேலும், இவர்களுக்கு அரசியல் பின்புலம் அதிகமாக இருக்கிறது. எல்லோரும் ஒரு அரசியல் கட்சியின் பின்புறத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், பட்டாசு விபத்து என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணமாக தெரிகிறது.

தவிர,நைட்ரேட், பாஸ்பரஸ், போன்ற வெடிப்பொருட்களை வைத்து தான் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இதை எப்படி வைத்து ,எப்படி பாதுகாப்பாக தொழிலாளர்களை வழிநடத்த வேண்டும் ?என்பதில் தான் மிக முக்கியமான அந்த தொழிலின் ரகசியம்.

பணத்திற்காக இதை எப்படியும் செய்யலாம் என்று செய்பவர்கள் தான் பல உயிரிழப்புக்களுக்கு ,பல குடும்பங்களின் பாதிப்புகளுக்கு, அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை முதலில் கண்டறிந்து, இந்த தொழிலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். லைசன்ஸ் கேன்சல் பண்ண வேண்டும். ஒரு தடவை விபத்து ஏற்படுத்தினால், மீண்டும் அந்த கம்பெனிக்கு லைசன்ஸ் கொடுக்கக் கூடாது. அந்த கம்பெனியின் லைசென்ஸை (உரிமம்)கேன்சல் செய்ய வேண்டும்.

இருப்பினும்,இங்குதான் அரசியல் இதற்குள் வருகிறது. அதனால், ஏற்படுகின்ற உயிரிழப்புகளையும், பொருட்சேதங்களையும் தவிர்க்க அதிகாரிகளின் அறிவுரையை சரி செய்யவில்லை என்றால், அந்த கம்பெனியின் லைசென்ஸ் உடனடியாக கேன்சல் செய்யுங்கள்.

மேலும்,ஒரு பத்துக்கு பத்து இடத்தில் எவ்வளவு பேர் வேலை செய்யலாம்? 100க்கு 100 இடத்தில் எவ்வளவு பேர் வேலை செய்யலாம்? எந்த இடத்தில் செட் (shed) அமைக்கலாம்? எப்படி அமைக்க வேண்டும்? அதில் எவ்வளவு பேர் வேலை செய்ய வேண்டும் ?

இவ்வளவு விதிமுறைகளையும் மீறி ,இங்கே தொடர்ந்து உயிரிழப்புக்கள் நடக்கிறது என்றால், பட்டாசு தொழிற்சாலைக்கு பின்னால் இருக்க கூடிய ஆபத்துக்களை பற்றி, ஆய்வு செய்யாமல், அதை முறையாக தொழில் செய்யாமல், அரைகுறையாக கற்றுக்கொண்டு ,விதிமுறைகளை பின்பற்றாமல் தொடரும் ,இந்த விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் முதலில் அந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் குறித்து அவர்களுக்கு ட்ரெயினிங் பயிற்சி கொடுக்க வேண்டும்.

பிறகு, விதிமுறைகள் படி செட் அமைக்க வேண்டும். ஆட்களை பணியமற்த்த வேண்டும் .இவ்வளவும் இருக்கிறது. ஆனால், இந்த பட்டாசு தொழிற்சாலை விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் தான் நடத்துகிறார்கள் என்று அதிகாரிகள் மூலம் வருகின்ற தகவல்.

அப்படி இருந்தும், இந்த விபத்துக்கள் தொடர்கிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் ,அரசியல் தலையிட இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது, அரசியல் உள்ளே வருகிறது.

அவர்களால் அதை மீறி எதுவும் செய்ய முடியாது. அதை எத்தனையோ அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அந்த உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற பரிதாபத்தில் தான் இருக்கிறார்கள். அதைக் கூட அந்த முதலாளிகள் உயிரிழந்த குடும்பங்களுக்கு அந்த இழப்பைக் கூட சரிவர கொடுப்பதில்லை.

இது ஒரு பெரிய வேதனையான சம்பவங்கள் தொடர்கதையாகிறது. இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில், உண்மையை கண்டறிந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும், அமைச்சர் வன்னி அரசு சகோதரி கூட சில தினங்களுக்கு முன் அவர்களுடைய இந்த பட்டாசு தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது. மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார் .இவர்கள் தலைமறைவு என்று செய்திகள் வெளிவருகிறது.

இதுதான் குறிப்பிட்டேன் .அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு , உயிரிழப்புக்களுக்கு யார் பொறுப்பு? இதை கருத்தில் கொண்டு அதிகாரிகளும் ,தமிழக அரசும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *