மே 27, 2025 • Makkal Adhikaram

பட்டியல் இன சமூகத்தில் மதம் மாறியவர்கள், தங்களுடைய பட்டியலை இனத்தின் அரசு சலுகை மாறாது என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலும் மாறினார்கள்.
அது கிறிஸ்தவ மதத்தில் மாறியவர்கள் அதிகம், மற்றும் மதங்களில் குறைவாக இருக்கலாம். இங்கே வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் மதம் மாறியவர்களுக்கு இல்லை என்று நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டது. ஆனால் அரசியல் கட்சிகள் அரசியல் லாபங்களுக்காக இட ஒதுக்கீடு என்று போராடுகிறார்கள். அது தவறானது.
.jpg)
எப்போது இந்து மதத்திலிருந்து, வேற்று மதத்திற்கு நீங்கள் மாறிவிட்டீர்களோ, அந்த மதத்தின் கோட்பாட்டின்படி நீங்கள் கடைப்பிடித்து வாழ்கிறீர்கள். கிறிஸ்து மதத்தில் மதம் மாறினால், அங்கே ஜாதி கிடையாது. அதேபோல் முஸ்லிம் மதத்தில் மதம் மாறினால், அங்கே ஜாதி கிடையாது. ஆனால், அவர்களுக்குள் பாகுபாடுகள் இருக்கலாம். அது எல்லா இடத்திலும் இருக்கிறது. அந்த பாகுபாடுகளை வைத்து இட ஒதுக்கீடுகளை கேட்க முடியாது.

மேலும், இந்த இட ஒதுக்கீடு கூட அம்பேத்கர் 10 ஆண்டுகளுக்கு தான் அதை சட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகு பொருளாதார ஏற்றங்கள், சமூக மாற்றங்கள், மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, இந்த இட ஒதுக்கீடு கொடுக்கலாம்.தற்போது,

உண்மையாக பார்த்தால், இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். இன்று சாதி என்பது பொருளாதாரத்தில் வளர்ந்தவர்களுக்கு சாதி இல்லை என்றே தோன்றுகிறது. பொருளாதாரத்தில் நலிபடைந்த மக்களுக்கு தான் சாதி இருக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் ,இவை அத்தனையும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் சமூகம் மட்டும் அல்ல, மற்ற எல்லா சமூகங்களுக்கும் இந்த இட ஒதிக்கீடு நிச்சயம் தேவை.

ஆனால், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றவர்களும் பட்டியல் இன சமூகத்திலும்,மற்ற சமூகங்களிலும், இந்த இட ஒதுக்கீடால் பயனடைகிறார்கள். இது உண்மையிலே தவறான ஒன்றுதான். இதை வைத்து ஜாதி கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். இதை வைத்து தேர்தலில் நின்று அந்த ஜாதி மக்களிடம் வாக்குகளை பெறுகிறார்கள். இப்படி ஜாதி என்பதை ஜாதி கட்சிகள், மத கட்சிகள், அவர்களை வைத்து அரசியல் செய்வதற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில், இவ்வளவு காலம் மதம் மாறிய பட்டியல் இன மக்கள், பட்டியலின மக்களுக்கு வரவேண்டிய இட ஒதுக்கீடை இவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக இந்த பக்கம் பேசுவதா? அந்த பக்கம் பேசுவதா? என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றம் பல மாநிலங்களில், தெளிவாக கூறிவிட்டது. பட்டியல் இன மக்கள் மதம் மாறிய போது, அவர்களுடைய ஜாதியும் மாறிவிட்டது. அதுதான் உண்மை. அம்பேத்கர் பட்டியலின மக்களுக்கு மட்டும்தான் அந்த இட ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தில் எழுதி இருக்கிறாரே ஒழிய, மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு அந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் எழுதவில்லை.
இப்போதாவது தெளிவாக அரசியல் கட்சிகளுக்கும், பட்டியலியன சமூகத்திற்கும், பட்டியிலின சமூகத்தில் மதம் மாறியவர்களுக்கும் உண்மை புரிந்துள்ளதா?