பாரதிராஜாவின் இறப்பு! தமிழ் சினிமா உலகத்தின் இழப்பு – ஒரு சாமானியனின் படைப்பு .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

பாரதிராஜா எப்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்தாரோ, அப்போதே சினிமா உலகில் ஒரு புதுமையை புகுத்தி ,புரட்சியை ஏற்படுத்தியவர்.

இவர் வந்த காலத்தில் சினிமா என்ற நிழல் உலகத்தில் இளைஞர்களை சினிமா மோகத்தில் ஈர்த்தவர் . மேலும், கிராமிய ரசனைகளை சினிமாவில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. இவருக்குப் பின் எத்தனையோ இயக்குனர்கள் வந்தாலும் ,அவர் இடத்தை நிரப்ப முடியவில்லை.

ஏன்? அவர் மகனாலே கூட அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. எனவே, ஒரு கலையின் படைப்பாற்றல், கலைஞன் பிறக்கும்போதே ,அவனுடன் சேர்ந்தே பிறக்கிறது. அவன் இறக்கும் போதும், அந்தப் படைப்பாற்றல், அவன் இறந்த பிறகும், அதை நின்று பேசுகிறது. அவன் தான் கலைஞன்.

அந்த வகையில் இன்றைய இயக்குனர் பாரதிராஜா! காலம் அவரை சினிமா உலகம் இருக்கும் வரை, திரும்பி பார்த்துக் கொண்டே இருக்கும் . அவர் இறந்தாலும் ,அவருடைய புகழ் சினிமா உலகில் இறவாது . இயக்குனர் பாரதிராஜாவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *