கவர்னரை சந்தித்து மனு அளிக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ! நாளை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்ற தகவல் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாளை இவர் மட்டும் பதவி ஏற்றுக்கொள்வாரா? அல்லது மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்வார்களா? என்பது இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும் இவர் வியாழக்கிழமை நிச்சயம் பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்எல்ஏக்கள் தேவைப்படுவதால், இதற்கு அதிமுகவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் அவர்கள் என்ன கண்டிஷன் போடுகிறார்கள்? என்பது தெரியவில்லை. சிலர், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்றும், ஆதரவு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்றும், இரு தரப்பு கருத்துக்கள் இன்றைய அதிமுக கூட்டத்தில் பேசியதாக தகவல்.

ஆனால், அதிமுக! ,தவெகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால், அந்தக் கட்சியிலிருந்து சுமார் 30 பேருக்கு மேல் உடைத்துக் கொண்டு, வெளியில் வருவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

எனவே, தவெக விற்கு மெஜாரிட்டி இல்லை என்று நினைக்கத் தேவையில்லை. அதற்கான அத்தனை ஏற்பாடுகளும், பிஜேபி மறைமுகமாக செய்து வருவதாக தகவல்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள், தவெக வுக்கு ஆதரவு கொடுப்பதாக கடிதமே கொடுத்து விட்டார்கள். இதேபோல், திருமாவளவன் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தவெக விற்கு ஆதரவு கொடுக்கும் என்ற தகவலும், வெளியாகி உள்ளது.

எனவே, நாளை விஜய் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்வார் அதை எந்த இடத்தில் ஏற்றுக்கொள்வார்? என்று இன்னும் செய்தி துறைக்கே தகவல் தெரியவில்லை என்கின்றனர். ஆனால்,நாளை முதல்வராக விஜய் பதவி ஏற்றுக் கொள்வார் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *