
அரசியல் சொந்த நலனுக்காக இன்றைய அரசியலா? அது எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே எப்படி இருந்தது? என்பதுதான் நம் நாடு திரைப்படம்! அதுதான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்டமன்ற நிகழ்வுகளின் அரசியலா?
மேலும்,எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகள் ,அதிகம் படிப்பறிவு இல்லாதவர்கள், அப்போதும் மக்களை ஏமாற்றி வாழ்ந்த அரசியல்! அந்த அரசியலை எதிர்த்து தான் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார்.
அது ஒரு குறிப்பிட்ட ஊரில் ,குறிப்பிட்ட சிலர் மட்டுமே அரசியலில் ஈடுபட்டிருந்தார்கள். அதை மாற்றி சாமானிய மக்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று எம்ஜிஆர் அரசியல் புரட்சி செய்து கொண்டு வந்தவர்.
எம்ஜிஆர் ஆள் தான் கருணாநிதி அரசியலில் ஜெயித்தார். ஜெயித்த பிறகு இருவருக்கும் அரசியல் போட்டி வந்து மீண்டும் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் என்ற பட்டத்துடன் முதலமைச்சரானார்.
அன்று அவர் சாமானிய மக்களுக்காக அரசியலுக்கு வந்தார். சாமானிய மக்களை அரசியலில் ஈடுபடுத்தினார். இன்று விஜய் ஊழல்வாதிகளை எதிர்த்து ,ஊழல் அரசியலை எதிர்த்து ,அரசியல் புரட்சி செய்து வந்திருக்கிறார்.
நான் மக்களின் பணத்தில்! ஒரு பைசா கூட தொட மாட்டேன். அதில் அவர் கடைசி வரை இருப்பார். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், இவர் கூட்டணியில் சேர்த்த காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், இவர்களெல்லாம் நம் நாடு திரைப்படத்தில் எம்ஜிஆரிடம் முறையிடுவது போல், இன்று விஜய்யிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்தி அரசியலை விஜய் அறிவிக்க வேண்டும் என்று கூவுகிறார்கள்.
இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் வேறு துறை ஏதாவது கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் தலைமைச் செயலாளர் என்று கம்யூனிஸ்டுகள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுடைய அரசியல் மக்களைப் பற்றிய அரசியல் ஏதாவது இருக்கிறதா? தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? வருங்கால இளைய தலைமுறைகளுக்கு என்ன அரசியல் ரீதியாக செய்ய முடியும் ?அதையெல்லாம் ஒரு நாளும், ஒருவரும் பேசி வெளியில் வரவில்லை. ஆனால், இவர்களுடைய சொந்த நலனை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் அரசியல் தெரிந்த மக்கள்! இந்த அரசியல் கட்சிகளின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இதை தான் மக்கள் அதிகாரத்தில் அடிக்கடி போலி அரசியல்வாதிகளாக இவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அரசியலுக்கு தான், கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் போலியான அரசியல் பிம்பத்தை வியாபாரம் ஆக்கி மக்களிடம் உண்மை என்று போலியான பத்திரிகை பிம்பத்தை ஏற்படுத்தி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இதை எதிர்த்து பேசுவதற்கு சாமானிய பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகைகள் எத்தனை ?என்று எண்ணிப் பார்க்க கூட தகுதி இல்லாமல் இருக்கிறது.

ஆனால், நானும் பத்திரிகை என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு 20 ,30 பத்திரிகைகளாவது, இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொன்னால் மக்களுக்கு யார்? உண்மையான அரசியல்வாதி? யார் மக்களுக்காக அரசியல் செய்கிறார்கள்? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இனியாவது மக்களுக்கு அரசியல் என்றால் என்ன? என்று இளைய தலைமுறை படித்தால் தான், வருங்காலத்தில் இப்படிப்பட்ட போலி அரசியல்வாதிகள் இடம் இருந்தும், அரசியல் கட்சிகள் இடம் இருந்தும் , அவர்களைப் பற்றி உயர்வானவர்களாக காட்டுகின்ற பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் இருந்தும், உங்களுக்கான எதிர்கால அரசியல் எப்படி இருக்க வேண்டும்?

அதற்கு தகுதியானவர்கள் எந்தெந்த அரசியல் கட்சிகளில் யார் ?அதற்கான தலைமை ?அதற்கான தகுதி? யாருக்கு என்பதை தேர்வு செய்ய முடியும்.

அது தெரியாமல், ஊழல்வாதியும் உத்தமனாக பேசுவதை காட்டிக் கண்டு, கிரிமினல்களை அரசியலில் நல்லவர்களாக காட்டிக் கண்டு, அவர்கள் தியாகிகளைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டு, இதையெல்லாம் பார்த்து அரசியலில் உண்மை எது என்று தீர்மானிக்க மக்களால் முடியுமா?
அரசியலை பற்றி படித்தால் தான் முடியும் என்பதை புரிந்து கொண்டால் சரி.
