
தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கைலாஷ் யாத்திரை சென்ற போது ,நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகப்பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதில்,தமிழர்கள் பெரும்பான்மையினர் தப்பி பிழைத்து வந்திருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்துள்ளது. இதில் அரசு என்ன செய்யணும் என்பதை அரசு செய்து விட்டது.
ஆனால், இறைவழிபாடு என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு, மலை யேறுவதை, அதை எந்த தெய்வமும் சொல்லாது. அப்படி எதிர்பார்க்கவும் செய்யாது.மேலும்,அப்படி கையிலே பிடித்துக் கொண்டு, மலையேறி எத்தனையோ முறை கைலாஷ் போய் வந்தவர்கள், பத்ரிநாத் போய் வந்தவர்கள், என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.

யாரும் கடவுளை பார்த்ததாக சொல்லவில்லை. அவர்களுக்கு கடவுளுடைய அருள் கிடைத்ததாகவும் சொல்லவில்லை. மேலும் அவர்கள் மிகப்பெரிய ஞானத்தை அடைந்து விட்டார்களா? அதுவும் இல்லை.
யாரோ சில போலி ஆன்மீகவாதிகள் கைலாஷ், பத்ரிநாத், போன்ற இடங்களுக்கு சென்று வந்தால் அடுத்த பிறவி இல்லை. இது போன்ற கட்டுக்கதைகளை சொல்லி விடுகிறார்கள். இதுவரை சென்றவர்களுக்கு இது போன்ற இயற்கையின் இடர்பாடு இல்லை. போய் வந்து விட்டார்கள்.

ஆனால், இனி போலியான பக்தியை கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லை .அதுதான் இந்த இயற்கையின் பேரிடர் உணர்த்துகிறது. மேலும் ,அங்கு சென்றால்தான் நமக்கு கடவுள் கொடுப்பாரா? இல்லையென்றால் கொடுக்க மாட்டாரா?

ஒரு பக்கம் இயற்கையின் பேரிடரை வைத்து இமயமலை முதல் கன்னியாகுமரி வரை ஜோதிடர் ஷெல்லி நடக்கும் என்கிறார். இது எல்லாம் மழைக்காலத்தில் வெள்ளம் வந்தால் நம்முடைய டிவிகள் மக்களை பயமுறுத்தும்.
அது போல் தான் ,இவர்களும் பயமுறுத்துகிறார்கள். உண்மையாக தெய்வ நம்பிக்கையோடு இருக்கின்ற மக்களுக்கு ,எந்த ஆபத்தும் இல்லை. இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வந்தாலும், தெய்வம் அவர்களை காப்பாற்றும்.மேலும்,

கடவுளிடம் எதை எதிர்பார்த்து இவர்கள் போனார்கள்? வாழ்க்கையே மாற வேண்டும் என்றா? இல்லை என்ன வேண்டுதலோடு கடவுளிடம் போனார்கள்? அந்த வேண்டுதலை வீட்டிலிருந்தோ அல்லது பக்கத்தில் இருக்கும் கோயில்களிலோ ,பக்கத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய கோவில்களிலோ சென்று வணங்கினாலே உங்களுக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்கும்.
மேலும்,கிடைக்காதது மலையேறி, மலையில் இருந்து கீழே விழுந்தாலும், கிடைக்காது. இதற்கு போலியான பக்தி போலி சாமியார்களின் அறிவுரை, போலி ஜோதிடர்களின் அறிவுரை, இது எல்லாம் தான், இப்போது இந்த மக்கள் அல்லல் பட வைத்திருக்கிறது. இதையெல்லாம் ஆய்வுக்கு எடுத்து பார்த்த தான் சொல்கிறேன்.
மேலும், இன்று ஜோதிடர்கள் யாருமே 100% சொல்லக்கூடிய அளவுக்கு இல்லை. ஒரு சில விஷயம் நடந்தாலே நான் சொல்லி நடந்தது என்று அதை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். அரைகுறையாய் ஜோதிடம் கற்றுக் கொண்டு, எத்தனையோ பேர் குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

தவிர,ஜோதிடம் 100% உண்மை .அதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை .ஆனால், ஜோதிடர்கள் தான் மாறுபட்ட கருத்து உடையவர்கள். ஒரு ஜாதகத்தை 100 பேரிடம் காட்டுங்கள். ஒரே ஜாதகம் தான் ,நூறு பேரும் நூறு விதமாக தான் சொல்வார்கள்.
அப்போது யார் சொல்வதை எடுத்துக் கொள்வீர்கள்? நடந்தால்தான் ஜோதிடம். நடக்கவில்லை என்றால் !அது அத்தனையும் பொய் தானே! அதேபோல்தான் போலி சாமியார்கள், இந்த போலி ஜோதிடர்களின் அறிவுரைகளும், மக்கள் இப்போது அல்லல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இவர்கள் ஆன்மீகத்தையும், ஜோதிடத்தையும் வியாபாரம் ஆகிவிட்டார்கள். யாருமே மக்கள் வைத்ததை வாங்க மாட்டார்கள்.ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் இப்படித்தான் இவர்களுடைய பீஸ். மேலும்,
தெய்வத்தை உள் அன்போடு வணங்கினால், யாரும் தெய்வத்தை தேடி போக வேண்டியது இல்லை. தெய்வம் நம்மை தேடி வருகிறது. உங்களுடைய பக்தி உண்மையானதாக இருந்தால், உங்கள் கனவில் அந்த தெய்வம் வந்து பேசும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ ,அதற்கு உரிய பதிலை அது கொடுக்கும். இதுதான் தெய்வம். எனவே நாட்டில் மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுவது போல, இந்த போலி ஜோதிடர்களும், போலி சாமியார்களும், என்ன யாத்திரைகளை போய் வர யார் சொன்னார்களோ? யாருக்குத் தெரியும்?
