
அரசியலில் சட்டத்தை ஏமாற்றி எப்படி கொள்ளை அடிப்பது? அந்த சட்டத்தின் மூலம் விஞ்ஞான பூர்வமாக கொள்ளையடிப்பது எப்படி? இந்த சட்டங்கள் ஓட்டை சட்டங்களாக இருந்து வருகிறது.

அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் மக்களின் மனநிலை வேறு இதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் எழுதி வருகிறது. இப்பொழுது வாழுகின்ற மக்களின் மனநிலை வேறு. அப்போது ஏமாற்றுவது எப்படி என்று தெரியாமல் வாழ்ந்த காலம் .இப்போது ஏமாற்றுவது வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிற காலம் . இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் .

அதனால்தான் இந்த அரசியலில் வன்முறை, கொலை, மோசடி, கற்பழிப்பு ,ஊழல் ,ஜாதி, மோதல்கள், மத மோதல்கள் ,போராட்டங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது ,இவை அத்தனையும் அரசியல் ஆக்கப்பட்டு, இன்று படித்த மாணவர்கள் கூட, இந்த அரசியல் கட்சிகள் விட்டு வைக்கவில்லை.

நல்லது செய்கிறேன் என்று சொல்லி மக்களை போராட்டத்தில் வறுமையில் நடுத்தெருவில் நிற்க வைப்பது தான் இந்த அரசியல் கட்சியின் அறிவின் முக்கிய வேலை. இப்போது எதிர்க்கட்சிகள் ,நீட் தேர்வை வைத்து இப்போது ஏமாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த உண்மைகள் அவர்களுக்கு கசக்கும். அதற்கும் ஒரு பட்டத்தை வைத்திருப்பார்கள். இந்த பத்திரிக்கைக்கு கொடுப்பதற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் ? நினைத்தாலும், இங்கே செல்லுபடி ஆகாது ராசா!

இது மக்களுக்கான பத்திரிக்கை! அதனால்தான் மக்களிடம் உண்மையை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஏற்றுக்கொண்டால் பிழைத்துக் கொள்வார்கள். ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கவலை இல்லை. வந்ததை அவர்கள் அனுபவிக்கப் போகிறார்கள். சொல்ல வேண்டியது கடமை. மேலும், இன்று

நீட் தேர்வு தேவையா? இல்லையா? என்பதை அரசியல் கட்சிகள் முடிவு செய்ய முடியாது .அது தேவை ,தேவையில்லை என்பதை படித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ விஞ்ஞானிகளும் ,தான் அதை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்.

இதைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் தான், பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வை முடிவு செய்திருப்பது மருத்துவ கவுன்சில் !அது பல மருத்துவ வல்லுனர்கள் கூடுகின்ற ஒரு அரங்கம், அது முடிவு செய்கிறது.
எதுவுமே தெரியாத ஒரு கூட்டம், கொடி பிடித்துக் கொண்டு, கோஷம் போட்டுக் கொண்டு , இந்த ஊடகங்கள் பெயரில் அவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் நியாயப்படுத்திக் கொண்டு, அது உண்மை என்று நம்பி, இன்று மக்களும் , மாணவர்களும், வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,உண்மையை எழுதக்கூடிய பத்திரிகைகள் லட்சத்தில் ஒன்று கூட தேருமா? என்பது தெரியவில்லை. உண்மை தெரியாமல், போலி அரசியல்வாதிகள் பின்னால் போனால், மக்கள் அநியாயமாக அடிபட்டு சாவார்கள். இந்த மாணவர்களும் ,அதே நிலை தான். இவர்கள் சாவிலும் அரசியல் செய்வார்கள்.

இவர்கள் செய்வது மக்களுக்காக அரசியலா? பேசுவது தான் மக்களுக்காக அரசியல் போல் தெரியும். ஆனால், நோக்கமெல்லாம் அவர்கள் பதவி வெறிக்காகவும், பல ஆயிரம் கோடிகளை சட்டப்படி கொள்ளை அடிக்கவும், இந்த அரசியல் கட்சிகள் பெயரில் அடியாட்களை இறக்கி வைத்திருக்கிறார்கள்.

இந்த அடியாட்கள் கூட்டத்தை நம்பி, உழைப்பவன், படித்தவன், நேர்மையானவன், இவர்களுக்கெல்லாம் அரசியல் இல்லை. ஊர ஏமாற்றுபவனுக்கு அரசியல் ஆக்கிவிட்டார்கள். அடியார்களுக்கு அரசியல் ஆக்கிவிட்டார்கள். கிரிமினல்களுக்கு அரசியல் ஆக்கிவிட்டார்கள். இவர்களைத் தவிர ,இன்று அரசியலில் பதவிக்கு வர முடியுமா?

இவர்கள் அத்தனை பேரும் உத்தமர்கள் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த உத்தம வேஷத்திற்கு பின்னால் மக்கள் உண்மையை படிக்காமல், ஏமாந்தது தான் இன்று திமுக ,,அதிமுகவில் ஊழல் செய்து குறுநில மன்னர்களாக ஆகிவிட்டார்கள்.

இவர்களுடைய சொத்துக்கணக்கு பினாமி பெயரில் உள்ளது வரை குறைந்தபட்சம் 500 கோடி முதல் 1000 கோடி ,அதற்கு மேலும் பல ஆயிரம் பல லட்சம் கோடிகள், இந்த ஊழல் செய்து பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டார்கள்.

ஐந்து வருடம் பதவியில் உட்கார்ந்து கொள்ளையடித்ததற்கு சன்மானமாக சாகும் வரை இவர்களுக்கு பென்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 30, 40 ஆண்டுகள் அரசு துறையில் வேலை செய்யக்கூடியவர்களுக்கு பென்ஷன் இல்லை என்ன நியாயம்? இதை நீதிமன்றம் ஆவது திரும்பிப் பார்க்கிறதா? நாட்டில் நீதி இருக்கிறதா ?என்ற கேள்வியே எழுந்திருக்கிறது.

எனவே,மக்கள் ஏமாந்தது போதாதா? மாற்றம் தேவை என்று இப்பொழுது தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். எவ்வளவு பேர் வாக்களித்து இருக்கிறார்கள்? ஏறக்குறைய 1. 3/4 கோடி மக்கள் மாற்றம் தேவை என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

இன்னும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் ?என்பது கணக்கெடுத்தால் நான் சொன்ன அடியாட்களும் ,ரவுடிகளும், கிரிமினர்களும், கொடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டிருக்கும் கூட்டங்களும் ,இவர்கள்தான் இன்று கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அரசியலில் மக்களை ஏமாற்ற தெரியாதவர்கள். மக்களுக்காகவே உழைத்தவர்கள் சொத்து சம்பாதிக்கவில்லை. கௌரத் திற்காக வாழ்ந்தவர்கள்.

அதனால்தான் அவர்கள் மக்களுக்காக உழைத்தார்கள். உழைக்காதவர்கள் இன்று பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து, இருக்கிறார்கள். இதிலிருந்து மக்கள் அரசியலை படித்துக் கொள்ளுங்கள்.

மேலும்,இந்த அரசியலும், அரசியல் கட்சியினரும் ,அரசியல் கட்சிகளும் ,யாருக்காக இருக்கிறது? அவரவர் சுயநலத்திற்காக இருக்கிறது. இதிலிருந்து பொதுநலம் எங்கே? என்ற கேள்வி? இப்போது மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
பொதுநலம் என்ற பெயரில், மக்களை ஏமாற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் இன்றைய அரசியல்!இதை புரியாமல் வாழ்ந்தால் !அரசியல் மக்களுக்கு ஏமாற்றமே.

