மக்கள் பணியை செய்யாமல்,ஊடக விளம்பரத்தால், அரசியல் கட்சிகள் ஜெயிக்க முடியுமா ? – மக்கள் அதிகாரம்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள்

மக்களுக்காக கொடுக்கப்பட்ட அதிகாரத்தை, அரசியல் கட்சிகள் ஊடக விளம்பரத்தால், அதிமுகவை பற்றிய திமுகவும், திமுகவும் பற்றி அதிமுகவும்,மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகளும், இப்படி போட்டி, போட்டு பேசி ஊடக விளம்பரத்தை தான் தேடிக் கொள்கிறார்களே தவிர ,,

மக்களுக்கு என்ன தேவை? என்பதை செய்ய இந்த அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை.

தற்போது பாமகவில், அன்புமணிக்கும்,ராமதாசுக்கும் உள்ள தகராறு பிரச்சனை.இது எல்லாம் ஒரு ஊடக விளம்பரமாக தான் இருக்கிறதே ஒழிய,இதனால் வன்னிய சமுதாயத்திற்கு, எந்த நன்மையும் இல்லை.

அந்தக் கட்சி வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றுவதற்காக இருக்கிறதா? இல்லை, அவர்களுக்கு சேவை செய்ய இருக்கிறதா? இது இரண்டே கேள்வி தான், வன்னிய சமுதாயம் ராமதாசுக்கு வைக்கின்ற முக்கிய கேள்வி?இதுவரை ராமதாஸ் செய்ததுன்ன?இனிமேல் செய்யப் போறது என்ன? 40 ஆண்டு காலத்தில் என்ன செய்தார்?என்பதை பட்டியல் போட்டு சொல்லட்டும்.

அதன் பிறகு,வன்னியர் சமுதாயம் இவர்களை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும்,அவர்களுடைய விருப்பம் இவர்கள் என்ன சொல்வார்கள்?oசெய்தால் தானே, சொல்வதற்கு என்ன இருக்கிறது பொய்தானே சொல்ல வேண்டும். இப்படி பொய்களை சொல்லி, வாயிலே கதையை ஓட்டிக் கொண்டு எல்லா அரசியல் கட்சிகளும் இன்று ஊடக விளம்பரத்தையும் தேடிக்கொண்டு, இந்த பொய்களை மக்களிடம் இதுதான் அரசியல் என்று தொடர்ந்து ஏமாற்றும் ஊடகங்களின் பொய்களை மக்கள் நம்புவார்களா? மேலும்,

தமிழ்நாட்டில் இதுதான் உண்மை என்று நம்பி ஏமாறும் பாமர மக்கள் தொடர்ந்து ஏமாறுவார்களா? இதை இன்றைய பெரிய பத்திரிகைகள், பெரிய தொலைக்காட்சிகள் என்று பேசுபவர்கள் இந்த வியாபாரத்தை பத்திரிக்கை சமுதாயம், உண்மையை பேசுபவர்கள் youtube களில் தினத்தந்தி பற்றி தமிழா,தமிழா பாண்டியன் சொல்வதற்கு முன்னே, தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளை பற்றி விமர்சனம் செய்யும் ஒரே பத்திரிக்கை மக்கள் அதிகாரம்.

பத்திரிக்கை துறை எப்போது வியாபாரமாக்கப்பட்டதோ,அப்போதே உண்மைகள் மறைக்கப்பட்டது. இந்த உண்மைகளை தமிழ்நாட்டில் எத்தனை பத்திரிகைகள் சொல்கிறது? என்பதை தமிழக வாசகர்கள் தான் பட்டியலிடுவார்களா? மேலும்,

தேர்தல் நேரத்தில் ஆவது உண்மையை சொல்ல வேண்டும் அல்லவா?நான் இதை செய்தேன்.நீ என்ன செய்தாய், என்று ஆதாரத்துடன் வெளியிட வேண்டும் அல்லவா? ஆனால்,ஆதாரம் என்பது எந்த அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது? இந்த அரசியல் கட்சிகள் பொய் சொல்வதற்கு தயங்க மாட்டார்கள். அந்தப் பொய் என்று நிரூபிக்கப்பட்டால், அதற்கும் ஒரு விளக்கம் தருவார்கள். இப்படி இவர்கள் தவறான புள்ளி விவரங்கள் சொல்வார்கள்.அதையும் இந்த பத்திரிகைகள் பல,எழுதிக் கொண்டிருக்கும். ஆனால், உண்மையாக உழைப்பவர்கள் தானே, மக்களிடம் அந்த உண்மைகளை சொல்ல முடியும். இவர்கள் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

அதனால், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஊடக விளம்பரத்தை தேடுவதை விட, மக்களிடம் சென்று மக்களுக்கு தேவையான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு என்ன வழி?என்பதை தான் தேட வேண்டும்.

இன்று வரை திமுக ஏதோ செய்து விட்டது போல், இந்த பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் போலி விளம்பரத்தை செய்து கொண்டு மக்களை ஏமாற்றலாம் என்று கனவு காண முடியாது. அப்படி கனவு கண்டவர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள். எடப்பாடியும் போன தேர்தலில் இந்த ஊடக விளம்பரத்தை தான் தேடினார். மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.

அதே நிலைமைதான் ஸ்டாலின் இப்போது ஊடக விளம்பரத்தை தேடுகிறார் பாட்டாளி மக்கள் கட்சியான ராமதாஸ் ஊடக விளம்பரத்தை தேடுகிறார்.விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், ஊடக விளம்பரத்தை தேடிக் கொண்டிருக்கிறார். சம்பந்தமே இல்லாமல்,அம்பேத்கர், அண்ணா அவர்கள் பெயரை சொல்வதற்காகவது நீங்கள் உழைத்திருக்க வேண்டும் அல்லவா? உழைக்காமல் வாயிலே பேசுவதெல்லாம் அரசியல் என்று மக்களை ஏமாற்ற முடியுமா?

அதனால் மக்களிடம் ஊடக விளம்பரத்தை தேடுவதை பேசுவதை நிறுத்திவிட்டு,,மக்கள் பணி என்ன? என்பதை செய்ததை நிருபியுங்கள்.பிறகு உங்களுக்கு வாக்களிப்பதை பற்றி மக்கள் சிந்திக்கட்டும். – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *