
மடப்புரம் காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக அந்தப் பகுதியில் பேசப்படுகிறது.
அப்படிப்பட்ட அந்த தெய்வ சக்தி மிகுந்த கோயிலில் வேலை செய்யக்கூடிய அஜித் குமார் காவல்துறையால் அடித்து துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளான் என்பது பிரேத பரிசோதனைகளால் தெரியவந்துள்ளது.

இங்கே காவல்துறை அதிகாரம்,சட்டம் நம் கையில் இருக்கிறது என்று நினைத்தது.நான் என்ன எழுதினாலும்,அது தான் சட்டம். அவர்களுடைய நினைப்பே எந்த அளவிற்கு தவறானது என்பது இந்த சம்பவம்.

மேலும், ஒரு தெய்வ சன்னதியில் தெய்வம் இருக்கிறதா? இல்லையா? என்பதை அந்த தெய்வ சன்னதியில் வேலை செய்யக்கூடிய அஜித்குமார் என்ற நபரை துன்புறுத்தி கொலை செய்து விட்டார்கள். அதற்கு காரணமான நிகிதா என்ற பெண்மணி 13 சவரன் நகை காணாமல் போனதாக கொடுத்த புகார் அடிப்படையில் தீர விசாரிக்காமல் நீதியை பற்றி தவறாக எடை போட்டு, ஒரு தவறான நடவடிக்கை எடுத்ததன் விளைவு இன்று அத்தனை காவல்துறை அதிகாரி முதல் கான்ஸ்டபிள் வரை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அரசன் அன்றே கொள்வான். ஆனால்,தெய்வம் நின்று கொள்ளும்.

காவல்துறை தெய்வம் எங்கேபேசப்போகிறது? என்று நினைத்தார்கள். மேலும், தெய்வம் என்ன செய்து விடப் போகிறது? என்று நினைப்பவர்கள் தெய்வம் இருக்கிறது என்று சரியான தண்டனை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. ஏனென்றால், எந்த சாட்சியும் இல்லை என்று நினைத்தார்கள். யாரோ ஒருவர் மறைமுகமாக வீடியோ எடுத்து அதை நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார். இது தான் தெய்வம். மேலும்,
பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கொடுத்த அறிக்கை படித்தால் நெஞ்சமே பதறுகிறது. இது எவ்வளவு பெரிய கொடூர புத்தி உள்ளவர்கள் தான் இந்த செயலை செய்ய முடியும். இதை எல்லாராலும் செய்ய முடியாது.

எப்படி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவம் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்ததோ அதே போல் தான் திமுக ஆட்சி மாற்றத்திற்கு இந்தக் கோயில் பணியாளனின் மரணமும் திமுக ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கப் போகிறது..இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசாத மக்களே இல்லை அந்த அளவிற்கு மக்களிடம் ஒரு மன வேதனையும் அதிர்வலையும் ஏற்படுத்தியிருக்கிறது. இல்லையென்றால் மக்கள் இந்த அளவிற்கு இந்த விஷயத்தை பெரிதாக பேச மாட்டார்கள்.மேலும்,
ஒரு பக்கம் ஆட்சியாளர்கள் இதை செய்ய சொல்லவில்லை. ஆனால் காவல்துறை செய்தது அதற்கு பொறுப்பு முதலமைச்சர் தான், ஏனென்றால் அவர்தான் இவர்களை கட்டி மேய்க்கும் முதலாளி. அதனால் தான் அஜித் குமார் குடும்பத்திடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கூட கேட்டு விட்டார். இதைப் பற்றி ஒரு அதிகாரியிடம் சொல்ல அதற்கு அவர் சொல்கிறார் எலக்சன் நெருங்கிவிட்டது,அதனால் மன்னிப்பு கேட்டார். இல்லையென்றால் அதைப்பற்றி கண்டு கொள்ள மாட்டார் என்று தெரிவித்தார்.
மக்கள் எந்த அளவுக்கு ஆட்சியாளர்களை புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. மேலும் அந்த காலத்தில் காவல்துறை என்றால் ஒரு மதிப்பு, மரியாதை பயம் இருந்தது.இப்போது அது சுத்தமாக போய்விட்டது.யாரோ ஒரு சிலர் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள் இல்லை என்று மறுப்பதற்கு இல்லை. இவர்கள் வேலைக்கு வரும்போது ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் நாம் வீட்டுக்கு எடுத்து போவது என்ற நினைப்பில்

தான் வருகிறார்கள். நான் ஒரு மாதத்தில் இத்தனை நல்ல விஷயங்களை செய்திருக்கிறேன் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தவர்களை விரல் விட்டு தான் எண்ண முடியும்.எனவே, பணம் முக்கியம் என்று வேலை பார்த்தால்,
என்ன நடக்கும்?.இப்படி தான் நடக்கும். மேலும் அஜித் குமாரின் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அறிக்கை சொல்லும் தகவல் என்ன?
பிரேத பரிசோதனை அறிக்கையில் 12 சிராய்ப்புகள், பெரும்பாலும் மேல் உடலில், மற்றும் தலை முதல் கால் வரை 44 காயங்கள் இருந்தன. இந்த காயங்கள் 9 செ.மீ முதல் 23 செ.மீ வரை நீளமாக இருந்தன. மேலும் அவை தசை ஆழம் அல்லது எலும்பு ஆழம் வரை சென்று, பல்வேறு திசைகளில் ஒன்றுடன் ஒன்று கலந்திருந்தன. மேலும்,
இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு
மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு
மண்டை ஓட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம்
வெளியானது அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை
நாக்கைக் கடித்ததை போன்ற நிலை; தலையில் அடிபட்டதால் வலிப்பு
கண்கள் சிவந்து வீங்கியுள்ளன;
காதுகளில் ரத்தக்கசிவு
உடலில் 6 பெரிய காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன; மொத்தமாக உடலில் 50-க்கும் மேற்பட்ட காயங்கள்
இதயத்தில் இரு இடங்களில்
ரத்தக்கசிவு
கல்லீரலில் ரத்தக்கசிவு ஆகியவை அவருக்கு ஏற்பட்டு உள்ளன.
கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும்,
லத்தி போன்ற பொருளினால் ஏற்பட்ட காயங்கள் அதிகப்படியாக உள்ளன. 50க்கும் மேற்பட்ட காயங்களில், 45 ஆழமான காயங்கள் இருந்தன. வலி, இரத்த இழப்பு அல்லது காயம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கடுமையானதாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும்,
இடது வென்ட்ரிக்கிளின் பின்புற சுவரில் பெடெக்கியல் ரத்தக்கசிவுகள், இதயத்தின் உச்சியில் 3 x 1.5 செ.மீ பாதிக்கப்பட்ட பகுதி, குறுகிய கரோனரி ஆஸ்டியா மற்றும் பெருநாடியின் வேரில் பாதிப்பு ஏற்பட்டு
உச்சியில் 3 x 1.5 செ.மீ பாதிக்கப்பட்ட பகுதி, குறுகிய கரோனரி ஆஸ்டியா மற்றும் பெருநாடியின் வேரில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளன. இதெல்லாம் அவரின் மரணத்திற்கு காரணமாகி உள்ளது.
வயிற்றில் 220 மில்லி பழுப்பு நிற திரவம் மற்றும் 100 கிராம் பார்ஷியலி செரித்த அரிசி இருந்தன. ஆனால் பெரிய குடல் காலியாக இருந்தது. இதனால் அவர் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்திருக்கலாம்.
காயங்களின் அமைப்பு ஒரே பகுதிகளில் பலமுறை தாக்கப்பட்டதை காட்டுகிறது. இது ஒரு மிருகத்தனமான தாக்குதலைக் குறிக்கிறது. இளைஞர் அஜித் குமாரின் கஸ்டடி மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது.