
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்று சுமார் 60 நாட்கள் ஆகி உள்ள நிலையில், இன்று மக்களிடம் 65% சதவீதத்திற்கு வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையிலே வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.

மேலும்,சின்ன, சின்ன விஷயங்களை எல்லாம் குறை கூறிக்கொண்டு ,அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்குள் ,நாம் போக வேண்டிய அவசியம் இல்லை.

தவிர, மக்கள் சொல்லக்கூடிய சில உண்மைகளை கேட்டு தான், இச் செய்தியை மக்களுக்கு தெரிவிக்கிறோம்.

அதாவது, திமுக ஆட்சியில் கொள்ளையடித்தது போல், இந்த ஆட்சியில் இல்லை. இது மக்களிடம் பேசப்படும் கருத்து. மேலும், தலைமைச் செயலகத்திலே உயர் அதிகாரிகள் மட்டத்தில், முதல்வர் விஜய் பணத்திற்காக ஊழல் ஆட்சியை நடத்த, அவர் பேசவில்லை என்ற தகவல் தான் ,எனக்கு வந்த தகவல்.

மேலும் ,நேற்று ஊழல் செய்த திமுக, அதிமுக அமைச்சர்கள் ஈடி ரெய்டு ,இன்கம் டேக்ஸ் ரெய்டு, நீதிமன்ற வழக்குகள், சிபிஐ ரெய்டு, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு, இது எல்லாம்,மக்களிடம் மானம்,மரியாதை இழந்து, எவ்வளவோ சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், மீசையில் மண் ஒட்டவில்லை என்று தான் சொல்வார்கள். அடுத்து, திருப்பரங்குன்றம் கோயில் விஷயத்தில் திமுகவின் கொள்கை முடிவே, எடுத்திருப்பது,ஆன்மீக பக்தர்களுக்கு ,அது எதிர்ப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இது தவிர, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு ,விஜய்க்கு மத்திய அரசின் எதிர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. திமுகவும் அதிமுகவும் கூட்டாக இணைந்து பெரிய அளவில் ஆட்டம் போட்டது. மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எனவே, இதை விஜய் புரிந்து இருப்பார் என நினைக்கிறேன்.

தவிர, மக்களிடம் மரியாதை போனால் என்ன? கொள்ளையடித்த பணத்தை நீட்டுவார்கள். அவர்களை புகழ்ந்து பாராட்டி எழுத, ஒலிபரப்பு பத்திரிகை தொலைக்காட்சிகள் இருக்கிறது.

மேலும், நானும் செய்தால் ,எனக்கும் அதே நிலைமைதான் என்பதை உணர்ந்து தான் பேசியிருக்கிறாரம். மேலும் ,மக்கள் பணத்தில் எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம் என்று வெளிப்படையாக பேசியதை கடைபிடித்து வருகிறார்.
ஆனால்,இன்னும் அமைச்சர்கள், அதிகாரிகள் இவர்களுக்குள்ள ஒத்துழைப்பு இன்னும் முறையாகவில்லை. அதேபோல், மக்களிடம் இவர்களுக்கு அணுகுமுறையும், தெரியவில்லை.

பத்திரிகையாளர்களிடம் அணுகுமுறை தெரியவில்லை. பத்திரிகை என்றால், இவர்கள் கார்ப்பரேட் தொலைக்காட்சி மட்டும் தான் பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

அந்த விஷயத்தில் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எவ்வளவோ மேல், ஓரளவுக்கு விஷயம் புரிந்து இருக்கிறார் என்று தான் அவரை ஒரே முறை பார்த்து நான் புரிந்து கொண்டேன்.
இன்னும்,சில அமைச்சர்கள் அந்த அலுவலகத்திற்குள் இருக்கக்கூடிய உதவியாளர்கள், பி .ஏ.க்கள் இன்னும் பழைய திமுக ஆட்சியில் இருப்பது போல் தான் இருக்கிறார்கள். அதே வரிசையில், நாம் பார்த்ததில் திருவள்ளூர் மாவட்ட இன்சார்ஜியாக இருக்கக்கூடிய அமைச்சர் குமார் தான் அப்படி இருக்கிறார்.

மேலும்,அவர் எல்லாம் மந்திரி பதவிக்கு தகுதியானவர் தானே என்று புரியவில்லை? மந்திரி என்றால் மக்களையும், பத்திரிக்கையும் மதிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல. மதிப்பதற்கு தான் அந்த பதவி! அதற்கு தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. அதற்கு அர்த்தம் தெரியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ,மக்கள் இவர்களைப் பார்த்து வாக்களிக்கவில்லை என்பது அவர்களுக்கும் ,தெரிந்த உண்மைதான் இருப்பினும் ,அவர்கள் தங்களுக்கு மந்திரி பதவி என்பது இவர்களுடைய தகுதியைப் பார்த்து மக்கள் மாந்திரியாக்கி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ டாக்டர் அருண் குமார், இவர்களுக்கெல்லாம் பேசிக் தெரியாமலே அரசியலில் இருக்கிறார்கள். பிசினஸ் மைண்ட் வேற ஒன்றும் இல்லை. அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ ,அதே மைண்ட் செட்டில் தான் இருப்பார்கள்.

இங்கே வந்து அதை காட்டிக் கொண்டிருந்தால் ,இவர்கள் நினைப்பது போல், பத்திரிகை என்றால், இவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு ,இவர்கள் பேசுவதை ஒளிபரப்பு செய்து கொண்டு, இருக்கின்ற செய்தியாளர்களை எல்லாம் பத்திரிகை என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும்,ஒரு பத்திரிக்கையாளனுடைய தகுதியை ,அரசியல்வாதி தீர்மானிக்க முடியாது. அரசியல்வாதியின் தகுதியை பத்திரிகையாளன் ,தீர்மானிப்பான் .அவன் தான் பத்திரிகையாளன் .நீ சொல்வதை எழுதிக் கொண்டு , நீ பேசுவதை ஒலிபரப்பிக்கொண்டு, நான் தான் பெரிய ஊடகம் என்று மக்களை ஏமாற்றும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ,இன்று அவர்களுடைய தகுதி! ஊடக உலகில் வேறுபடுத்தி காட்டிக் கொண்டிருக்கிறது.

மேலும்,நடந்த சம்பவங்களை, நிகழ்ச்சிகளை செய்திகளாக கொடுப்பது வேறு ஆனால், மக்களுக்காக செய்திகளை கொடுப்பவன் தான் ஜர்னலிஸ்ட் அவன் தான் பத்திரிக்கையாளன். அதனால் ஐந்து லட்சம் விலை உயர்ந்த கேமராவால் ,அதை எல்லாம் கொடுக்க முடியாது .

மைக்கை நீட்டிக்கொண்டு, அவர் இதை சொல்றார் உங்கள பத்தி இவர தான் பேசுறாரு இதை பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?இதுவெல்லாம் பத்திரிகை அல்ல ,இதுவெல்லாம் தொலைக்காட்சி அல்ல. உண்மை எது? என்று பேசுபவர்கள் தான் பத்திரிக்கையாளன். மேலும், மக்களுக்கு விஜய் ஆட்சி! பரவாயில்லை என்றுதான் மக்களிடம் வரும் தகவல். அதுமட்டுமல்ல
நேற்று கூட என்னுடைய நண்பர் ஐசிஎப் ல் பொறியாளராக பணியாற்றி வரும் அவர் , விஜயின் ஆட்சி பரவாயில்லை சார். 15 நிமிடத்தில் பத்திரப்பதிவு முடித்து விட்டார்கள்.
என்ன சார் சொல்றீங்க அப்படின்னு கேட்டேன். இல்லை அந்த வெரிஃபிகேஷன் எல்லாமே 15 நிமிடங்களில் முடித்து விடுகிறார்கள் அந்த அளவுக்கு வேகமாக வேலை நடைபெறுகிறது. எந்த ஒரு ரூபாய் இல்லாமலே பத்திரப்பதிவு நடக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
இன்னொரு அதிகாரி நண்பர் ,இது பற்றி கேட்டார். நான் சொன்னேன் கடவுளைத் தவிர ,வேறு யாருமே அந்த சீட்டில் உட்கார்ந்து வேலை பார்த்தால் ,நூறு சதவீதம் யாராலும் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியாது இதுதான் எதார்த்த உண்மை.

ஆனால், விஜய் ஆட்சியில், திமுக, அதிமுக ஊழல் ஆட்சி போல் ,நிச்சயம் நடைபெறாது என்றேன். ஏனென்றால், உண்மையைத்தான் எமது பத்திரிகை இதுவரை செய்திகளாக வெளியிட்டு வருகிறது .
99 சதவீதம் என்னுடைய மனசாட்சிக்கு நிறைவான செய்திகளாக தான் அது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனால், திமுக அதிமுக போல் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி இருக்காது அது உறுதி. மேலும், அவருடைய ஆட்சியில் பிளஸ் அதிகமாக இருக்க வேண்டும். மைனஸ் குறைவாக இருக்க வேண்டும். அதுதான் ஆட்சி. இந்த ஆட்சியில் பிளஸ் அதிகமாக தான் இருக்கிறது.
