
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் தமிழர்கள் மட்டுமே வேலை செய்து வந்தனர். எப்போது வட இந்தியர்களை கொண்டு வந்து ரயில்வே நிர்வாகத்தில் பணி அமர்த்தினார்களோ அதிலிருந்து தொடர்ந்து ரயில்வே விபத்துக்கள் தொடர் கதையாகிய வருகிறது.

இந்த சட்டத்தை எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அது பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாகவே இருக்கிறது. தற்போது கடலூரில் கேட் கீப்பர் ஒரு வட இந்தியரை நியமித்ததன் விளைவு பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானது.
அதேபோல் பொன்னேரி கும்மிடிப்பூண்டி பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இங்கு இவர்களுக்கு மொழி தகராறு ஒரு பக்கம் மற்றொரு பக்கம் எப்படி நிர்வாகம் செய்வது செயல்படுவது இவை அத்தனையுமே சிக்கலான காரியமாக தான் உள்ளது.
அதனால் ரயில்வே நிர்வாகம் வட இந்தியர்களை வட மாநிலங்களில் பணிய அமர்த்தி விட்டு, தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளித்து ரயில்வே நிர்வாகத்தில் பணிகளை வழங்கிட வேண்டும். இது அமித்ஷா செய்த தவறு.

ரயில்வே துறை முக்கியமான துறை பொதுமக்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாக்குவது ரயில்வே துறையின் மீது மக்கள் தான் நம்பிக்கை இழப்பார்கள். ஆனால் மத்திய அரசு இப்படிப்பட்ட விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருவது நல்லதல்ல.
மேலும், ரயில்வே நிர்வாகம் கடந்த காலங்களில் நடந்த ரயில் விபத்துக்கள் மற்றும் வட இந்தியர்கள் நியமனம் செய்த பிறகு நடந்த ரயில் விபத்துக்கள் பற்றி ஒவ்வொரு ஆண்டும் எத்தனை என்பதை ஆய்வு செய்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.