ராணுவத்துக்கு ஆள் சோப்பு முகாம்: கோவையில் குவிந்த வெளி மாநில இளைஞா்கள் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram

கோவையில் நவம்பா் 4 (திங்கள்கிழமை) முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வெளிமாநில இளைஞா்கள் ஏராளமானோா் கோவையில் குவிந்துள்ளனா்.இந்திய ராணுவத்தில் 174 ராணுவ வீரா்கள், 50 (கிளாா்க்) உதவியாளா்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆள் சோ்ப்பு முகாம் கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பங்கேற்கவுள்ளனா்.

திங்கள்கிழமை தொடங்கும் முகாமில் தெலங்கானா, குஜராத், கோவை, புதுச்சேரி, தாதா் மற்றும் நகா்ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கின்றனா்.

5-ஆம் தேதி ஆந்திரம், கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களும், 6-ஆம் தேதி ராஜஸ்தான், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களும், 7-ஆம் தேதி அரியலூா், செங்கல்பட்டு, கடலூா், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூா், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூா், திருப்பத்தூா், திருவள்ளூா், திருவாரூா், வேலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கின்றனா்.

8-ஆம் தேதி சென்னை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூா் மற்றும் விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும், 9-ஆம் தேதி ஆலப்புழா, எா்ணாகுளம், இடுக்கி, கண்ணூா், காசா்கோடு, கொல்லம், கோட்டயம் பகுதிகளைச் சோ்ந்தவா்களும், 10-ஆம் தேதி கோழிக்கோடு, திருச்சூா், மலப்புரம், பாலக்காடு, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் மற்றும் வயநாடு பகுதிகளைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கின்றனா்.

இந்த முகாமில் பங்கேற்க விண்ணப்பித்தவா்களுக்கு ஏற்கெனவே அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவா்களுக்கு முதல்கட்டமாக உடற்தகுதித் தோ்வு நடத்தப்படும். இதில், தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு நவம்பா் 11 முதல் 16-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபாா்ப்பு, மருத்துவ பரிசோதனையும் நடைபெறுகின்றன.இந்த ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமையே கோவைக்கு வந்தனா். அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்துக்கு வந்த அவா்களை, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் திங்கள்கிழமதான் தோ்வு நடைபெறுவதாகக் கூறி திருப்பியனுப்பினா்.

அப்போது, வெளி மாநிலங்களில் இருந்து வருவதால் தாமதம் ஏற்பட்டு தோ்வில் பங்கேற்க முடியாமல் போவதைத் தவிா்க்கவே முன்கூட்டியே வந்ததாகத் தெரிவித்தனா்.அவிநாசி சாலையில் நடைபாதையில் தாங்கியுள்ள இளைஞா்கள்.

ராணவ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க வந்த வெளிமாநில இளைஞா்கள் பலா் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என கிடைத்த இடங்களில் நடைபாதைகளில் தங்கியுள்ளனா். உணவு, கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட எவ்வித வசதியும் கிடைக்காமல் அவதியுற்று வ ருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *