
கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் செய்திகள், மூலமே இந்த தேர்தல் கடுமையான போட்டி என்பதால் வேட்பாளர்கள் தேர்வு மிக மிக அவசியம் என்று சொல்லப்பட்டது.

ஆனால் ,எடப்பாடி பழனிசாமி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அவர் எல்லா பழைய மந்திரிகளுக்கும், ஊழல் வழக்கு உள்ளவர்களுக்கும் ,எம்எல்ஏக்களுக்கும், இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்துவிட்டார். அது மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்.

மேலும்,ஜெயலலிதா இருந்தவரை அரசியல் கட்சியினருக்கு ஒரு மரியாதை இருந்தது. அது எதனால்? அரசியல் கட்சியினர் தவறு செய்தால், உடனடியாக அவர்களை சஸ்பெண்ட் செய்வார். அது மக்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு, இவரது ஆட்சியில் ,அரசியல் கட்சியினர், மந்திரிகள், எம்எல்ஏக்கள் என்ன தவறு செய்தாலும், கண்டு கொள்வதில்லை.

மேலும்,ஜெயலலிதாவே இருந்திருந்தால் கூட ,அவரால் வெற்றி பெற முடியாது. அதனால் அவரே இப்படிப்பட்ட முன்னாள்களுக்கு சீட்டு வழங்கி இருக்க மாட்டார். எனவே, எடப்பாடி பழனிசாமி இவர்களுக்கு சீட்டு கொடுத்து அதிமுக கூட்டணியை பின்னோக்கி கொண்டு சென்று விட்டார்.
மேலும், இவருக்கு அரசியல் ஆலோசகர்கள் யார்? என்று தெரியவில்லை. தவிர,மக்கள் பழைய காலத்தில் இலவசத்தையும், ஓட்டுக்கு பணத்தையும், கொடுத்து ஏமாற்றுவதைப் போல, இப்போதும் அதே பாணியில் அதிமுகவும், திமுகவும் இருக்கிறார்கள்.

இவர்களுடைய அரசியல்! மக்களை கொள்ளை அடிக்கும் அரசியல், என்று தெரிந்து விட்டதா? நாளுக்கு, நாள் மக்கள் மனதில், தேர்தல் அறிவித்த பிறகு மாற்றங்கள் ஆரம்பித்து இருக்கிறது என்பது பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், சர்வேக்கள் எடுக்கும் போது இந்த மாற்றங்கள் தெரிய வந்துள்ளது..

மேலும்,வேட்பாளர்களை நேர்மையான படித்த ஐஏஎஸ், ஐபிஎஸ், போன்ற முன்னாள் அதிகாரிகளையோ அல்லது டாக்டர் இன்ஜினியர் போன்ற நபர்களையோ, தேர்வு செய்து
போட்டி இருந்தால் கூட, ஓரளவுக்கு குறைந்தபட்சம் ஒரு 80 to 90 சீட் ஆவது , அதிமுக வென்று இருக்க வாய்ப்புள்ளது. இந்த வெற்றி வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி கெடுத்து விட்டார். மேலும்,

நகரங்களில் அதிமுக, திமுக ஒன்று கூட தேறுவது கடினம் தான் போல தெரிகிறது.மேலும்,மக்கள் என்ன பேசுகிறார்கள் என்றால்? ஏற்கனவே சம்பாதித்து ஊழல் வழக்கில் இருப்பவர்கள் ,இவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இன்னும் எத்தனை தலைமுறைக்கு இவர்கள் சொத்து சேர்ப்பார்கள் ?என்று கேட்கிறார்கள்? மேலும்,இத வேட்பாளர் பட்டியலை பார்த்தவுடன் அப்போதே என்னுடைய மனசுக்கு அதிமுக தேராது என்று பட்டுவிட்டது.
மேலும் ,சில பேருக்கு அது மன வருத்தமாக கூட இருக்கலாம். ஆனால் ,மக்கள் மனதில் என்ன இருக்கிறது? என்பதை ஓரளவுக்கு எங்களுக்கு தெரியும். அதனால் அதிமுகவுக்கும், பின்னடைவு, திமுகவுக்கும் ,பின்னடைவு,

இப்போது இது இரண்டு ஊழல் கட்சிகளுக்கும் மக்கள் ஓட்டை மாற்றினால் ,அது தவெக வுக்கு தான் ஓட்டுக்கள் பிரியும் . இது மக்களுக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால் அதற்கு தகுதியான கட்சி எது? அப்படி பார்க்கும்போது தவெக தான் இன்று மக்களிடம் பேசப்படும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும்,
இதில் சர்வேக்கள் பெரும்பாலும் உண்மை என்று சொன்னாலும், 100% இதை நம்ப முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. இந்த அரசியல் கட்சிகளால் மற்றும் கட்சியினரால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அது மட்டுமல்ல,

எந்த அளவுக்கு இந்த அரசியல் கட்சிகள் மீது ,வெறுப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது ?மட்டும் உணர முடிகிறது. காரணம் ஒவ்வொரு கிராமங்களிலும், நகரங்களிலும், இந்த அரசியல் கட்சியினரால் தான், அந்தக் கட்சிக்கு சங்கு ஊதப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.மேலும், படித்த இளைஞர்கள், பெண்களின் வாக்குகள், தவிர, அதிமுக ,திமுகவின் வெறுப்பு அரசியல்! அரசியல் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், அதிமுக, திமுக இரண்டு அரசியல் கட்சிகளிலும், சமூக சேவைக்கு பதிலாக, சமூக விரோதிகளாகவும், எதிரிகளாகவும்,‹ இருக்கிறார்கள் என்பது தான் அரசியல் மாற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அது மட்டுமல்ல,

ஒரு பக்கம் மேல் மட்டத்தில் ஊழல் !இன்னொரு பக்கம், கீழ் மட்டத்தில் இவர்களுடைய அராஜகங்கள்! இதுதான் அரசியல் மாற்றமாக இருப்பதற்கு முக்கிய காரணம்.

தவிர ,இந்த இரண்டு கட்சிகளும், மீண்டும் ,மீண்டும் அதே ஊழல் செய்த நபர்களையே வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறார்கள். மக்களுக்கு பணியாற்றக்கூடிய வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மக்களிடமிருந்து பறிக்கக் கூடியவர்களை வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறார்கள். அதனால்தான்,

அவர்களுடைய நோக்கம், பணத்தால், இலவசத்தால்! மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் , மக்களிடம் தெளிவாக மாற்றம் தெரிகிறது.
இந்த மாற்றத்தின் எதிர்பார்ப்பு என்ன என்றால், மக்கள் ஊழலை எதிர்க்கிறார்கள் என்பது அவர்கள் மனதில் பதிந்துள்ளது என்பது புரிகிறது. தற்போதைய நிலையில் இரண்டு கட்சிக்கும் ,மெஜாரிட்டி என்பது வராது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும் ,பலருடைய சர்வே ரிப்போர்ட் தவெக விற்கு அதிக பர்சன்டேஜ் இருப்பதாக சொல்கிறார்கள் .இன்னொரு பக்கம் வேறு சில சர்வேகள் ,அதிமுக வுக்கு இருப்பதாக சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக, இன்னொரு சொல்கிறது.
இப்படி இந்த சர்வேக்கள் ,சொல்வதை நூறு சதவீதம் நம்பாவிட்டாலும், 50 சதவீதம் அதை எடுத்துக் கொண்டால் கூட, தொங்கு சட்டமன்றம் வர வாய்ப்பு உள்ளதா? அல்லது விஜய்க்கு தனி மெஜாரிட்டி வர வாய்ப்புள்ளதா? பொறுத்திருந்து பார்ப்போம்.