ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram
தமிழகத்தில் நடிகர்கள் எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு தொடர்கதையாக வந்துள்ளனர் .அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சரானார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவர் வரை வந்தார். அதற்கு மேல் போக முடியவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று கடைசி நிமிடம் வரை சொல்லி, சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி விட்டார். அந்த வகையில் விஜய் அப்படி செய்யவில்லை .
மேலும், விஜயகாந்த் அவருடைய சினிமா வாழ்க்கையில் படம் ஓடாத நிலையில், அரசியலுக்கு வந்தார். ஆனால், விஜய் அப்படியல்ல, விஜய்க்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. அப்படி இருந்தும் அதை விட்டுவிட்டு வந்துள்ளார். ஆனால், விஜய்க்கு போட்டியாக களத்தில் பல அரசியல் கட்சிகள் இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி வர வேண்டும் .அதிலும் தற்போது ஆளுகின்ற திமுக நேர் எதிரியாகவே உள்ளது. மீதி எல்லாம் மறைமுக எதிரியாக இருந்தாலும், இது நேர் எதிராகவே உள்ள அரசியல் கட்சி.
தவிர, விஜய் தன்னுடைய மாநாட்டில் இவருடைய கொள்கை, செயல்பாடு எதை நோக்கி இருக்கப் போகிறது? அடுத்தது கூட்டணி எதை நோக்கி இருக்கப் போகிறது ?இவருடைய கொள்கை? ஊழல் அற்ற ஆட்சியை மக்களுக்கு கொடுத்தால்தான் மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள் . ஏனென்றால், எல்லாமே ஊழல் கட்சிகளாக தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருக்க வேண்டியது முதல் கட்டம் .
அடுத்தது வெளிப்படையான நிர்வாகம், மக்களுக்கு திட்டங்கள் போய் சேர வேண்டும் .இது தவிர, கூட்டணி கட்சிகள் ஊழலற்ற கட்சிகளாக இருக்க வேண்டும் .விஜயதாரணி சொன்னது போல் விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பார் என்று ,அப்படி வைத்தால் விஜய்க்கு தான் அது அடி. ஏனென்றால் காங்கிரஸ் ஊழலில் திளைத்த கட்சி. அந்த கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைத்தால், அது பத்தில் 11 ஆக தான் இருக்கும்.
அதில் மாற்று கருத்து இல்லை .மக்கள் விஜய் ஆரம்பித்த கட்சி, எந்த நோக்கத்திற்காக? எந்த வித செயல்பாட்டுக்காக? எல்லா அரசியல் கட்சிகளும் போல் இதுவும் ஒன்றா? அல்லது அதற்கு மாற்றமான ஒன்றா? இந்த கேள்வியில் தான் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி? என்பதை விஜய் புரிந்து கொண்டால் சரி .