வேலூர் சட்டமன்ற தொகுதியில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ,அதிமுக ,திமுக கட்சியினரிடையே நேருக்கு நேர் வாக்குவாதம் – மக்கள் திமுகவினரின் பொய் வாக்குறுதிகளை நம்புவார்களா ? – பொதுமக்கள் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

2026 சட்டமன்றத் தேர்தல் கடும் போட்டியாக அரசியல் கட்சிகளிடையே இருந்து வந்தாலும், இது சமூக மக்களுக்கு தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தலாக தான் பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் திமுக தோற்றால் அதர்மம் தோற்றது .மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால், தர்மம் ஜெயித்தது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மீண்டும் ஒரு முறை நம்ப மாட்டார்கள். யார் நம்புகிறார்கள்? என்றால், சட்டத்திற்கு புறம்பாக ஈடுபடுபவர்கள், பெரும்பாலும் அவர்கள் தான் திமுகவை நம்பி இருக்கிறார்கள். மேலும்,மக்களாட்சிக்கு விரோதமான அனைத்து செயல்பாடுகளும் இருக்கின்ற ஒரே ஆட்சி! திமுக ஆட்சி தான் ‌.

இங்கே மக்கள் நியாயத்தை பற்றியே பேசினால் , நியாயம் என்பதும் அவர்களுக்கு நீதி என்பதும் எட்டக் கணியாகி விட்டது. அவர்கள் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையோடு போராடியதை மறக்க மாட்டார்கள்.

ஆனால், வேலூர் மாவட்டம் ,காட்பாடி வேலூர் ,அணைக்கட்டு, கே வி குப்பம், மற்றும் குடியாத்தம், உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதியில் மக்களின் குரல் என்ற ஊடக நெறியாளர்கள் பொது மக்களை நேரில் சந்தித்து பேசிய போது, அவர்கள் இவர்களுடைய வாக்குறுதிகளை நம்ப முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் ,திமுக கட்சியினர் மக்களின் ஆசைகளை தூண்டி ,உங்களுக்கு இதை செய்கிறோம். அதை செய்கிறோம். அயன் பாக்ஸ், பிரிட்ஜ் ,டிவி ,வாஷிங் மெஷின், எது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று இந்த 8000 ரூபாய் கூப்பன் கொடுத்து, பல இடங்களில் மக்களை ஏமாற்றப் பார்த்தார்கள்.

மேலும்,கூப்பன் வாங்கிய மக்கள் உடனே அந்தப் பகுதியில் இருக்கக் கூடிய கடைகளுக்கு அதை எடுத்துச் சென்றவுடன், அவர்கள் இதற்கெல்லாம் எதுவும் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். மக்களும் ஏமாந்தார்கள்.

இது தான் திமுக. மக்களை ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். பேச்சிலே, வில்லாதி ,வில்லர்கள் .வீராதி ,வீரர்கள். அதனால் ,மக்கள் உஷாராகி திமுக வின் பொய் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்.

மேலும்,எடப்பாடி பழனிசாமி சொன்னது, உங்கள் வங்கிக் கணக்கில், பத்தாயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும். இவர்கள் வெறும் காகிதத்தில் 8000 எழுதி காண்பித்து வாக்களியுங்கள் என்று அதிலும் வாக்காளர்களை ஏமாற்றி ஓட்டு வாங்க வேலை செய்கிறார்கள்.

அதில்,மக்கள் உஷாராகி விட்டதால் இந்த 8000 ரூபாய் கூப்பன் பொய் திட்டம் (திமுகவினர்) வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், இவர்கள் ஒருவேளை ஜெயித்தால் அதை கொடுத்தாலும் கொடுப்பார்கள் .இல்லையென்றால் ,தூக்கி குப்பையிலே போட்டு விடுவார்கள் .இதுதான் திமுக.

எனவே,இவர்கள் பேச்சை நம்ப முடியாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இது பற்றி மக்களின் குரல் நெறியாளர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து கேட்டபோது, நாங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்களிப்போம் என்று வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல ,

கலைஞருக்கு ஓட்டு போட்டு பார்த்தோம் .ஸ்டாலினுக்கும் ஓட்டு போட்டு, இவர்களுடைய ஆட்சி லட்சணத்தையும் பார்த்தோம். இதற்கு மேல் நாங்கள் அந்த தவறை ஒருபோதும் ,செய்ய மாட்டோம் என்று மக்கள் தெரிவித்ததாக தெரிவிக்கின்றனர்.

மேலும், அந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சினை தற்போது நிலவி வருகிறது எனவும், அது மாவட்ட ஆட்சியருக்கு அந்த பகுதி மக்கள் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

மேலும்,திமுக தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்கும் போது மட்டும் தான் இவர்கள் வருவார்கள் இவர்களைப் பார்க்க முடியும் மற்ற நேரத்தில் பார்க்க முடியாது என்று பொதுமக்களே, இவர்களைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

எனவே,இந்த தொகுதிகளில், திமுகவுக்கு வாக்காளர்கள் சரியான பாடம் புகட்ட ,காத்திருக்கிறார்கள் என்பது மக்களின் குரல் நெறியாளர்களின் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *