
பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது, “நீட் விவகாரத்தில் ஆரம்ப நாளிலிருந்தே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
ஜந்தர் மந்தரிலும் ,நாட்டின் பிற பகுதிகளிலும் உருவெடுத்துள்ள சூழ்நிலையால் தேச விரோத சக்திகள் பயனடைந்து விடக் கூடாது.

மேலும்,நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் எதிர்காலம் சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்கவுமே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.”

அத்துடன், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி முறைத் தேர்வாக மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். மேலும்,இதை அரசியல் கட்சிகள் மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற்றதாக பேசி அரசியல் செய்வது, தேசவிரோத சக்தியை வெற்றி பெற்றதா ?அல்லது மாணவர்கள் போராட்டம் வெற்றி பெற்றதா?
இந்த மாணவர்கள் போராட்டத்தால்! தேச விரோத சக்திகள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி வெளிநாடுகளில் இருந்து பணம் வந்தது ?எதன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்?
இந்த ஒரு தவறை வைத்து நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கவும், இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையவும் ,செய்கின்ற சூழ்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
இனி மத்திய உளவுத்துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது. அதனால், வினாத்தாள் கசிவு அது குறித்து நடவடிக்கை ஒரு பக்கம் என்றால்! தேசவிரோத சக்திகளின் சதி திட்டம் இந்தியாவில் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீதர் வேம்பு போன்ற சமூக ஆர்வலர்கள், தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருக்கக் கூடாது. இருப்பினும்,அவர் தன்னுடைய சுயநலத்தை விட ,தேச நலனில் அக்கறை காட்டியது, அவர் மீது உள்ள மதிப்பு ,மேலும் ,அதிகரிக்க செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
