
ஆரம்பத்தில் இவருடைய குடும்ப வருமானம் என்ன? அப்பா வருமானம் என்ன? பூர்வீக சொத்து எவ்வளவு இருந்தது? இவர் என்ன வழக்கறிஞர் தொழிலில் இவ்வளவு பெரிய சொத்து சம்பாதித்து விட்டாரா? என்ன தொழில் செய்தார்?
எல்லாம் அரசியலில் கொள்ளை அடித்தது தான் .மக்களுக்கு தெரியாதது போல் பேசக்கூடாது. உங்களுக்கு குருட்டு அதிர்ஷ்டத்தை கொடுத்திருக்கிறார். அது அனுபவிக்கிறீர்கள். ஆனால், நான் ஊழலற்ற உத்தமன் என்று சொன்னால் ,அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும்,இப்போதும் அலாக்கத் துறையின் வழக்கில் உங்களுடைய பெயர் அதில் இருக்கிறது. சொத்து குவிப்பு வழக்கும் ,வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், கார்ப்பரேட் ஊடகங்களில் எவ்வளவு பொய் சொன்னாலும், அதை ஏற்றுக் கொண்டு ,அப்படியே போடுவார்கள். நாங்கள் மக்களிடம் எது உண்மை? என்று வெளிப்படுத்துவோம் .

மேலும் ,வன்னியர்கள் எத்தனை முறை தான் , துரைமுருகனுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களித்து ஏமாறுவார்கள்? என்று வன்னியர்களை பேசுகிறார்கள்.தவிர,
இதுவரையில் அந்த தொகுதியில் இருக்கக்கூடிய மக்கள் எதுவும் செய்யவில்லை என்று தான் தெரிவிக்கிறார்கள். இனிமேல் என்ன செய்யப் போகிறார்? பதவி ஆசை என்பது வயது தாண்டியும், இவர்களுக்கு விடவில்லை.

பணம் இருக்கிறது அதனால், இந்த ஓட்டுக்களை விலைக்கு வாங்கி, இன்னும் ஒர் ஐந்து ஆண்டுகள், பல கோடி சேர்க்கலாம். இப்படிப்பட்ட ஆட்களுக்கு வாக்களித்து, மக்கள் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
இப்போதாவது இந்த வாக்கு வங்கியின் அதிகாரம் புரிகிறதா?