அதிமுகவில் நீக்கியவர்களை ஒன்று சேர்க்க செங்கோட்டையன், அமித்ஷா சந்திப்பு – எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நோ – குழப்பத்தில் அதிமுக .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அதிமுகவில் நீ கேவர்களை ஒன்று சேர்க்கலாம் என்று அத்தாட்சியின் சீனியர்கள் சொன்னாலும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து நோ சொல்லி வருகிறார்.

இது ஒரு பக்கம் அதிமுகவில் சலசலப்பையும் மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கே ஒரு பக்கம் அது கட்சிக்கு நல்லது தானே என்று பேசி வருபவர்களும் உண்டு. மற்றொரு பக்கம் அவர்களை சேர்த்தால் எடப்பாடிக்கு அது எதிராக வரும் என்ற ஒரு கருத்து பழனிசாமிக்கு இருந்து வருகிறது. இவர்கள் உள்ளே வந்து விட்டால், நம்முடைய அரசியலில் எதிரி இவர்களாகத் தான் இருப்பார்கள். இவர்களை வைத்து பிஜேபி அரசியல் செய்கிறதா? என்ற கோணத்திலும் அரசியல் பார்வையாளர்கள் பொதுவான கருத்து.

மேலும்,அதிமுகவிலும் சரி, திமுகவிலும் சரி, பிஜேபியுடன் பலர் தொடர்பில் தான் இருக்கிறார்கள். வெளியில் பேசுவது ஒன்று. ஆனால் பிஜேபியுடன் நன்கு ஒற்றுமையுடன் தான் இருக்கிறார்கள். அதற்கு சாட்சி தற்போது நடைபெற்ற குடியரசு துணை தேர்தலில் திமுகவை சேர்ந்த எம்பிக்கள் வாக்களித்திருக்கிறார்கள் காங்கிரஸில் சிலர் வாக்களித்திருக்கிறார்கள். (சி.பி .இராதா கிருஷ்ணனின் வெற்றி) இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?

மேலும், பிஜேபி அதிமுகவை ஜெயலலிதா இறந்த பிறகு ,அரவணைத்துக் கொண்டது. அதனால்தான், அதிமுகவின் விஷயத்தில் எதையும் எடுத்தேன் , கவிழ்த்தேன் ,என்று பிஜேபி செய்து விடாது. இதில், பிஜேபி கூடுமானவரைக்கும், இதை பஞ்சாயத்து செய்து தீர்வு காண தான் முயற்சிக்கும்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஜெயலலிதா பாணியில் சென்று கொண்டிருக்கிறார். இருப்பினும் டெல்லியின் அடிமையாக தான் இருக்கிறார் ,அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

அதனால், இன்று செங்கோட்டையன், அமித்ஷா சந்திப்பு சோசியல் மீடியாவுக்கும், பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பல யூகங்களுக்கு வழி வகுத்து செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், அமித்ஷா நினைத்தால் இதற்கு முற்றுப்புள்ளியும் வைப்பார், சமாதானத்தையும் செய்து வைப்பார். இதில், பிஜேபிக்கு எது லாபம் ?என்பது மிக முக்கியமானது. அந்த வகையில் அதிமுகவை வைத்து திமுகவை வீழ்த்துவது தான் அதன் முக்கிய நோக்கம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

அதனால், அதிமுகவை அழித்து, திமுகவை வீழ்த்த நினைக்க மாட்டார்கள் . இதில் ஒரு பக்கம் சீனியர்கள் ஜெயலலிதா இறந்த காலத்தில் ,சசிகலா இருந்த காலத்தில் ,எம்ஜிஆர் இருந்த காலத்தில், ஒவ்வொருவருக்கும் இருந்த நிலைமை எடப்பாடி பழனிசாமி காலத்திலும், அந்த நிலை தொடர வேண்டுமா? இதுதான் அவர்களுடைய மில்லியன் கேள்விகள்.

இதற்கெல்லாம் பின்னால் என்ன இருக்கிறது? என்றால் கட்சியில் வழக்கு என்ற பல சிக்கல்கள் போய்க்கொண்டிருக்கிறது. கட்சி சின்னத்தில் கூட இன்னும் வழக்கு விசாரணை போகிறது. இப்படி அதிமுக குழப்பத்தையும், சிக்கல்களையும், வழக்குகளையும் சந்தித்து போராட வேண்டிய நிலைமைக்கு கட்சி ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் சீனியர்கள், இது எல்லாவற்றையும் சமாளிக்கின்ற ஒரு தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தால் தானே முடியும்.

மேலும், எடப்பாடி பழனிசாமி நீக்கியவர்களை சேர்க்காவிட்டால், அவர்கள் தலைமையில் அணி திரண்டு தேர்தலை சந்திப்பார்கள் என்பது அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *