
நாட்டில் மக்களின் மனநிலைக்கு ஏற்பவும்,சமூக சூழ்நிலைக்கு ஏற்றவாறு ,சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம்.
உழைப்பில்லாமல், படிப்பு இல்லாமல், பல கோடிகளை பார்க்கும் ஒரே இடம் இன்றைய அரசியல் கட்சியினர். அந்தக் கால அதாவது 1965க்கு முன்,அரசியலுக்கு வந்தவர்களுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது சட்ட மோசடி செய்ய தெரியாது .ஊர் சொத்துக்களை கொள்ளை அடக்க தெரியாது. நேர்மைக்கு இலக்கணமாக இருந்து விட்டுப் போனார்கள்.

ஆனால், இந்த கால அரசியல் கட்சியினர் நேர்மை என்றால் என்ன? தகுதி என்றால் என்ன ?உழைப்பு என்றால் என்ன? என்று அதற்கு அர்த்தம் தெரியாமல், கோடி பிடித்து கோஷம் போட்டுக் கொண்டு, கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பேசியே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும்.
அப்படி மாற்றப்பட வேண்டிய பல சட்டங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டமும் ஒன்று.

அதாவது, இன்று அரசியல் கட்சிகள் நாட்டில் பெருகி விட்டது. ஆனால், அதனுடைய பயன்கள் மக்களுக்கு எதுவுமே இல்லை. பயன்தான் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், இந்த சமூகத்திற்கு எதிரான, சமூக விரோத கும்பல் ,இந்த அரசியல் கட்சிகளின் கொடியையும், சின்னத்தையும் ,பயன்படுத்தி,நாட்டில் பயங்கரவாதம், வன்முறை,ஊழல், பொதுமக்களிடையே ஒற்றுமையை சீர்குலைத்தல், போன்ற அனைத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இன்றைய அரசியல் கட்சிகள்.

சமீபத்தில் கூட தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தையும் ,இந்தியா முழுவதும் சுமார் 2000 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

இந்த செய்தி நாட்டு நலனுக்கு முக்கியத்துவமான செய்தி. ஆனால், கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மற்றும் காப்பியடித்து பத்திரிக்கை நடத்தக்கூடிய சிறு பத்திரிகைகள், இவையெல்லாம் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளிடம் தங்களுடைய பத்திரிக்கை வியாபாரத்தை நடத்திக் கொண்டே இருப்பார்கள். அந்த பத்திரிகைகளுக்கு மக்களிடம் விளம்பரங்கள் தான் தேவை.

அதற்காக இவர்கள் அவர்களுடைய அரசியல் தகுதி என்ன ?என்று கூட தெரியாமல், பாராட்டி புகழ்ந்து மக்களை ஏமாற்றும் அரசியலை, இருவரும் செய்து கொண்டிருப்பார்கள்.

இதனால் ,மக்களுக்கு உழைப்பின் மீது ,உண்மையின் மீது , நேர்மையின் மீது ,அலட்சியம் ஏற்பட்டுள்ளது. உழைத்து முன்னேற வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் குறைந்து, இந்த அரசியல் கட்சிகளின் மூலம் குறுகிய காலத்தில் ,கோடிகளை பார்க்கலாம்! சொகுசு வாழ்க்கையை வாழலாம் !என்ற ஒரு குறிக்கோளாடவே அரசியல் கட்சிகளில் குறுக்கு வழியில், வாழ என்று வழி தேட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அப்படி வழி தேட ஆரம்பித்தவர்கள் 1965 க்கு பிறகு இப்படிப்பட்ட அரசியல் ஊழல், மோசடி, குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து இருப்பது , திமுக அதிமுகவாகத்தான் இருக்கிறது.இன்று பல கோடிகளை பார்த்திருக்கிறார்கள் .அந்த வழியில் நாமும் முன்னேறுவோம் என்று, ஏதோ ஒரு அரசியல் கட்சியில் நாம் சேர்ந்துக் கொண்டு, எப்படியும் முன்னேறலாம் என்ற கனவோடுவே இருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தேவை உடம்பு மட்டுமே மூலதனம். உழைப்பு என்பது இவர்களுக்கு தேவையில்லை. பொதுமக்களை காக்கா பிடிக்கும் வேலை தெரிந்தால் போதும், அந்தப் பகுதியில் ஒரு வார்டு மெம்பராகவோ, கவுன்சிலராகவோ, அல்லது ஊர் தலைவராகவோ, வந்து விடலாம். வந்த பிறகு எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவு சுருட்டிக் கொள்ளலாம் .இதற்கு தான் இப்போது போட்டி.

இந்தப் போட்டிக்கு அர்த்தம் தெரியாத பத்திரிகை ,தொலைக்காட்சிகள் காசுக்காக அவர்களை புகழ்ந்து பாராட்டி எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இது உழைக்கும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ,உழைக்கும் மக்கள் இனி உஷாராகி விடுங்கள். தொடர்ந்து இப்படிப்பட்ட கும்பலிடம் ஏமாறாதீர்கள். மேலும்,
இன்று ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் ,இந்த சமூகத்திற்காக மக்களுக்காக உழைக்கக்கூடிய நபர்கள் எத்தனை பேர் ?என்பதை அந்தந்த அரசியல் கட்சிகள் பட்டியல் எடுத்து மக்களிடம் வெளியிட தயாரா?

ஆனால், அதைவிட வழக்குகள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கொலை குற்றவாளிகள் ,மோசடி பேர்வழிகள், சமூக குற்றவாளிகள், இப்படி பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள், இவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்? என்று தேடிப் பாருங்கள் ?ஏதோ ஒரு அரசியல் கட்சிகளில் தங்களை அய்க்கியப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அங்கே போய் இவர்களை பார்க்கலாம். அது மட்டுமல்ல, இவர்களால்!

மக்களின் உழைக்கும் திறன் பாதிக்கிறது. அது எவ்வாறு என்றால்? இன்று ,ஒவ்வொரு அரசியல் கட்சியும் மாநாடு, போராட்டம் ,ஆர்ப்பாட்டம், இப்படி ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு ,வெளியில் இருந்து தான் ஆட்களை கூட்டிச் செல்கிறார்கள். இப்படி ஒவ்வொரு ஆர்ப்பாட்டம் ,மீட்டிங் ,மாநாடு என்று இவர்கள் செல்லும் போது, செய்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு ,விட்டு தான் செல்கிறார்கள் .
அப்படி சென்று வருவதற்கு அரசியல் கட்சிகள் ஒரு நாளைக்கு 1000, 500 குடிகாரர்களாக இருந்தால் பாட்டல், பிரியாணி இவ்வளவும் ,கொடுத்து அவர்களை வேன்களில் கொண்டு சென்று, மீண்டும் கொண்டு வந்து வீட்டில் விட்டு விடுகிறார்கள். இப்படி அடிக்கடி சென்று வரும் நபர்களுக்கு அரசியலில், அவர்களுக்கும் ருசி ஏற்பட்டு, கட்சிகளில் இணைகிறார்கள்.

அதாவது, உழைப்பை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த ஒருவன், எப்படி அரசியல் கட்சிகளில் போய் இணைகிறான் என்றால், இப்படி அடிக்கடி அவனை அரசியல் கட்சிக்கு அழைத்துக் கொண்டு போவதால், அவன் மீண்டும் தன்னை அரசியலில் சேர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறான். இதற்கு காரணம்,
உழைப்பது என்பது எல்லோருக்கும் ஒரு கடினமான வேலை. அதனால் இன்றய அரசியல், ஊரை ஏமாற்றும் வேலையாகிவிட்டது .அதனால், மக்களிடம் உழைக்கும் திறன் குறைக்க, இந்த அரசியல் கட்சிகள் இப்படி ஒரு கூட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காகவும், மற்ற அரசியல் கட்சிகளுக்காகவும் ,போராட்டம், ஆர்ப்பாட்டம், மாநாடு என்று கூட்டிக் கொண்டு போலியான அரசியலை மக்களிடம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் கட்சிகளை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக யார் இருக்கிறார்கள்? என்றால்,

சமூக விரோத கும்பல், மோசடி கும்பல், அரசியல் வியாபாரிகள், இவர்கள் அத்தனை பேரும் இந்த அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .இதனால், உழைக்கும் மக்களுக்கு என்ன நன்மை? இந்த அரசியல் கட்சிகளால் மக்களுக்கு ஏற்படப் போகிறது ?

அதாவது ஒரு பக்கம் சட்ட பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு ,அது ஒரு பக்கம் ஓடுகிறது .இன்னொரு பக்கம், மக்களுக்கு எதிரான சமூக விரோத கும்பலாக செயல்படுகிறது. இவை அத்தனையும் ,உழைத்து வாழ்பவனுக்கு தான் ,இங்கு போராட்டமே தவிர, எப்படியும் வாழலாம், எப்படியும் பேசலாம், என்பவர்களுக்கு இது ஒரு சாதகமான கருவியாக தான் இன்றைய அரசியல் கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும்,அது சொந்த சமுதாயமாக இருந்தாலும் ,அல்லது வேற்று சமுதாயமாக இருந்தாலும், இந்த கும்பல் அவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இவர்கள் சமூக விரோத வேலைக்கு அரசியல் கட்சி என்ற போர்வையில் காவல் துறையினருடன் நெருங்கிய தொடர்பில் பணத்தை கொடுத்து சரி கட்டிக் கொள்ளும், ஒரு உடன்பாட்டுக்குள் வந்து விடுகிறார்கள்.

அதனால், நாட்டில் அதிக (illegal) பிரச்சனைகள் இதன் மூலம் தான் உருவாகிறது.அதே போல், ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் ,ரவுடிகள் ,கிரிமினல்கள், வியாபாரிகள், ஆயிரக்கணக்கில், நூற்றுக்கணக்கில், இருக்கிறார்கள். அவர்களும் ,அந்த அரசியல் கட்சி தலைவர்கள் பேசும்போது, தொண்டர்கள் என்று தான் சொல்கிறார்கள்.

இவர்களுக்கும் ,தொண்டர்களுக்கும் அர்த்தம் தெரியாமல் ,பத்திரிகைகள், அவர்கள் சொல்லும் செய்தியை தொண்டனாகவே எழுதிக் கொண்டு, அவர்களிடம் வருமானத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, பக்கத்து வீட்டுக்காரனுக்கும், இவனுக்கும் வாய் தகராறு, சண்டை தகராறு, இல்லை நிலத்து தகராறு, ஏதாவது ஒரு தகராறு ஏற்பட்டால், உடனே இந்த கட்சியை பயன்படுத்தி ,அங்கே காவல் துறையில் இவன் பணத்தால், அதிகாரத்தால், தனக்கு சாதகமாக தீர்மானிக்கிறான்.

இப்படி நாட்டில் பல சம்பவங்கள் இந்த அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாமல், இதை வைத்து தங்கள் சுயநலத்திற்கும், சமூகத்திற்கு எதிராகவும், செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய காவல் நிலையங்களில் வரக்கூடிய புகார்களும்,நீதிமன்றங்களிலும் ,இருக்கக்கூடிய வழக்குகளும் 90 சதவீதம் யார்? என்பதை உளவுத்துறை மூலம் ஆய்வு செய்து பாருங்கள்? உண்மை புரியும்.

அதுமட்டுமல்ல ,இந்த பணம் அரசியல் கட்சிகளில் சர்வ சாதாரணமாக புழங்குகிறது. ஒரு லெட்டர் பேட் கட்சி ஆரம்பித்தால் கூட, வருமானத்தை பார்க்கிறார்கள். எங்கெல்லாம் சட்டத்திற்கு புறம்பாக வேலைகள் நடக்கிறது? என்பதை கூர்ந்து கவனித்து, அங்கு போய் நின்று பணத்தை வாங்குகிறார்கள்.

இப்படி தான் ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் ,கூட்டணி கட்சிகளிலும் ,இந்த அவல நிலை தொடர்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மாநிலங்கள் தோறும் சட்ட நடவடிக்கை எடுக்க புதிய அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு தேவை .

அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர்களை காப்பாற்ற தான் எந்த ஒரு அரசியல் கட்சியும், அவர்களை பாதுகாக்கிறது. ஒன்று பாராளுமன்றத்தில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எந்த ஒரு அரசியல் கட்சி நிர்வாகியோ, உறுப்பினரோ ,யாராக இருந்தாலும், தவறு செய்தால், அவர்கள் மீது கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

இது தவிர ,ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் ,ஒவ்வொரு மாதமும் எத்தனை புகார்கள்? காவல் நிலையங்களில் பதியப்படுகிறது? என்பதை உளவுத்துறை மூலம் தேர்தல் ஆணையம் கணக்கெடுக்க வேண்டும். அவ்வாறு அதிகபட்சமாக புகார்கள் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டால் ,அதை சட்டப்படி அந்தக் கட்சிகளை க்ளோஸ் செய்ய வேண்டும் . அதாவது அதை தகுதி நீக்கம் செய்து அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.மேலும்,
இன்று நாட்டில், நல்ல விஷயத்திற்கு கூட்டம் கூடுவதற்கு பதிலாக ,அதிக கெட்ட விஷயங்களுக்கு தான் குரல் கொடுத்துக் கொண்டு ,உத்தமர்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் ,இன்றைய அரசியல் கட்சிகள்.

இதையெல்லாம் தேர்தலாணையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ,அந்த அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கட்சி என்பது ஊரை ஏமாற்றுபவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்க்கும், ரவுடிசம் செய்வதற்கும், குறுக்கு வழியில் பணத்தை பார்ப்பதற்கும், சட்ட மோசடி வழிகளை செய்து தன்னை நியாயமானவன் என்று மக்களை ஏமாற்றுவதற்கும் ,அரசியல் கட்சிகள் தேவையில்லை.

மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, பாடுபட தான் அரசியல் கட்சிகள் தேவை! என்பதை புரிந்து தேர்தல் ஆணையம் செயல்படுமா? -சமூக ஆர்வலர்கள் .