இயற்கை என்ற ஒரு கடவுள் நம்மை வாழ வைக்கும் தெய்வம். அதை பாதுகாக்கவும், மதிக்கவும் தெரியாமல் திமுக ஆட்சி நடத்தியது வீண்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

தமிழ்நாட்டில் 1965 க்கு முன் வாழ்ந்த நம் மக்களும் ,நம் முன்னோர்களும், அரசியல் கட்சி ஆட்சியாளர்களும் ,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள் ,ஆட்சி செய்தார்கள்.

ஆனால், அதற்குப் பிறகு வந்த ஒவ்வொருவருடைய ஆட்சியையும், அவர்கள் எவ்வாறு இயற்கைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாருங்கள் .ஆட்சியாளர்களின் வரலாற்று உண்மைகள் மக்களுக்கு புரிய வரும்.

அதாவது, ஒரு நாடு வளமாக வாழ வேண்டுமென்றால் நீர் அவசியம். அந்த நீரை தேக்கி வைக்க ஏரிகள், குளங்கள், குட்டைகள், பாதுகாப்பது அவசியம். ஆறுகள், மலைகள் ,நீரோடைகள் இது எல்லாவற்றையும் பாதுகாத்து இயற்கையோடு ,இயற்கையாக மக்கள் வாழ்ந்தார்கள்.

அதனால்தான் அவர்கள் இவ்வளவு வெயிலையும் பார்க்கவில்லை. இவ்வளவு மழையும் பார்க்கவில்லை. புயலும் பார்க்கவில்லை. 60 ஆண்டுகள் பார்க்காத வெயில், பார்க்காத மழை, இயற்கை எதனால், இவ்வளவு கோபத்தில் இருக்கிறது?

இயற்கை வளங்களை அழிப்பதால்! இயற்கையின் கோபத்திற்கு இந்த அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் ,தொடர்ந்து செய்து வருகிறார்கள். அரசியல் கட்சி என்பது பொதுநலத்தை விட சுயநலமாகிவிட்டது.

அதனால், இந்த குளங்கள் ,ஏரிகள், ஆறுகள் ,மலைகள், இவை அனைத்துமே இவர்கள் மக்கள் வாழ்வதற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக ,அதை விற்று கோடிக்கணக்கில் வியாபாரமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். மந்திரிகள் முதல் அரசியல் கட்சிக்காரர்கள் வரை ,இந்த வியாபாரம் இயற்கையின் சுற்றுச்சூழலை பாதித்துள்ளது.

மேலும்,இதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரோ நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. வாயிலே சீமான் பேசுவதோடு சரி.தவிர, பத்திரிகையாளர்கள் ,பத்திரிகைகள் கூட இதைப்பற்றி அவர்களுக்கு புரிய வைக்க கூட தகுதி இல்லாமல் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

oplus_8388608

மேலும்,மக்கள் வாழ்வதற்கு தான் இயற்கை வளங்கள் தேவை. இயற்கை வளங்களை அழித்துவிட்டு, மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இந்த அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் அதிமுக, திமுக அழித்ததன் விளைவு இன்ற ஒவ்வொரு நாளும், இயற்கையோடு மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் செய்யும் தவறு, மக்கள் தலையில் தான் விழுகிறது. இதை எப்போது இவர்கள் புரிந்து கொள்வார்கள்?

மேலும்,வெள்ளம் வந்தால் அலறுகிறார்கள். வெயில் அடிக்கும் போது வேதனைப்படுகிறார்கள். புயல் வந்தால் அலறுகிறார்கள். சுனாமி வந்தால், அழுது புலம்புகிறார்கள். இயற்கையை எப்போது அழிக்க நினைத்தார்களோ, இயற்கை மனிதனை அழித்துக் கொண்டிருப்பது, எப்பொழுது ஆட்சியாளர்களும் மக்களும் புரிந்து கொள்வார்கள்? – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *