உண்மையை தெரிந்து கொள்ளாமல், மக்கள் மாற்றங்களை கொண்டு வர முடியாது.அது வாழ்க்கை முதல் அரசியல் வரை ஏமாற்றம் தான் – அதனால் , உண்மை எங்கே…? தேடுங்கள்……?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் இது மக்களுக்கான ஒரு தளம்.

இங்கே அரசியல் மட்டுமல்ல ,ஆன்மீகம் சினிமா, சமூகம் கலாச்சாரம் ,இது எல்லாவற்றையும் தொகுத்து வழங்க கூடிய ஒரே பத்திரிக்கை தளம் மக்கள் அதிகாரம்.

மேலும்,நாட்டில் பத்திரிக்கை துறையின் குறைகளை பற்றி எழுதக்கூடிய பத்திரிக்கை மக்கள் அதிகாரமாக தான் இருக்கும் .வேறு எந்த பத்திரிகையிலும், இந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையாக பத்திரிகை துறையை பற்றி எழுதியிருக்க மாட்டார்கள்.

மேலும்,அரசியலைப் பற்றி எழுதியிருக்க மாட்டார்கள். இது எல்லாம் மக்களிடம் போய் சேர வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக தான் பத்திரிக்கை .இது வியாபார நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல ,மக்களின் முன்னேற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும், உருவாக்கப்பட்ட ஒரு பத்திரிகை.

மேலும், இதில் அரசியல் கட்சியினரையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், இங்கே பாராட்ட அல்லது அவர்கள் பேச்சுக்களை மிகைப் படுத்த அதற்கு இடம் கிடையாது.

தவிர ,இப்போது நடக்கின்ற நிகழ்வுகள், சமூகத்தில் எதனால் ?என்ற கேள்வி எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள், சம்பவங்கள், தொடர்வது ஏன்?

ஒரு சிறு குழந்தையை கற்பழிப்பது! சமந்தா, சம்பந்தம் இல்லாதவர்களை கொலை செய்யப்படுவது, தண்டிக்கப்படுவது, அரசியலில் ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுவது, நீதித்தன்மை குறைந்திருப்பது, பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழக்கூடிய மக்கள், உறவுகள் ,சந்தோஷம் இழந்து இப்போது மனதிற்குள்ளே, புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது சந்தோஷத்தை எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்? மேலும், தகுதி என்பது மக்கள் எல்லாத் துறைகளிலும் அலட்சியப் படுத்துவதன் விளைவு, இன்று அனுபவிக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம். பணத்தால் தகுதியை விலைக்கு வாங்க முடியாது. அது உழைத்தால் மட்டும் தான் பெற முடியும். மேலும்,

இதற்கெல்லாம் காரணம் அரசியலா? சினிமாவா ?அல்லது டிவியா? அல்லது செல்போனா ?இந்த வட்டத்திற்குள் தான், இவர்களின் வாழ்க்கை சின்னா, பின்னாமாக்கிக் கொண்டிருக்கிறது.

மேலும்,19 65 இலிருந்து ஏன்? 90 வரைக்கும் ,சினிமா மக்களுக்காக இருந்தது. 90ஐ தாண்டியதும் , அது மக்களுக்காக இல்லை .அதில் வில்லன்களை ஹீரோவாக ஆக்கிவிட்டார்கள். தவிர,ஜாதி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரே வரியில் சொல்லப் போனால், அங்கே கலைஞர்கள் இல்லை .கலை தெரியாத கூட்டங்கள், கூடிக்கொண்டு, என்ன சொல்வது ?என்று தெரியாமல் பல படங்களை பார்த்து, காப்பி அடித்து, கதையை உருவாக்கி ,அதையும் ஒரு மக்களுக்கு பயனுள்ள செய்திகளை, கருத்துக்களை சொல்லக்கூட தகுதி இல்லாதவர்கள், எல்லாம் சினிமா உலகில் வந்து சினிமாவையும் நாசப்படுத்திக் கொண்டு ,இன்றைய இளைஞர்களையும் தவறான பாதையில், வக்கிர எண்ணங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் எப்படி சென்சார் போர்டு இதற்கு அனுமதி கொடுக்கிறது? இதையெல்லாம் தடை செய்ய வேண்டும். ஒரு புரியாத வயதில், இளம் ரத்தத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு, எது நல்லது? எது கெட்டது ?என்று தெரியாத வயதிலே உணர்ச்சிக்கு அடிமையாகி ,வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இப்படிப்பட்ட செய்திகளை எல்லாம், கருத்துக்களை எல்லாம் ,சினிமாவில் வைத்து சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு படம் கூறட ரசனையுடன், ஒரு பாட்டும் ரசாயுடன், கதையும் ஈர்ப்பு , உயிரோட்டமும் இல்லாமல், அதாவது சினிமா வெறும் டெக்னிக்கல் , மேலும்,இன்றைய ஆர்டிபிஷியல் மற்றும் டிஜிட்டல் உலகமாக அதை மாற்றி இருக்கிறார்கள்.

இது ஊரை ஏமாற்றி வாழ்வது எப்படி? எப்படி சட்டத்திற்கு புறம்பான வழிகளில் ஒருவன் பணக்காரனாக முடியும்? இப்படிப்பட்ட கேரக்டர்களை ஹீரோவாக்கி படம் எடுக்கிறார்கள்.மேலும், பழைய படங்களை எல்லாம் இந்த சினிமா இயக்குனர்களும், கதாசிரியர்களும், அதில் வருகின்ற ஒரு படத்திற்கு கூட இணையாக மாட்டார்கள்.

அது இன்றும்,பல தலைமுறைகளைக் கடந்து , பார்க்க வேண்டும் போல இருக்கிறது .என்றும் ரசிக்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் ,இது படமா? இல்லை சமூகத்தை சீரழிக்கும் எண்ணங்களை உருவாக்குவதற்கு இப்படிப்பட்ட படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் .

இதை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் .மாநில அரசு நீ எந்த படத்தை எடுத்தாலும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அது இருக்கக் கூடாது. மக்கள் மனதில் விஷ விதையை தூவிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால், இந்த சினிமாவை பார்க்கின்ற இளைய தலைமுறைகள், வாழ்க்கை நிச்சயம் பாதிக்கும். அதனால்தான் , குடும்பத்தில் காதல் என்ற பெயரில், படிக்கும்போதே,ஓடிப் போவது, பணக்கார வீட்டுப் பிள்ளைகளை தேடி பார்த்து காதலிப்பது,

மேலும் இதனால் அந்த குடும்பத்தையும் , பெற்றோர்களையும், அவமானப்படுத்துவது, தற்கொலை செய்து கொள்வது ,சமூகத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவது, இது எல்லாம் இன்றைய இளைஞர்களிடையே சினிமாவின் தாக்கங்கள். இதை ஆய்வு செய்து பார்க்கட்டும் உளவுத்துறை !

இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு ஒரு செய்தியை அனுப்பட்டும். சினிமா உலகம் தமிழ்நாட்டில் மக்களையும், இளைஞர்களையும், எவ்வாறு சீரழிக்க பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை மத்திய அரசின் உளவுத்துறையும், இளைய தலைமுறைகளும், புரிந்து கொண்டாலும் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *